No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




விக்கிரமாதித்தன் கதை...வாலிபனை கொன்ற பாவம் யாரை சேரும்? வேதாளத்தின் கேள்விக்கு விக்ரமாதித்தனின் பதில்...!!

Feb 24, 2023   Ramya   124    விக்ரமாதித்தன் கதைகள் 


விக்ரமாதித்தனிடம் வேதாளம் கதை சொல்லத் தொடங்கியது.


👽 மாடப்புரம் என்னும் அழகிய ஊரில் ஒரு பெரும் வணிகன் இருந்தான். அவனுக்கு அழகான ஒரு மகன் இருந்தான்.

👽 அவனுக்கு திருமணம் செய்து வைக்க எண்ணிய வணிகன் பல இடங்களில் பெண் தேடி, அழகே வடிவான ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்தான்.

👽 அவளது அழகை கண்டு மயங்காதவர் யாருமில்லை. உண்மையை சொல்ல வேண்டும் என்றால், தேவலோக பெண்களை காட்டிலும் பேரழகு கொண்டவள். திருமணமான பிறகு இருவரும் ஒருவர் மீது ஒருவர் அதீத அன்பு வைத்திருந்தனர்.

👽 இவ்வாறு இருக்க, ஒரு சமயம் இருவரும் தங்களுடைய வீட்டு மாடியில் நிலவொளியை ரசித்துக் கொண்டிருந்தபடி, அங்கேயே உறங்கிப்போயினர்.

👽 அந்த நேரம் வானில் பறந்து சென்று கொண்டிருந்த அரக்கன் ஒருவன் அவளது அழகை கண்டு மயங்கிப்போனான்.

👽 அவளை அடைய விரும்பிய அந்த அரக்கன், தூங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில் அந்த பெண்ணை தூக்கிக்கொண்டு சென்று விட்டான்.

👽 இதை அறியாத அவளது கணவனோ, காலையில் மனைவி தன்னருகே இல்லாததைக்கண்டு அதிர்ச்சியுற்றான்.

👽 பின்னர் வீட்டில் உள்ள அனைத்து இடங்களிலும் தேட, அவள் கிடைக்கவில்லை.

👽 இதனால் மனம் நொந்து போனவன், ஊர் ஊராக அவளை தேடத் தொடங்கினான். அவ்வாறு தேடிக்கொண்டிருக்க பசியின் காரணமாக, ஒருவரது வீட்டில் உணவு கேட்டான்.

👽 அவர்கள் உணவை இலையில் வைத்து கொடுக்க, அதை அவன் போகும் வழியில் சாப்பிடுவதாக கூறி, அந்த உணவை கட்டிக்கொண்டு நடந்து சென்றான்.

👽 நீண்ட நெடுநேரமாக அவளை தேடி கொண்டிருந்தவனால், ஒருகட்டத்தில் பசியை அடக்க முடியாமல், அருகில் இருந்த மரத்தின் அடியில் உட்கார்ந்து உணவை பிரித்தான்.

👽 அவனது கெட்ட நேரம், அந்த மரத்தில் இருந்த கழுகு, ஒரு நல்லபாம்பை கொத்திக்கொண்டு இருக்க, பாம்பின் விஷமானது உணவில் விழுந்தது.

👽 இதையறியாமல் அந்த உணவை உண்ட அவன் இறந்து போனான் எனக்கூறி கதையை முடித்தது வேதாளம்.

💁 விக்ரமாதித்தா! இக்கதையில் அந்த வாலிபனை கொன்ற பாவம் யாரை சேரும்? எனக்கேட்டது.

💁 விக்ரமாதித்தன், ஆழ்ந்து யோசித்து பதில் கூறத் தொடங்கினான். அந்த வாலிபனின் நிலை உண்மையில் கவலைக்குரியது தான். ஆனால், அவன் இறந்ததால் வரும் பாவமானது யாரையும் சேராது.

💁 காரணம், யார் மீதும் குற்றமும் இல்லை, குற்றமும் சொல்ல இயலாது என்றான்.

💁 விக்ரமாதித்தன் சொன்ன சரியான பதிலைக்கேட்டு, கட்டுகளில் இருந்து விடுபட்டு சென்று மயானத்தை அடைந்து, முருங்கை மரத்தில் தலைகீழாக தொங்க தொடங்கியது.


Share this valuable content with your friends