No Image
 Fri, May 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வைகாசி மாதத்தில் வரும் வரூதினி ஏகாதசிக்கு அப்படி என்ன சிறப்பு?

May 12, 2023   Ramya   584    ஆன்மிகம் 


வரூதினி ஏகாதசி...!!


✨ கடும் கோடை வெப்பம் நிலவும் ஒரு மாதமாக வைகாசி மாதம் இருக்கிறது. மற்ற எல்லா மாதங்களில் வரும் ஏகாதசி தினங்களைப் போலவே, வைகாசி மாதத்தில் வருகின்ற ஏகாதசி தினமும் பல சிறப்புகளைக் கொண்டதாக இருக்கின்றன.

✨ அப்படி இந்த வைகாசி மாதத்தில் வருகின்ற, தேய்பிறை ஏகாதசிக்கு வரூதினி ஏகாதசி என்று பெயர். இந்த வரூதினி ஏகாதசி வைகாசி 1ஆம் தேதி (15-05-2023) வருகிறது.

✨ எனவே, இந்த தினத்தின் மகிமையை குறித்தும், அந்த தினத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன? என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.


வழிபடும் முறை:

🙏 எந்த ஏகாதசியில் விரதம் இருக்க முடியவில்லை என்றாலும் இந்த வரூதினி ஏகாதசி தினத்தில் விரதம் இருந்து வழிபடுவது மிகவும் சிறப்பானது.

🙏 வரூதினி ஏகாதசி தினத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு வீட்டின் பூஜையறையில் இருக்கும் பெருமாள் படத்திற்கு மஞ்சள் மற்றும் குங்குமம் பொட்டிட்டு, தாமரை பூ சமர்ப்பித்து, துளசி இலைகள் மற்றும் தயிர் நைவேத்தியம் வைத்து, தூபங்கள் கொளுத்தி, தீபமேற்றி பெருமாளின் ஸ்தோத்திரங்களை துதித்து வழிபட வேண்டும்.

🙏 மாலையில் அருகிலுள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி, தீபமேற்றி வழிபட வேண்டும்.


🙏 பின்பு வீட்டுக்கு திரும்பியதும் பூஜையறையில் பெருமாளுக்கு நைவேத்தியம் வைக்கப்பட்ட துளசி இலைகள் மற்றும் தயிரை குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சிறிதளவு பிரசாதமாக தந்து, விரதம் மேற்கொண்டவர்களும் சிறிது சாப்பிட்டு பெருமாளுக்கான ஏகாதசி விரதத்தை முடிக்க வேண்டும்.

🙏 தற்காலத்தில் பலருக்கும் வேலை நிமிர்த்தம் மற்றும் உடல்நிலை காரணமாக உணவு ஏதும் உண்ணாமல் இருப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. எனவே அப்படிப்பட்டவர்கள் உப்பு சேர்க்காத எளிமையான உணவுகள் மற்றும் பால், பழங்கள் போன்றவற்றை சாப்பிட்டு இந்த ஏகாதசி விரதத்தை மேற்கொள்ளலாம்.

🙏 வரூதினி ஏகாதசியில் விரதம் இருப்பது கிரகண காலத்தில் குருஷேத்திரத்தில் ஸ்வர்ண தானம் செய்வதினால் கிடைக்கும் புண்ணியத்திற்கு இணையானது ஆகும்.

பலன்கள்:

🌺 விரதங்களில் வரூதினி ஏகாதசி விரதம் தனித்துவம் வாய்ந்தது. பொதுவாக ஏகாதசி விரதம் இருந்தால் பாவங்கள் தீரும் என்பது ஐதீகம். வரூதினி ஏகாதசி ஆனது பாவங்களைத் தீர்ப்பதோடு சகல செல்வ வளங்களையும் அருளும்.

🌺 இவ்விரதத்தை முறையாக கடைபிடிக்க இன்னல்கள் தீர்ந்து நன்மைகள் பெருகும்.

🌺 உடல் மற்றும் மனநலம் சிறக்கும்.

🌺 குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் அமையும்.

🌺 தம்பதிகளுக்கிடையே அன்பு மற்றும் ஒற்றுமை மேலோங்கும்.

🌺 தொழில், வியாபாரங்களில் லாபம் அதிகரிக்கும்.


Share this valuable content with your friends