No Image
 Sat, May 18, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




விக்கிரமாதித்தன் கதை... நாகமனிதனின் தவமும்... கண்ணனின் புண்ணியமும்... மெய் சிலிர்க்க வைக்கும் கதை...!!

Mar 01, 2023   Ramya   143    விக்ரமாதித்தன் கதைகள் 


பாம்பு கடித்தும் ஏன் கண்ணன் இறக்கவில்லை?


விக்ரமாதித்தனிடம் வேதாளம் ஒரு கதை சொல்ல துவங்கியது.

இரத்தினபுரி என்கிற ஊரில் ஒரு முனிவரின் சாபத்தால் சில நேரம் பாம்பாகவும், சில நேரம் மனிதனாகவும் இருக்கும் ஒரு இளைஞன் அவ்வூரின் காட்டை ஒட்டிய பகுதியில் வாழ்ந்து வந்தான்.

அவன் ஒரு இளம் பெண்ணை மிகவும் விரும்பினான். அவனின் சாபத்தைப் பற்றி அறிந்த அந்த பெண், அவனை திருமணம் செய்துகொள்ள மறுத்து விட்டாள். இதனால் கவலையடைந்த அவன் ஒரு துறவியிடம் சென்று தன் நிலையைக் கூறி வருந்தினான்.

அதற்கு அந்த துறவி நீ நாகமனிதனாக இருப்பதால் உனக்குள் நாகரத்தினம் இருக்கும், அதை தனியாக எடுத்து வைத்துவிட்டு தினமும் இரவு நேரத்தில் தவமிருந்தால் நீ மீண்டும் முழுமையான மனிதனாக மாற வாய்ப்பு உள்ளது என கூறினார். அதன்படியே அந்த நாகமனிதனும் செய்து வந்தான்.

ரங்கன் என்ற இளைஞன், காட்டு விலங்குகள் துரத்தியதால் இந்த நாகமனிதன் வசித்த புற்றிற்கு அருகிலுள்ள மரத்தில் ஏறிகொண்டான்.

இரவு முழுவதும் அந்த மரத்திலேயே இருந்த அவன் அருகிலுள்ள புற்றிலிருந்து ஒரு நாகம் நாகரத்தினத்தை வெளியே கக்கிவிட்டு, மனிதனாக மாறி தியானத்தில் ஈடுபடுவதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தான்.

பொழுது விடியும் போது அந்த நாகமனிதன் மீண்டும் நாகமாக மாறி, தனது ரத்தினத்தை விழுங்கிக்கொண்டு மீண்டும் புற்றிற்குள் சென்று மறைந்ததை ரங்கன் கண்டான்.

மறுநாள் இதை பற்றி தனது நண்பன் கண்ணனிடம் கூறி நம்மிடம் நாகரத்தினம் இருந்தால் பாம்பு தீண்டி இறக்கும் நிலையில் இருப்பவர்களையும் உயிர் பிழைக்க வைக்க முடியும். எனவே இன்றிரவு அந்த நாகமனிதனிடமிருந்து நாம் நாகரத்தினத்தை எடுத்துக்கொள்வோம் என்று கூறினான்.

இருவரும் அந்த நாகமனிதன் இருக்கும் புற்றிற்கு அருகில் ஒளிந்துக்கொண்டு காத்திருந்தனர்.

வழக்கம் போல் அந்த நாகமனிதன் தனது நாகரத்தினத்தை வெளியே வைத்துவிட்டு தியானத்தில் ஆழ்ந்த போது ரங்கனின் நண்பனான கண்ணன், அந்த ரத்தினத்தை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான்.

தியானம் களைந்து பார்த்த நாகமனிதன், தனது நாகரத்தினம் திருடப்பட்டதால் தான் முழுமையான மனிதனாக மாறும் தனது லட்சியம் தடைபட்டதை எண்ணி வருந்தினான்.

இதற்கிடையே அந்த ரத்தினத்தை எடுத்துக்கொண்டு சென்ற கண்ணன் பக்கத்து ஊரில் பாம்பு கடியால் பாதிக்கப்பட்டவர்களை, அந்த ரத்தினத்தைக்கொண்டு குணப்படுத்தி மிகுந்த அளவில் செல்வம் ஈட்டினான்.

ஒரு நாள் கண்ணன் பக்கத்து ஊருக்கு காட்டை ஒட்டிய வழியில் வந்து கொண்டிருந்த போது கண்ணனிடம் தனது நாகரத்தினம் இருப்பதை உணர்ந்த பாம்பின் உருவிலிருந்த அந்த நாகமனிதன் அவனை தீண்டினான். ஆனால் கண்ணன் இறக்கவில்லை அதே நேரத்தில் அந்த நாகமனிதனும் சாப விமோசனம் பெற்று மனித உருவம் கொண்டான் என்று கதையை நிறுத்தியது வேதாளம்.

விக்ரமாதித்தா தனது நாகரத்தினத்தை திருடியது கண்ணன் தான் என்று அறிந்து அவனை அந்த நாகமனிதன் தீண்டியும் கண்ணன் இறக்கவில்லை. அந்த நாகமனிதனும் மீண்டும் முழுமையான மனிதன் ஆனான். இது எப்படி சாத்தியம்? என்றது வேதாளம்.

அதற்கு விக்ரமாதித்தன் கண்ணன் நாகரத்தினத்தை எடுத்துக்கொண்டு சென்று பிறரின் உயிரைக் காப்பாற்றும் புனித காரியத்தையே செய்தான். எனவே மிகுந்த புண்ணியம் ஈட்டிய கண்ணன் நாகம் தீண்டியும் இறக்கவில்லை. கண்ணனின் புனித உடலை தீண்டிய, அந்த நாகமனிதனும் சாபவிமோசனம் பெற்று முழு மனிதனானான் என பதில் கூறினான். இந்த பதிலைக் கேட்டவுடன் அந்த வேதாளம் பறந்து சென்று முருங்கை மரத்தின் மீது ஏறிக்கொண்டது.


Share this valuable content with your friends


Tags

பூச நட்சத்திரம் ருத்ராட்சம் அணிந்து இறைச்சி சாப்பிடுவது சரியா? தவறா? விநாயகர் வழிபாடு நாய் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? பிரதோஷத்தின் வகைகள் !! சந்தனம் மற்றும் குங்குமம் வைப்பது போல் கனவு வந்தால் என்ன பலன்? உலக மலேரியா தினம் வளர்பிறை ஏகாதசி சூரியனுடன்... இந்த மூன்று கிரகங்கள் இணைந்தால்... அதிர்ஷ்ட யோகம் அடிக்கும்...!! இரண்டில் செவ்வாய் இருந்தால் தோஷமா? கடகத்தில் சனி இருந்தால் கௌரி நல்ல நேரத்தில் கர்ப்பிணிப் பெண்ணிற்கு சீமந்தம் நடத்தலாமா? மே 20 தினசரி ராசிபலன்கள் (11.04.2020) jothisd diwali markali special thiruvathirai pandiya mannan 5ல் சனி இருந்தால் என்ன பலன்? உயரமான மரங்களை வீட்டில் எந்த திசையில் வைக்கலாம்?