சீவக சிந்தாமணி... ராசமாபுரத்தில் இளவேனிற்காலம்...!!
🌟 ராசமாபுரத்தில் இளவேனிற்காலம் வந்தது. பசுமை நிறைந்த மரங்களில் உள்ள இலைகள் அனைத்தும் முழுமையாக மஞ்சள் கலந்த நிறத்தில் காணப்பட்டன. ஊரில் இருந்த ஆடவர்களும், பெண்களும் குடும்பம் குடும்பமாக அருகில் இருந்த நீர் அருவியை நாடி சென்றனர்.
🌟 ஆர்ப்பரித்து ஓடும் நீரில் மக்கள் அனைவரும் மனதில் இருக்கக்கூடிய கவலைகளை மறந்து மிகுந்த மகிழ்ச்சியுடன் விளையாடி கொண்டிருந்தனர். ஆண்களோ ஆற்றை கடக்கும் போட்டியில் ஈடுபட்டு தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி கொண்டிருந்தனர்.
🌟 சுற்று வட்டாரங்களில் உள்ள மக்களை மகிழ்வுபடுத்தும் விதத்தில் நடனக்காரர்கள் இசைத்த படியும், நடனமாடிய படியும் இருந்தார்கள். எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சியான ஒலியும், சத்தமும் நிறைந்ததாகவே இருந்தது.
🌟 அருவியில் குளித்த மக்கள் தாங்கள் கொண்டு வந்த உணவு பொருட்களை பகிர்ந்து உண்டு கொண்டிருந்தனர். வீடுகளில் ஒரே மாதிரியான உணவுகளை உண்டு உணவின் மீது ஈடுபாடு குறைந்தவர்களுக்கு, பல்வேறு ருசிகளுடன் கூடிய பலவிதமான உணவுகளும் கிடைத்தன.
🌟 பெண்கள் அனைவரும் தங்களை சித்தரித்து கொண்டு காண்பவரை கவரும் விதமாக நின்று கொண்டு மகிழ்ச்சியாக இருந்தனர்.
🌟 ராசமாபுரத்தில் வணிகக் குடியில் பிறந்த வனிதையர் குணமாலையும், சுரமஞ்சரியும் ஆவர். அவர்கள் இருவரும் இரட்டை பிள்ளைகளாக பிறக்கவில்லை. எனினும் அவர்களை காணக்கூடியவர்கள் இவர்களை இரட்டையர்கள் என்று சொல்லும் அளவில் இணைந்தே எந்தவொரு செயலானாலும், காரியமானாலும் செயல்படுவார்கள். அதுமட்டுமல்லாது இவர்கள் இருவரும் பெருங்குடி வணிகரின் மகள்கள் ஆவர்.
🌟 இருவரும் நெருங்கிய தோழிகளாக இருந்தாலும் உரையாடும் பொழுது எதிரில் இருக்கக்கூடியவர்கள் தோற்கும் வகையில் முரண் பட்டு பேசக்கூடியவர்கள். எதிலும் பந்தயம் வைத்து துரிதமாக பேசும் வல்லமை கொண்டவர்கள்.
🌟 எழில் மிகுந்த இந்த இளம் கன்னிகைகளை முத்துப்பல்லக்கில் பிறர் சுமந்து சென்றனர். மற்றவர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப பாடிக்கொண்டு மாட்டுவண்டிகளிலும், குதிரை பூட்டிய தேர்களிலும் சென்று அருவி இருக்கும் இடத்தை அடைந்தனர்.
🌟 இளம் காளை பருவத்து இளைஞர்கள் தம் தோழர்களுடன் எழில் நிறைந்த இயற்கை காட்சியோடு மனதை கொள்ளை அடித்து செல்லக்கூடிய இனிய மகளிரை எந்தவிதமான தடைகளும், எதிர்ப்புகளும் இல்லாமல் கண்டு மகிழும் வகையில் கிடைத்த ஒரு பெரும் வாய்ப்பாகவே இந்த இளவேனிற்காலத்தை கருதினார்கள்.
🌟 சீனியை சுற்றி எறும்பு திரிவது போல இளம் பசுக்களுக்கு அருகில் நல்லடக்கத்துடன் காளைகளும் சுற்றி கொண்டிருந்தன.
🌟 அருவியில் அமைந்துள்ள சோலையில் உடை மாற்றுவதற்கு என்று மறைப்புகள் ஏற்படுத்தும் விதமாக சிலர் திரைகளை அமைத்துக் கொண்டிருந்தனர்.
🌟 எப்பொழுது தான் இதை செய்து முடிப்பீர்கள்? இன்னும் எவ்வளவு நேரம் தான் இதை அமைக்க எடுத்து கொள்வீர்கள்? என்று சுரமஞ்சரி வினவி கொண்டிருந்தாள்.
🌟 அட! என்ன அவசரம்? நிதானமாக அருவியில் குளிக்க போகலாம் என்று குணமாலை கூறிக்கொண்டே சுத்தம் நிறைந்த இடத்தில் அவள் அமர்ந்து கொண்டாள். பின்பு குணமாலை தான் கொண்டுவந்திருந்த சுண்ணத்தை எடுத்துக் காட்டி அதன் பொன் வண்ணத்தை சிறப்பித்து பேசினாள். இது என்னுடைய கைப்பட தயாரித்த சுண்ணம் என்று அதன் வண்ணத்தை பாராட்டி மிகவும் உயர்வாக பேசிக்கொண்டு இருந்தாள்.
🌟 குணமாலை கூறியதை கேட்டுக்கொண்டு இருந்த சுரமஞ்சரி நானும் தான் சுண்ணம் கொண்டு வந்துள்ளேன் என்று கூறினாள். அதுவும் நல்ல நிலையில் உள்ளது. உமக்கு வேண்டும் என்றால் நீயும் எடுத்து கொள் என்று கூறினாள்.
🌟 சுரமஞ்சரி சொல்லியதை கேட்ட குணமாலையோ, வேண்டாம் சுரமஞ்சரி நான் தயாரித்த சுண்ணம் மிகவும் அற்புதமானது. சில முக்கியமான பொருட்களை கொண்டு செய்திருக்கின்றேன் என்று கூறினாள்.
சுக்கிரன் இருந்தால் என்ன பலன்? மண்பாண்டங்களை கனவில் கண்டால் என்ன பலன்? பிடிக்காத நபருடன் சண்டை போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? jothidar pathilgal நீர்நிலைகள் akal vilakku விட்டில் வளர்த்த கிளி இறந்துவிட்டால் நல்லதா? கெட்டதா? daily rasipalan - 05.11.2018 அம்ச கட்டம் என்றால் என்ன? சனிபகவானுடன் மற்ற கிரகங்கள் இணைந்தால் என்ன பலன்? black snake பச்சை குத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? imoporants days Tuesday rasipalan - 07.08.2018 poruthangal parasuran சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கலாமா? சந்திரன் இருந்தால் வாக்குப்பலிதம் உண்டாகுமா? பனி மூட்டத்தை கனவில் கண்டால் என்ன பலன்? கியூரி