No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - சீவகனை ஒழிக்க கட்டியங்காரன் தீட்டிய திட்டம்...!!

Feb 23, 2023   Ramya   142    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... சீவகனை ஒழிக்க கட்டியங்காரன் தீட்டிய திட்டம்...!!

🌟 சீவகன் யாழிசை போட்டியில் வெற்றி அடைந்தது மன்னர்களுக்கு மட்டும் கோபத்தை ஏற்படுத்தவில்லை. கட்டியங்காரனுக்கும் கோபத்தை உண்டாக்கியது. குளுமையை ஏற்படுத்தும் நிலவின் ஒளி கூட கட்டியங்காரனுக்கு மிகுந்த வெப்பத்தினை ஏற்படுத்தியது. எங்கு வந்தாலும்? எவ்விடத்தில் இருந்தாலும்? என்ன போட்டி நடந்தாலும்? வந்து விடுகின்றான். எந்தவொரு அழகான பெண்ணையும் விட்டு வைப்பதில்லை. எனக்கு சொந்தமான அனங்கமாலையை கூட என்னிடத்தில் இருந்து இவன் பிரித்து விட்டான். இவனை இப்படியே விடக்கூடாது. இவனை எப்படியாவது அழித்தே தீர வேண்டும் என்று மனதில் எண்ணி கொண்டு அதற்கு என்ன செய்யலாம்? என்று யோசித்துக் கொண்டு இருந்தான்.

🌟 சீவகனை அழிக்க நீண்ட நேர யோசனைக்கு பிறகு கட்டியங்காரனுக்கு கிடைத்த ஒரு துருப்புச்சீட்டு தான் கோபத்தில் இருக்கக்கூடிய அரசர்களின் மகன்கள். அவர்களுடைய கோபத்தை தனக்காக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று திட்டம் தீட்டினான் கட்டியங்காரன்.

🌟 அரசகுமாரர்கள் அனைவரையும் சீவகனுக்கு எதிராக செயல்படும் விதத்தில் அவர்களுடைய எண்ணங்களை மாற்ற துவங்கினான்.

🌟 அரச வேந்தர்கள் இருக்கக்கூடிய குடிலுக்கு சென்ற கட்டியங்காரன், இந்த போட்டியானது எந்தவொரு விதிமுறைகளுக்கும் உட்படாமல், தர்ம நெறிகள் இன்றி, நியாயமற்ற முறையில் செயல்படுகின்றது. பாட்டு பாடுகின்றவனுக்கு தான் பெண் உரிமை என்றால் பாட்டு பாட தெரிந்த அனைவரும் அரச குமாரிகளை அடைவதில் ஆர்வம் காட்டுவார்களே. ஒரு நாட்டை ஆளக்கூடிய மன்னனுடைய மகள் எந்தவிதமான வீரமும், போர் தகுதியும் இல்லாத பாட்டு பாட தெரியும் என்ற ஒருவனுக்கு சொந்தமாவதை உங்களால் எப்படி ஏற்றுக்கொள்ள முடிகின்றது.

🌟 இது மன்னர்களுடைய மரபுகளுக்கு எதிராக இருக்கின்றது. சாதாரண வணிகனின் மகன் மன்னர்களுக்கு ஒரு அறைகூவல் விடுவது போல எனக்கு தெரிகின்றது என்றும்,


🌟 சுயம்வரம் என்றால் வீரம் அல்லது காதல் கலந்திருக்க வேண்டும். இந்த இரண்டும் இல்லாமல் ஏதோ தனக்கு தெரிந்த சொற்களை கொண்டு பாடல்களை பாடி, இசைகளை இயற்றுகிறான் என்பதற்காக அவள் அவனுக்கு மாலை இடுவது என்பது தவறாக இருக்கின்றது என்றும் கூறினான்.

🌟 கட்டியங்காரனின் ஒவ்வொரு பேச்சுக்களும் கோபத்தில் இருக்கக்கூடிய அரசர்களுக்கு மென்மேலும் கோபத்தை அதிகப்படுத்தியது.

🌟 அதிலிருந்த ஒரு அரச குமாரனோ முதலில் சீவகனை வென்று, அவனை கொன்று விட வேண்டும். அதன் பின் நம்மில் யார் வலியவரோ அவர்கள் காந்தருவத்தையை திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறினான். இந்த முடிவிற்கு மற்ற அனைத்து அரசர்களும் ஒருவிதமான தயக்கத்தோடு சிந்தித்த வண்ணமாக இருந்தார்கள்.

🌟 அரசர்களுடைய முடிவு மகிழ்ச்சியாக இருந்தாலும் அவர்களுடைய சிந்தனை என்ன? என்பது கட்டியங்காரனுக்கு பெரும் சந்தேகமாக இருந்தது.

🌟 இனியும் இவர்களை சிந்திக்க விட்டால் ஏதேனும் வழி மாறிவிடுவார்களோ என்று நினைத்த கட்டியங்காரன், ஒரு நாட்டை ஆளக்கூடிய வேந்தன் என்பவன் வலிமை கொண்டவனாக இருக்க வேண்டும். வலிமை ஒன்றே அனைத்தையும் வெற்றி கொள்ள கூடியதாகும். இதுவே வாழ்வியல் நியதி கூட. வேலை தெரிந்த தொழிலாளியை ஒரு முதலாளி வலிமையினால் அடக்கி ஆள்வது போல, எளியோரை வலியோர்கள் வழி நடத்தி செல்வது தான் உலக நியதியும் கூட. முதலில் சிந்திப்பதை குறைத்து விட்டு செயலில் இறங்குங்கள் என்று உரக்க கூறினான்.


Share this valuable content with your friends


Tags

வார ராசிபலன் (01.02.2021 - 07.02.2021) PDF வடிவில் !! பழைய சிவன் கோவிலில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? Aani தேங்காய் rasipalan pdf format 21.06.2019 பால் பெர்க் கலிங்க நாட்டு மன்னன் Clerk ஆவணி மாத அமாவாசையன்று புது வீடு குடிப்போகலாமா? அழுவது வீட்டை நமது வசதிக்காக மாற்றி அமைக்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்..!! அரிவாட்டாய நாயனார் கரிநாளில் வீடு குடிப்போகலாமா? வளர்பிறையின் சிறப்பு செவ்வாய் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? jothider pathilal நான் என்னுடைய காதலியை அடிப்பது போலவும் மூலம் நட்சத்திர உடைய ஆணை திருமணம் செய்து கொள்ளலாமா? இந்த வீட்டில் சந்திரன் இருந்தால்... லாபம் கிடைக்கும்...!!