No Image
 Sat, May 18, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




விக்கிரமாதித்தன் கதை... மன்னனா... மெய்காப்பாளனா.. யாருடைய நட்பு சிறந்ததது?

Mar 01, 2023   Ramya   118    விக்ரமாதித்தன் கதைகள் 


அபூர்வ நெல்லிக்கனியும், அழகிய இளவரசியும்...!!

வேதாளம் விக்ரமாதித்தனிடம் கதை சொல்லத் தொடங்கியது.

ஆதிகேசன் என்னும் மன்னன் பிரம்மபுரம் என்னும் நாட்டை ஆண்டு வந்தான். மார்த்தாண்டன் என்னும் மெய்க்காப்பாளனும், மன்னனும் சிறந்த நண்பர்களாக இருந்தனர்.

ஒருசமயம் மார்த்தாண்டன் மற்றும் தனது படைகளுடன் மன்னன் காட்டிற்கு வேட்டையாட சென்றான். நெடுந்தொலைவு சென்றதும், படைகள் சோர்வடைந்து ஓய்வெடுக்க தொடங்கினர்.

ஆனால் மன்னனும், மார்த்தாண்டனும் தனியாக நெடுந்தொலைவு காட்டிற்குள் சென்றனர். நீண்டநேர பயணத்திற்கு பிறகு இருவரும் மிகவும் சோர்ந்து போயினர்.

மார்த்தாண்டன் தான் கேள்விப்பட்ட ஆயுளைக்கூட்டும் அபூர்வ நெல்லிக்கனியை தேடி வருவதாக கூறி புறப்பட்டு சென்றான். பின்னர் பல்வேறு இடையூறுகளை கடந்து, ஒருவழியாக நெல்லிக்கனியை அடைந்தான்.

ஆயுளைக்கூட்டும் அபூர்வ நெல்லிக்கனியை மார்த்தாண்டன், தான் உண்ணாமல், மன்னனுக்கு அளித்தான். மன்னனும் அதை உண்டான். பின்னர் மன்னனும், மார்த்தாண்டனும் நாட்டிற்கு திரும்பி சென்றனர்.

நாட்கள் ஓடின... மன்னன், மார்த்தாண்டனை அழைத்து, சிங்கள நாட்டு இளவரசியை கவர்ந்து வா! எனக் கூறினான். மார்த்தாண்டனும் பெரும்படையுடன் கப்பலில் சிங்கள நாட்டை நோக்கி படையெடுத்து சென்றான்.

ஆனால் கடலில் பெரும் சூறாவளி அடிக்க, கப்பல் கடலில் மூழ்கியது. ஒரு பெரிய மீன் மார்த்தாண்டனை விழுங்கியது. ஆனால் அவன் மீனுடைய வயிற்றை கிழித்து வெளியில் வந்தான். ஒரு வழியாக சிங்கள நாட்டை அடைந்து, ஒரு காளி கோவிலில் இளவரசியை கண்டான்.

மார்த்தாண்டன் இளவரசியின் பேரழகில் மயங்கினான். பின்னர் இளவரசியிடம் சென்று, நான் உன்னை பார்த்த அடுத்த நொடியே, உன்மீது காதல் கொண்டேன். என்னை மணந்து கொள்வாயா? என கேட்டான்.

அதற்கு இளவரசி, ஒரு கிணற்றை காட்டி, என்னை காதலிப்பது உண்மை எனில், இந்த கிணற்றில் மூழ்கி எழ வேண்டும் என்றாள். அடுத்த நொடியே, கிணற்றில் மார்த்தாண்டன் மூழ்கினான்.

மார்த்தாண்டன் மூழ்கி எழுந்து பார்த்தபோது, அவனுடைய நாட்டில் இருந்தான். அதிசயத்தில் வாயடைத்து போனான். இவ்வளவு நாட்களாக இறந்து போனான் என்று எண்ணிய மார்த்தாண்டன் உயிருடன் வருவதைக் கண்டு மன்னன் மகிழ்ச்சி அடைந்தான்.

பின்னர் மார்த்தாண்டன், நடந்த அனைத்தையும் மன்னனிடம் கூறினான். அமைதியாக கேட்ட மன்னன் சரி வா! இருவரும் சிங்கள தேசத்திற்கு செல்லலாம் என்று புறப்பட்டு சென்றனர்.

அங்குள்ள காளி கோவிலில் இளவரசியை கண்டனர். இளவரசி மன்னனை கண்டதும், அவன் மீது காதல் கொண்டாள். பின்னர் மன்னனிடம், தனது விருப்பத்தை தெரிவிக்க, மன்னன் என்னை உண்மையில் நீ காதலிப்பதாக இருந்தால், நான் சொல்வதை செய்வாயா? எனக்கேட்டான். அதற்கு இளவரசியும் சம்மதிக்க, மார்த்தாண்டனை காட்டி, அவன் என்னை காட்டிலும் சிறந்தவன். உன்மீது அதீத காதல் கொண்டுள்ளான். அவனை நீ மணந்து கொள்ள வேண்டும் என்றான்.

இதைக்கேட்ட இளவரசி நான் நேசிப்பவரை விட, என்னை நேசிப்பவர், என்னை நன்றாக பார்த்துக்கொள்வார் என எண்ணி இதற்கு ஒப்புக்கொண்டாள். பின்னர், இருவருக்கும் மன்னன் மணமுடித்து வைத்தான் எனக்கூறி கதையை முடித்தது வேதாளம்.

வேதாளம், விக்ரமாதித்தனை பார்த்து, இந்த கதையில் மன்னன் மார்த்தாண்டனுக்கு செய்த உதவி சிறந்ததா? அல்லது மார்த்தாண்டன் மன்னனுக்கு செய்த உதவி சிறந்ததா? எனக் கேட்டது.

அதற்கு விக்ரமாதித்தன் இதில் மன்னன் செய்த உதவியே சிறந்தது என்றான்.

அதற்கு விக்ரமாதித்தன் மார்த்தாண்டன் அளித்த அந்த மாயக்கனியானது, மன்னன் மீதும், அவன் கொண்ட நட்பின் மீதும் உள்ள கடமை ஆகும்.ஆனால், மன்னன் செய்தது அவ்வாறில்லை. மன்னன் மீது ஆசைக்கொண்ட ஒரு இளவரசியை, மார்த்தாண்டனுக்கு திருமணம் செய்து வைத்தது அவன் நட்பின் மீதும், மக்கள் மீதும் கொண்ட அன்பின் வெளிப்பாடு ஆகும்.


Share this valuable content with your friends


Tags

teching to someone Donor சிலிண்டர் வெடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? கழிவுகளும் கனவில் வருகிறது. இதற்கு என்ன பலன்? சர்வதேச அகதிகள் தினம் லட்சுமி கடாட்சம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? ராகுவும் இணைந்திருந்தால் என்ன பலன்? ஆயில்யம் நட்சத்திரத்தின் குணநலன்கள் எப்படி இருக்கும்? ஜோஹன்னஸ் ஜென்சன் பராசரர் விசயன் ஒருவரின் பெயரை மட்டும் வைத்து ராசி மற்றும் நட்சத்திரத்தை அறிய முடியுமா? ராசி உடையவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா? மறுபடியும் தாலி கட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? narasimmi கிருஷ்ணர் தலையில் மயில் இறகு கிரீடம் ஏன்? weeekly rasipalan ஒருவருக்கு தண்ணீர் குடம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? பூசாரி திருநீறு கொடுப்பது போலவும் கனவு கண்டால் என்ன பலன்? பணப்பிரச்சனை தீர வாஸ்துப்படி என்ன தீர்வு?