No Image
 Sat, May 18, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




விக்கிரமாதித்தன் கதை... மூவரில் சிறந்தவனை கண்டுபிடித்த துறவி...!!

Feb 28, 2023   Ramya   127    விக்ரமாதித்தன் கதைகள் 


மூவரில் சிறந்தவனை கண்டுபிடித்த துறவி...!!


ஒரு கிராமத்தில் ராமன், பீமன், சோமன் என்று மூன்று இளைஞர்கள் இருந்தனர். இதில் ராமன் சிறந்த கல்வியாளன், பீமன் ஒரு மல்யுத்த வீரன், சோமன் தண்ணீருக்குள் மூழ்கி வித்தை காட்டும் தந்திரம் தெரிந்தவன். ஒரு சமயம் அக்கிராமத்தில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டதால் இம்மூவரும் பிழைப்பைத் தேடி ஸ்ரீநகர் சென்றனர்.

இதே சமயம் ஸ்ரீநகரில் ஈஸ்வரன் என்ற ஜமீன்தாரின் வீட்டிற்கு ஒரு துறவி வருகை புரிந்தார். அவரை உபசரித்தார் ஈஸ்வரன். இதனால் மனமகிழ்ந்த அந்தத் துறவி ஈஸ்வரன் தம்பதியினரைப் பார்த்து உங்கள் மருமகள் கூடிய விரைவிலேயே ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுப்பாள் என்று ஆசிர்வதித்தார். இதைக் கேட்டு அதிர்ந்த ஈஸ்வரன் தம்பதியினர் தங்களுக்கு குழந்தைகளே இல்லை என்றும், பிறகு எப்படி தங்கள் மருமகள் பேரனைப் பெற்றெடுப்பாள்? என்றும் கேட்டனர்.

நீங்கள் இருவரும் யாராவது ஒரு இளைஞனை உங்கள் மகனாகத் தத்தெடுத்து, அவனுக்குத் திருமணம் செய்து வைத்தால் நிச்சயமாக அவன் மூலம் உங்களுக்கு ஒரு ஆண் வாரிசு கிடைக்கும் என்று கூறினார். அந்த நேரத்தில் ராமன், பீமன், சோமன் ஆகிய மூவரும் அந்த ஜமீன்தார் வீட்டின் கதவைத் தட்டினார்கள்.

அப்போது அங்கே இருந்த துறவியிடம் மூவரும் தாங்கள் யாரென்றும், எதற்காக ஸ்ரீநகருக்கு வந்தோம் என்பதற்கான காரணத்தையும் துறவி மற்றும் ஈஸ்வரனிடம் கூறினார்கள். இதைக் கேட்டு சற்று யோசித்த துறவி அவர்களுக்கு ஒரு யோசனையைக் கூறினார்.

ஜமீன்தாரின் மனைவிக்கு குழந்தை பிறக்க தசரத மலையிலிருக்கும் வஷிஷ்ட மரத்திலிருந்து கிடைக்கும் பழத்தை மூன்று மாதகாலத்திற்குள் யார் கொண்டு வருகிறார்களோ, அவர்களை தன் புத்திரனாக ஜமீன்தார் ஏற்றுக்கொள்வார் என்று கூறினார்.

இதைக் கேட்ட ராமன் தென்திசையில் பயணித்தான். அப்போது ஒரு வியாபாரி தனக்கு அம்மலைக்கான வழி தெரியும் என்றும், ஆனால் ராமன் தன்னிடம் சில வாரங்கள் பணிபுரிய வேண்டும் என்றும், ராமன் ஒரு அறிவாளி என்று ஏற்றுக் கொண்டால் மட்டுமே அம்மலைக்கான வழியை கூறுவதாகக் கூறினான். ஆறு வார காலம் வேலை செய்த பின் அவ்வியாபாரியிடம் வழியைக் கேட்டான் ராமன். தன்னுடைய தகுதிக்கு கீழான வேலைகளை செய்த ராமனைத் தன்னால் அறிவாளியாக ஏற்றுக்கொள்ள முடியாதென்று கூறி அம்மலைக்கான வழியை சொல்லாமல் மறுத்துவிட்டான். அம்மலைக்கான வழியைக் கண்டுபிடிக்க முடியாததால் ராமன் திரும்பினான்.

மேற்கு திசை நோக்கி சென்ற பீமன், ஒரு ஊரின் மைதானத்தில், தன் மல்யுத்த வித்தையைக் காட்டி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினான். அப்போது அக்கூட்டத்திலிருந்த ஒருவன் தான் இப்பகுதியில் உள்ள அஞ்சனை மலையை ஏறிபார்க்க விரும்புவதாகவும், பீமன் தனக்கு துணையாக வந்தால் தான் அம்மலையில் ஏற முடியும் என்றும், அங்கே பீமன் தேடும் தசரத மலையும் இருக்க வாய்ப்புள்ளது எனவும் கூறினான். ஆனால், எவ்வளவு முயன்றும் பீமனால் குறிப்பிட்ட காலத்திற்குள் மலையை கண்டுபிடிக்க முடியாததால் பீமனும் திரும்பினான்.

கிழக்கு திசையில் பயணித்த சோமன், அருகில் இருக்கும் ஊருக்கு சென்றான். அங்கிருந்த ஒருவன் தான் மரகதத் தீவிற்கு செல்ல விரும்புவதாகவும், சோமன் தனக்குத் துணையாக வந்தால் ஒரு வேளை அவன் தேடும் தசரத மலை அங்கிருக்கும் வாய்ப்புள்ளதாகவும் கூறினான். ஆனால் சோமனாலும் தன் காலக்கெடு முடிவதற்குள் தசரத மலையை கண்டுபிடிக்க முடியாததால் திரும்பினான்.

மூவரும் அம்மலையைக் கண்டுபிடிக்க மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தையும் துறவியிடம் கூறினர். இவர்கள் கூறியதை கேட்ட துறவி ராமனை தத்துப் பிள்ளையாக ஏற்றுக்கொள்ளுமாறு ஜமீன்தாரிடம் கூறினார்.

கதையின் மையக்கருத்து:

மூவரில் மிகவும் கடின முயற்சி செய்தவன் ராமன் மட்டுமே. கடினமாக முயற்சி செய்தால் சிறந்த பலனை அடையலாம் என்பதே இதன் கருத்து.


Share this valuable content with your friends


Tags

சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது போல் கனவு கண்டால் koththanar பிரதோஷ விரத பலன்கள் கிளியை கனவில் கண்டால் என்ன பலன்? கிருத்திகை நட்சத்திரம் பாம்பு தாலி எடுத்து வருவது போல் கனவு கண்டால் என்ன பலன் daily rasipalan in pdf format sugarcane குழந்தைகளை கனவில் கண்டால் குலதெய்வ கோவிலில் மணக்கோலத்தில் ஒரு பெண்ணை காண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஐப்பசி மாதத்தில் ஆண் குழந்தை பிறக்கலாமா? பொருத்தம் உத்தியோக உயர்வு ரக்ஷா பந்தனின் சிறப்புகள் அடுத்தடுத்த ராசிக்காரர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா? வெள்ளி கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? FACTORY 9ல் செவ்வாய் இருந்தால் வெற்றிலை கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? கரோலஸ் லின்னேயஸ்