No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




விக்கிரமாதித்தன் கதை... அழகிய பெண்ணும் மன்னனும்...!!

Feb 24, 2023   Ramya   125    விக்ரமாதித்தன் கதைகள் 


வேதாளம், விக்ரமாதித்தனிடம் கதை சொல்லத் தொடங்கியது.


👻 மீனாட்சிபுறம் என்ற ஊரை சுந்தரன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். நீதி தவறாமல் ஆட்சி புரிந்து வந்தான்.

👻 அவனது நாட்டில் ஒரு பெரிய வணிக வியாபாரி ஒருவன் இருந்தான். அவனுக்கு மீனாட்சி என்று ஒரு அழகான பெண்ணும் இருந்தாள். மீனாட்சியை பார்த்த மன்னன், அவளை மணந்து கொள்ள விரும்பினான்.

👻 இதனால் அவளது ஜாதகத்தை வாங்கி வந்து ஜோதிடர்கள் மூலமாக பொருத்தம் பார்த்தான். ஜாதகத்தை பார்த்த ஜோதிடர்கள், மன்னா! உங்களுக்கும், மீனாட்சிக்கும் ஜாதகப்பொருத்தம் சரியாக இல்லை.

👻 அவளை நீங்கள் மணந்துக்கொண்டால் உங்களுக்கு பல பிரச்சனைகள் வரும் என்றனர். இதனால் மன்னன் மீனாட்சியை, ஒரு அதிகாரிக்கு திருமணம் செய்து வைத்தான்.

👻 அந்த அதிகாரியும், மீனாட்சியும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இதைக்கண்ட மன்னன், மீனாட்சியை திருமணம் செய்யாமல் போனதை எண்ணி வருந்தினான்.

👻 இதை அறிந்த மீனாட்சியின் கணவன், மன்னனது மனக்குறையை போக்க வேண்டும் என எண்ணினான்.

👻 அதனால் மீனாட்சியிடம் சென்று, மன்னனின் நிலையைக்கூறி, நீ மன்னனது விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் எனக்கூறினான்.

👻 இதைக்கேட்ட மீனாட்சி அதிர்ந்து போனாள். கணவனின் பேச்சை மீற முடியாமல், என்ன செய்வது? என அறியாமல் திகைத்தாள்.

👻 பின்னர்! மறுநாள், மன்னனை பார்க்க மிகவும் எளிமையான உடைகளை அணிந்து கொண்டு அரண்மனைக்கு சென்றாள்.


👻 சற்றும் எதிர்பார்க்காத சமயத்தில், மீனாட்சியை அரண்மனையில் கண்ட மன்னன் அதிர்ச்சி அடைந்தான்.

👻 பின்னர், தான் நினைத்தது தவறு என அறிந்து கொண்ட மன்னன், மீனாட்சியிடம் மன்னிப்புக்கோரி பரிசுகள் கொடுத்து வழியனுப்பி வைத்தான்.

👻 வீடு திரும்பிய மீனாட்சி நடந்ததை கணவனிடம் கூறினாள். சில நாட்களில் மன்னன் தூங்கிக்கொண்டு இருக்கும் பொழுதே, அவனது உயிர் பிரிந்தது.

👻 மீனாட்சியின் கணவன், தன் மனைவியை அடைய முடியவில்லை என்ற வருத்தத்தில் தான் மன்னன் இறந்தான் என வருந்தினான். அந்த வருத்தத்தில் அவனும் இறந்துபோனான் என வேதாளம் கதையை கூறி முடித்தது.

💁 விக்ரமாதித்தா! இக்கதையில் வருபவர்களில் உண்மையில் போற்றுதலுக்குரியவர் யார்? எனக்கேட்டது.

💁 அதற்கு விக்ரமாதித்தன், மன்னன் மீனாட்சியை விரும்பியதும், அவளை திருமணம் புரிந்து இருந்தால் மகிழ்ச்சியுடன் வாழ்ந்திருக்கலாம் என எண்ணியதும் உண்மை தான்.

💁 ஆனால், மீனாட்சியை எளிய உடையில் கண்டதும், தான் எண்ணியது தவறு என்பதை உணர்ந்து, அவளை போற்றி வழியனுப்பி வைத்தான். ஆகையால், மன்னன் தான் போற்றுதலுக்குரியவன், சிறந்தவன் என்றான்.

💁 விக்ரமாதித்தன் சொன்ன சரியான பதிலைக் கேட்ட வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் தலைகீழாக தொங்கியது.


Share this valuable content with your friends


Tags

test 27.02.2021 Rasipalan in PDF Format!! வீடு தீப்பிடித்து எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கோவிலுக்கு சென்றவுடன் செய்ய வேண்டியவைகள் என்ன? செய்யக்கூடாதவைகள் என்ன? 22.11.2018 Rasipalan in PDF Format !! 17.02.2021 Rasipalan in PDF Format!! 11ல் குரு 13ஆம் தேதியில் பிறந்தவர்களின் குணநலன்கள் பழங்களை கனவில் கண்டால் என்ன பலன்? சுற்றுலா சென்று வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ராகுகேது பெயர்ச்சி பலன்கள் கிளிகளை பிடித்து வைத்து வளர்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? தேவேந்திரன் பிரம்ம தேவரை காணுதல் இறந்த என் தந்தையை திட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? சபரிமலைக்கு தென்னம்பிள்ளையை எடுத்துச் செல்வது ஏன்? suvarbanu 9 பொருத்தங்கள் இருந்தால் திருமணம் செய்யலாமா? மகிழ்ச்சியை ஏற்படுத்தும் தினமும் பாம்பு கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஜேம்ஸ் கேமரூன்