No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - காந்தருவதத்தையை மணந்த சீவகன்..!!

Feb 24, 2023   Ramya   119    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... காந்தருவதத்தையை மணந்த சீவகன்..!!

🌟 போட்டி நடைபெற்ற இசை மண்டபத்தில் அவர்களின் திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு மணமண்டபமாக மாற்றப்பட்டது. எதிராக இருந்த மன்னர்களின் கூட்டம் உயிர்பிழைத்தால் போதும் என்ற எண்ணத்தில் ஓட்டம் பிடித்தது.


🌟 நகரத்தில் இருந்த அனைவரும் ஒன்றிணைந்து சீவகன் மற்றும் காந்தருவதத்தையின் மணவிழாவினை நடத்தி தந்தனர். சீவகனின் பெற்றோர்களான கந்துக்கடனும், சுநந்தையும் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். ஊர் முழுவதும் இவர்களின் திருமணம் பற்றிய பேசுக்களே முக்கிய பொருளாக இருந்தது.

🌟 திருமண சடங்கள் அனைத்தும் செய்து முடித்த பின்பு, அவர்களுக்கான அறையில் அவர்கள் இருவர் மட்டும் தனித்து இணைந்து இருப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் யாவும் செய்யப்பட்டன.

🌟 அவர்களின் நேரம் வந்ததும் அவர்களும் அந்த அறையில் அனுப்பப்பட்டனர். காந்தருவதத்தையை மணந்த சீவகன் அவளுடைய காந்த சக்தி நிறைந்த பார்வையால் இழுக்கப்பட்டான். அவள் இடத்தில் இருக்கக்கூடிய நிலை இல்லாத புற அழகில் மயங்குவதைவிட, எப்பொழுதும் நிலையாக இருக்கக்கூடிய அவளின் அறிவு ஆற்றலில் தன்னை பறி கொடுத்தான். அவள் யாழ் ஆனாள், அதை மீட்டும் வில்லாக அவன் செயல்பட்டான்.

🌟 சீவகன் காந்தருவதத்தையை பார்த்து, உன்னுடைய தாயையும், தந்தையையும் பற்றி நான் அறிந்ததில்லை. நீயும் இதற்கு முன் யார் என்று எனக்கு தெரியாது. வானத்திலிருந்துபொழியும் நீர் வையகத்தில் விழும் போது செம்மண்ணோடு அது கலக்கிறது அதற்கு பிறகு அதை பிரித்து காண முடியாது. அது போல நம் நெஞ்சமும் கலந்து விட்டன என்று பாராட்டினான். காதல் என்பது தொடக்கத்தில் உடல் உறவால் ஏற்படுகிறது எனினும், அது உள்ளத்தின் உணர்வால் ஒன்றுபடுகிறது என்று கூறி சீவகனும், காந்தருவதத்தையும் இல்லற இனிமையை நுகர்ந்தனர்.

🌟 சீதத்தனும், தன்னிடத்தில் ஒப்படைக்கப்பட்ட காந்தருவதத்தையின் திருமண பணியானது நன்முறையில் நிறைவேறியது என்று எண்ணி, நீண்ட நாட்கள் கழித்து தன்னுடைய துணைவியுடன் நிம்மதியாக உறக்கம் கொண்டான்.

🌟 திருமணமான சில நாட்கள் கழித்து சீதத்தனுக்கு ஓலை ஒன்று வந்தது. அந்த ஓலையின் மீது, இது சீவகனுக்கு உரியதாகும் என்று எழுதி இருந்தது.

🌟 சீதத்தன் அந்த ஓலையை சீவகனிடம் கொடுத்தான். சீவகனும் அந்த ஓலையை எடுத்து படித்துப் பார்த்தான்.


🌟 அதில் அன்பும், பண்பும், வீரமும் நிறைந்த எங்களுடைய மாப்பிள்ளையான சீவகன் அவர்களுக்கு உங்களுடைய மாமனாராகிய கழலுவேகன் எழுதி கொள்ளும் மடல் ஆகும். திருமணம் நடைபெறும் சமயத்தில் அவ்விடத்தில் இல்லாதது எனக்கும், என் துணைவியாருக்கும் மிகுந்த ஏமாற்றமாக இருக்கின்றது. இருந்தாலும் அதை ஏற்று கொள்ளத்தான் வேண்டும். ராசமாபுரத்தில் நிகழ்ந்த போட்டியில் அரச வேந்தர்கள் பலரையும் தோற்கடித்து, அவர்களின் எதிர்ப்புகளையும் வெற்றி கொண்டு என்னுடைய மகளை மனைவியாக ஏற்று கொண்டீர்கள்.

🌟 அதைவிட எனக்கு பெரு மகிழ்ச்சி என்னவென்றால்? போரில் தோல்வியுற்ற அனைவருக்கும் தேவையான மருத்துவ உதவிகளையும், அவர்கள் குடும்பத்திற்கு தேவையான உதவிகளையும் செய்ததை எண்ணி என் மனம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தது.

🌟 எனக்கு மகன் இல்லாத ஒன்றை நீங்கள் தீர்த்து வைத்து விட்டீர்கள். இறைவனிடத்தில் நான் இன்றும், எப்பொழுதும் வேண்டி கொள்ளக்கூடிய ஒரு விஷயம் நீங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக என் மகளுடன் இல்லற வாழ்க்கையை நடத்த வேண்டும் என்று அந்த ஓலையில் கழலுவேகன் எழுதியிருந்தார்.

🌟 சீவகனுக்கு வந்த அதே ஓலையில் சீதத்தனுக்காகவும் கழலுவேகன் எழுதியிருந்தார். அதாவது என்னுடைய மகளை தன் மகளாக நினைத்து, தன் மகளுக்கு எவ்விதம் திருமணம் செய்ய வேண்டும் என்பதை செயல் வடிவில் சீதத்தன் காண்பித்தார். பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமணத்தை பற்றி உங்கள் ஊரில் மட்டுமல்லாது, எங்களுடைய ராஜ்யத்திலும் அதை பற்றிய பேச்சுக்கள் இன்றும் ஓய்ந்தபாடில்லை.

🌟 திருமணத்திற்கு வர இயலாதவர்கள் அவர்களுடைய அன்பை வெளிப்படுத்தும் விதமாக திருமண தம்பதிகளுக்கு பரிசுகளையும், பொருட்களையும் அனுப்பி வைத்திருக்கின்றார்கள். அதையும் உங்களிடத்தில் அனுப்பி வைத்திருக்கின்றேன். சீதத்தன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளையும் இவ்விடத்தில் தெரிவித்து கொள்கின்றேன்.

🌟 நீங்கள் இருவரும் நீண்ட காலம் ஒருவருக்கொருவர் துணையாகவும், இனி இருக்கக்கூடிய எதிரிகளை வெற்றி கொண்டு, வெற்றி வாகையை சூடவும் என்னுடைய ஆதரவும், ஒத்துழைப்பும் எப்பொழுதும் உங்களுக்கு இருக்கும். வாழ்க மணமக்கள்.. பல்லாண்டு வாழ்க.. நீடூழி வாழ்க.. என்று அந்த மடலில் எழுதியிருந்த அனைத்தையும் சீவகன் படித்தான்.

🌟 பின்பு சீதத்தத்தனிடம் அவனுடைய மாமனாரான கழலுவேகன் எழுதியிருந்த தகவல்கள் அனைத்தையும் தெரிவித்தான் சீவகன்.


Share this valuable content with your friends