No Image
 Sat, May 18, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - அடுத்த அரசனாக தேர்வுசெய்யப்பட்ட சச்சந்தன்..!!

Apr 21, 2023   Ramya   96    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... அடுத்த அரசனாக தேர்வுசெய்யப்பட்ட சச்சந்தன்..!!

🌟 தந்தையினுடைய இந்த கூற்றை கேட்டதும் ஏற்கனவே குழப்பத்தோடு இருந்த சச்சந்தனுக்கு இன்னும் குழப்பமானது அதிகரிக்க துவங்கியது.

🌟 அதுமட்டுமல்லாமல் தன்னுடைய சித்தப்பாவான நந்தட்டனும், குறுநில அரசர்களான தந்தையினுடைய நண்பர்களும் மற்றும் அமைச்சர்கள் என பலர் அமர்ந்திருக்கும் அவையில் மன்னருக்கு நிகராக இருக்கக்கூடிய அரியணையில் என்னை அமர சொல்கின்றாரே! இதில் ஏதோ இருக்கின்றது என புரிந்து கொண்டு, அங்கு இருப்பவர்கள் அனைவரின் முகத்தையும் பார்த்தான்.


🌟 பின் சீவகன் அரச சபையில் இருந்தவர்களை பார்த்து கொண்டே, எனக்கு பிறகு அரச பொறுப்புகளை ஏற்று கொள்ளும் தகுதி நந்தட்டனுக்கு தான் உள்ளது என்று கூறினான்.

🌟 உடனே நந்தட்டன், நான் சிறு வயதிலிருந்தே உங்களை விட்டு எப்பொழுதும் பிரிந்ததில்லை. இப்பொழுது மட்டும் நான் விலகி விடுவேனா! என்றான்.

🌟 ஆனால் அவ்விடத்திலிருந்த சச்சந்தனுக்கோ ஒன்றும் புரியவில்லை. என்ன நடக்கின்றது? என்று கூட தெரியாமல், ஒருவிதமான குழப்பத்துடனே அமைதியாக நின்று கொண்டிருந்தான்.

🌟 சச்சந்தனின் நிலையை புரிந்து கொண்ட நந்தட்டன் அவனுக்கு ஆதரவாக பேசினான். அதாவது, இங்கு நிகழ்ந்தது எதுவும் புரியாமல் நம் அனைவரையும் சச்சந்தன் கவனித்து கொண்டிருக்கின்றார். அவருக்கு என்ன நிகழ்கின்றது? என்று எடுத்து கூறுங்கள் என்றான்.

🌟 திடீரென்று தன்னுடைய சித்தப்பா! தனக்கு ஏன் இவ்வளவு மரியாதைகள் கொடுக்கின்றார்? என எண்ணி, தந்தையின் வார்த்தைக்காக காத்து கொண்டிருந்தான் சச்சந்தன்.

🌟 அப்பொழுது சீவகன், ஒன்றுமில்லை மகனே! நான் கடந்த முப்பது ஆண்டுகளாக இந்த நாட்டை ஆட்சி செய்து வருகின்றேன். என்னுடைய ஆட்சி காலம் விரைவில் முடிவதற்கான சூழ்நிலைகள் ஏற்பட்டு விட்டது. அதனால் தான் உன்னை இங்கு அழைத்திருக்கின்றேன் என்றான்.

🌟 தந்தையின் கூற்றில் இருக்கக்கூடிய பொருளை புரிந்து கொண்ட சச்சந்தன், தந்தையே! நீங்கள் அப்படியெல்லாம் கூற வேண்டாம்! இன்னும் உங்களுக்கான கடமைகள் நிறைய இருக்கின்றது என்று அழுத்தமாக கூறினான்.

🌟 அதற்கு சீவகன், சச்சந்தா! என்னை முழுவதுமாக கூற விடு. அப்பொழுது தான், நான் எதற்காக இந்த முடிவை எடுத்திருக்கின்றேன் என்று உனக்கு புரியும்.

🌟 நான் முன் ஜென்மத்தில் செய்த தீவினை பலன்கள் மற்றும் இந்த பிறவியில் செய்த தீவினைகளை ஒழிக்கவும் நான் ஆட்சி செய்து கொண்டிருக்கக்கூடிய இந்த நாடும், நாட்டு மக்களும் செழிப்புடன் வாழ்வதற்கும் ஒரேயொரு வழி தான் இருக்கிறது. அது நான் துறவறம் செல்வது தான்.

🌟 இதை கேட்டதும் சச்சந்தன், என்ன கூறுகின்றீர்கள் தந்தையே! நீங்கள் துறவு மேற்கொள்ள போகின்றீர்களா? எங்கள் அனைவரையும் விட்டுவிட்டு செல்வதற்கு உங்களுக்கு எப்படி மனம் வந்தது? என்று கேட்டான். பின் ஒருவிதமான கலக்கத்துடனும், உணர்ச்சியற்ற நிலையிலும் தனது தந்தையையே பார்த்து கொண்டிருந்தான்.

🌟 அப்பொழுது சீவகன், சச்சந்தா! உலகில் தோன்றிய எந்தவொரு உயிராக இருந்தாலும் ஒருநாள் இந்த உலகை விட்டு சென்று தான் ஆக வேண்டும். இது இறைவன் வகுத்த விதியாகும். எப்பொழுதும் நானே அரசனாக இருக்க முடியாது. எனக்கு அடுத்து இந்த அரச பொறுப்புகளை சரிவர செய்யக்கூடிய மற்றொரு அரசரை நியமிக்க வேண்டிய பொறுப்பும், கட்டாயமும் என்னிடத்தில் இருக்கின்றது.

🌟 அதுமட்டுமல்லாமல் நீயும் அரசனாவதற்கு உண்டான அனைத்து தகுதிகளையும் பெற்று விட்டாய். உனக்கு முடிசூட்டி விட்டால் என்னுடைய இல்லற வாழ்க்கைக்கான கடமைகள் அனைத்தும் நிறைவுபெறும். மேலும் இந்த நாட்டிற்கு செய்ய வேண்டிய கடமையையும் செய்து முடித்தேன் என்ற திருப்தியும் எனக்கு ஏற்படும் என்றான்.


Share this valuable content with your friends