No Image
 Sat, May 18, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - சச்சந்தனுக்கு முடிசூட்டு விழா..!!

Apr 22, 2023   Ramya   97    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... சச்சந்தனுக்கு முடிசூட்டு விழா...!!

🌟 தனது தந்தையிடம் என்ன பேசுவது? என்று தெரியாமலும், பேசுவதற்கு வார்த்தைகள் கூட இல்லாமலும் தந்தையையே பார்த்து கொண்டிருந்தான் சச்சந்தன்.

🌟 உடனே சீவகன், ஏன் என்னை இன்னும் குழப்பத்துடனே பார்த்து கொண்டிருக்கின்றாய்? பிறக்கும் பொழுதே அனைவரும் எழுந்து நடக்க கற்று கொள்வதில்லை. காலப்போக்கில் கிடைக்கும் அனுபவம் தான், அவர்களை தனியாக எழுந்து நடக்க சூழ்நிலைகளை அமைத்து கொடுக்கின்றது. அதுபோல ஒரு சூழ்நிலை தான் உன்னை அரசனாக மாற்றியுள்ளது.

🌟 அதுமட்டுமல்லாமல் உன்னை தனியாக இந்த இடத்தில் விட்டு செல்லவில்லை. உன்னுடைய சகோதரனான சுதஞ்சணன் உன்னுடன் இளவரசனாக இருப்பான். மேலும் என் நண்பர்களின் மகன்கள் அனைவரும் உனக்கு பக்கபலமாக இருந்து நீ ஆட்சி செய்வதற்கு தகுந்த உதவியும் செய்வார்கள். எதற்கும் நீ கவலை கொள்ள வேண்டாம்! என்று கூறினான் சீவகன்.

🌟இதை கேட்ட சச்சந்தன், ஆமாம் தந்தையே நீங்கள் எடுத்திருக்கும் இந்த முடிவு அன்னைகளுக்கு தெரியுமா? என்றான்.

🌟சீவகன் சிரித்துக்கொண்டே இங்கு நிகழ்ந்த நிகழ்வுகள் எதுவும் அவர்களுக்கு இன்னமும் தெரியாது என்றான்.

🌟இதைக் கேட்ட சச்சந்தன் மற்றும் அவையில் இருந்த சீவகனின் நண்பர்கள் அனைவரும் ஒருவிதமான கலவரம் கலந்த முகத்துடன் சீவகன் சிரிப்பதை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இனி அவர்கள் எப்படி இந்த முடிவினை எடுத்துக்கொள்ள போகின்றார்கள் என்று தெரியவில்லையே! இனி என்னென்ன நிகழப் போகிறதோ! என்று அனைவரும் ஒருவிதமான கலக்கத்துடனே அமர்ந்திருந்தார்கள்.

🌟ஓரிரு தினங்களுக்கு பின்பு சச்சந்தனுக்கு முடிசூட்டும் விழாவானது மிகுந்த கோலாகலத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டது.

🌟நாட்டு மக்கள் அனைவருக்கும் முடிசூட்டும் நிகழ்வைப் பற்றிய அனைத்து செய்திகளும் தெரிவிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் நட்பு நாடுகளில் இருந்து அனைத்து அரசர்களும் ஏமாங்கத நாட்டை நோக்கி வருகை தந்த வண்ணமாக இருந்தார்கள்.

🌟சீவகனுடைய இந்த அறிவிப்பு மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை. மாறாக ஒருவிதமான கவலையையும், இனம்புரியாத ஒரு பிரிவையும் மட்டுமே ஏற்படுத்தியது.

🌟சீவகனுடைய ஆட்சியில் அனைத்து வளங்களையும், நலன்களையும் பெற்று மகிழ்வோடு வாழ்ந்தவர்கள், அவனை விட்டு பிரிவதை, பெரிய துன்பத்தை அடைந்தது போல உணர்ந்தனர்.

🌟மக்களிடத்தில் எந்தவிதமான மகிழ்ச்சி கொண்டாட்டங்களும் வெளிப்படவில்லை. ஆயினும் அரசு விழாவாக இருப்பதால் அரசருடைய மனம் காயப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே மனதளவில் வலிகள் இருந்தாலும் முகத்தளவில் மகிழ்ச்சியுடன் அனைவரும் இருந்தனர்.

🌟சச்சந்தனுக்கு முடிசூட்டும் விழாவும் வந்தது. சீவகன் தன்னுடைய புதல்வனுக்கு மக்கள் முன்னிலையிலும், படைகள் முன்னிலையிலும் முடிசூட்டி விட்டு அனைவரிடத்திலும் மகிழ்ச்சி பொங்க உரையாடிவிட்டு துறவறம் மேற்கொள்வதற்கான ஆயத்த பணிகளையும் மேற்கொண்டான்.


Share this valuable content with your friends