No Image
 Sun, Jun 02, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - ராசமாபுர அருகன் கோவிலில் நடைபெற்ற நிகழ்வுகள்....!!

Mar 01, 2023   Ramya   101    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... ராசமாபுர அருகன் கோவிலில் நடைபெற்ற நிகழ்வுகள்....!!

🌟 இராசமாபுரத்தில் உள்ள அருகன் கோவிலில் பூஜைகளும், வேள்விகளும் நடைபெற்று கொண்டிருந்தன. கோவிலின் வாசலில் அந்தணர்கள் மந்திரங்களை கூறிய வண்ணமாக இருந்தனர். இறைவனுக்கு படைக்க வந்தவர்களும், மந்திரம் கூறுகின்ற அந்தணர்களும் உண்ணும் வகையில் உணவு குவிக்கப்பட்டு இருந்தன.

🌟 கோவிலில் அடிக்கப்பட்ட மேளதாளத்தினாலும், அலைமோதிய கூட்டத்தினாலும் பயந்து போன ஒரு நாயானது எங்கே போய் ஒதுங்குவது என்று தெரியாமல் அலைந்து கொண்டே இருந்தது.

🌟 நெடும் நேரமாக உணவின்றி அலைந்து திரிந்து கொண்டிருந்த அந்த நாய்க்கு, குவிக்கப்பட்டு இருந்த உணவை பார்த்ததும் இன்று நமக்கு சரியான உணவு தான் என்று எண்ணி யாரும் கவனிக்காத சமயத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த அந்த உணவினை உண்ண துவங்கியது.


🌟 மந்திரங்கள் அனைத்தையும் உச்சரித்து, தீபாராதனை காட்டும் சமயத்தில் நாய் உணவினை உண்டு கொண்டு இருப்பதை கண்டனர். அப்பொழுது அங்கிருந்த அந்தணர்கள் இறைவனுக்கு வைத்திருந்த உணவினை உண்ட நாயை அடியுங்கள் என்று கூறினர்.

🌟 உடனே அங்கிருந்த அனைவரும் அந்த நாயை அடிப்பதற்காக கையில் கிடைத்த பொருட்களை எடுத்து துரத்த துவங்கினார்கள். நான்கு புறமும் மனிதர்கள் சூழ்ந்து அடிக்க முற்பட்ட போது அந்த நாய் இனி இவர்களிடமிருந்து பிழைப்பது கடினம் தான் என்று எண்ணியதோ என்னவோ அவர்களிடம் அடிப்பட்டு ஊளையிட்டு கொண்டு இருந்தது.

🌟 அப்பொழுது தான் அந்த நாயை வளர்த்து கொண்டிருந்த குடிகாரன் உள்ளே நுழைந்தான். மரணத்தின் பிடியில் சிக்கி கொண்டிருக்கும் அந்த நாயை கண்டதும், யாரடா நான் வளர்த்த நாயை இப்படி அடித்தது? என்று அங்கிருந்த அனைவரையும் கேட்க தொடங்கினான்.

🌟 அவனிடமிருந்து வந்த குடித்த கள்ளின் வீச்சம் தாங்க முடியாமல் அங்கிருந்தவர்கள் விலகி சென்றனர். ஆனால் அவனோ, நான் பாட்டுக்கு கேட்டு கொண்டிருக்கின்றேன் நீங்கள் பாட்டுக்கு போய் கொண்டே இருக்கின்றீர்கள். யாரடா என்னுடைய நாயை இந்த நிலைக்கு கொண்டு வந்தது என்று திரும்ப திரும்ப கேட்டான்.

🌟 அப்பொழுது கூட்டத்தில் இருந்த ஒருவன், உன்னுடைய நாய் இறைவனுக்கு படைத்திருந்த உணவினை உண்டது. அதனால் தான் நாங்கள் அதனை அடித்தோம் என்று கூறினான்.

🌟 ஓ! இறைவனுக்கு வைத்திருந்த உணவை உண்டால் அது யாராக இருந்தாலும் அடிப்பீர்களோ? என்று அந்த குடிகாரன் வினவினான்.

🌟 ஆமாம், இறைவனுக்கு படைக்கப்பட்டிருந்த உணவை யார் உண்டாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான் என்று அங்கிருந்த அனைவரும் கூறினார்கள்.

🌟 இதை கேட்ட குடிகாரனோ, அப்படியென்றால் யாகங்கள் அனைத்தும் முடிந்த பின்பு இறைவனுக்கு படைக்கப்பட்ட உணவினை உண்ணக்கூடியவர்கள் நீங்கள் தானே.. உங்களையும் நான் அடிக்க தானே வேண்டும் என்று கூறி கையில் கிடைத்த வேலினை எடுத்து தன்னுடைய நாயை அடித்தவர்களை தாக்க துவங்கினான்.

🌟 குடிகாரன் கையில் சிக்கி கொண்டால் அனைத்தும் பாழாகி விடுமே என்று அங்கிருந்த அனைவரும் ஆளுக்கு ஒரு பக்கமாக தன் உயிரை காப்பாற்றி கொண்டால் போதும் என ஓட துவங்கினார்கள். குடிகாரனும் விடாமல் அவர்களை துரத்தி கொண்டே போனான்.

🌟 ஒரு நிலையில் ஓட முடியாமல் நின்ற அனைவரையும், குடிகாரன் தன்னுடைய கோபத்தினால் வரையறை இல்லாமல் தாக்கினான். அதை கண்டவர்கள் அந்த நாயை உயிருடனாவது விட்டிருக்கலாமோ என்று எண்ணினார்கள்.

🌟 கூட்டம் தன் பக்கம் தானே இருக்கின்றது என்ற ஆணவத்தில் சிறு உயிரை பொருட்டாக மதிக்காமல் தாக்கி அதனை கொன்றவர்களை வலியவனான எளியவன், வீரம் கொண்டு தாக்கும் பொழுது, அவர்களுக்கு துணையாக நின்ற கூட்டம் எங்கே? என்று தெரியாத அளவுக்கு தனித்தனியாக பிரிந்து ஓடியது.


🌟 எவ்வளவு குடித்திருந்தாலும் வேகம் குறையாமலும், தாக்குதல் குறையாமலும், அவர்களை துரத்தி கொண்டே இருந்தான் அந்த குடிகாரன்.

🌟 திக்கு முக்கு தெரியாமல் ஓடியவர்கள் இறுதியாக சீவகன் வீட்டு தெருவின் வழியாக ஓடினர். அப்பொழுது சீவகன் தன்னுடைய நண்பர்களோடு வெளியில் நின்று கொண்டிருக்க, சீவகனை கண்ட மக்கள் கூட்டம் சீவகா எங்களை காப்பாற்று இந்த குடிகாரனிடம் இருந்து என்று கூறிய வண்ணமாக அவனிடத்தில் தஞ்சம் புகுந்தனர்.


Share this valuable content with your friends