No Image
 Sat, May 18, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - ஏமாங்கத நாட்டின் அடுத்த அரசர் யார்?

Apr 21, 2023   Ramya   98    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... ஏமாங்கத நாட்டின் அடுத்த அரசர் யார்?

🌟 நண்பர்கள் எவ்வளவு கூறியும் சீவகன் தன்னுடைய முடிவை மாற்றி கொள்ளவில்லை. இறுதியாக அவனின் முடிவிற்கு நண்பர்களும் ஒத்துழைப்பு தந்தார்கள். பின் நாங்களும் உன்னுடன் துறவறம் மேற்கொள்கின்றோம் என்று கூறினார்கள்.

🌟 அனைவரும் துறவறம் மேற்கொண்டால் அரச பொறுப்புகளை யார் பார்த்து கொள்வது? என்றான் சீவகன்.

🌟 உடனே நந்தட்டன், அடுத்த அரசரை இப்பொழுது நாம் முடிவு செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு வந்து விட்டோம். இனி அவரவர்களின் ராஜ்யத்தில் அடுத்த அரசர்கள் யார்? என்பதை முடிவு செய்வோம் என்றான். மேலும் சீவகனை பார்த்து, அனைவருக்கும் மூத்தவராக இருக்கக்கூடிய நீங்களே முதலில் முடிவு செய்யுங்கள், நமது ராஜ்யத்தின் அரசர் யார்? என்று. பிறகு மற்ற ராஜ்யத்தின் அரசர்களை முடிவு செய்து கொள்ளலாம் என்றான்.


🌟 இந்த முடிவினை சற்றும் எதிர்பார்க்காத சீவகன் ஏன் எல்லோரும் பிடிவாதமாக இருக்கின்றீர்கள்? அனைவரும் என்னுடன் வந்து விட்டால் ராஜ்யத்தின் நிலைமை என்னவாகும்? என்று கேட்டான்.

🌟 அப்பொழுது புத்திசேனன், சீவகா! நீ மட்டும் உன்னுடைய முடிவை மாற்றி கொள்ள மாட்டாய். ஆனால் உடனிருப்பவர்கள் மட்டும் முடிவினை மாற்றி கொள்ள வேண்டுமா! இது எந்த விதத்தில் நியாயம்? என்று கேட்டான்.

🌟 சரி.. சரி.. உங்களை என்னால் வெற்றி கொள்ள முடியுமா! உங்களின் முடிவு இது தானா? இதில் ஏதாவது மாற்றம் நடக்குமா? என்று மீண்டும் கேட்டான் சீவகன்.

🌟 உடனே நந்தட்டன், இதில் எந்தவொரு மாற்றமும் ஏற்படப்போவதில்லை. அடுத்த அரசர் யார்? என்பதை நாம் முடிவு செய்யலாம் என்றான்.

🌟 சீவகன், தனது புதல்வர்களில் ஒருவனான, அரசு பொறுப்புகளை ஏற்க வயதும், திறமையும் உள்ள சச்சந்தனே அடுத்த அரசனாக இருக்கட்டும் என கூறினான். இதற்கு இளவரசரான நந்தட்டனும், குறுநில அரசர்களான சீவகனின் நண்பர்களும் ஒத்துழைப்பு தந்தார்கள்.

🌟 பின் அரச சபையில் இருந்த பணியாளர் ஒருவனை அழைத்து, சச்சந்தனை அரச சபைக்கு அழைத்து வரும்படி கட்டளையிட்டான் சீவகன்.

🌟 பணியாளர் சென்று சச்சந்தனை பார்த்து, அரசர் உங்களை அரச சபைக்கு வருமாறு கட்டளையிட்டிருக்கிறார் என்று கூறினான்.

🌟 இதை கேட்ட சச்சந்தன், திடீரென்று தந்தை ஏன் தன்னை அழைத்திருக்கின்றார்? என்று தெரியாமல் ஆழ்ந்த சிந்தனையோடு அரச சபைக்குள் நுழைந்தான்.

🌟 அரச சபையில் சச்சந்தனை பார்த்த சீவகன், வா மகனே! என்று கூறி, அரச சிம்மாசனத்திற்கு நிகராக இருக்கக்கூடிய அரியணையில் அமரும்படி கூறினான்.


Share this valuable content with your friends