No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - அரசர்களோடு போரிட்ட சீவகன்..!!

Feb 23, 2023   Ramya   121    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... அரசர்களோடு போரிட்ட சீவகன்..!!

🌟 நம்முடைய எதிரியான சீவகன் மிக அற்பமான எதிரியும் கூட. அவன் ஒரு தனி ஆள். அவனுக்கென்று உறவினர்களோ, நண்பர்களோ யாரும் இல்லை. அப்படியே அவர்கள் இருந்தாலும் அவர்கள் எல்லாம் வணிகத்தில் அவனோடு தொடர்பு கொண்டவர்களாக தான் இருப்பார்கள்.

🌟 அவர்களுக்கு சண்டை என்றாலே பயம். சிவப்பு மையை கண்டால் கூட அஞ்சு நடுங்க கூடியவர்கள். அவர்களை கண்டு நீங்கள் எந்த தயக்கமும் கொள்ள தேவையில்லை.

🌟 யாருக்கும் பயன் இல்லாதவர்கள் வாழ்வது எவருக்கும் பயன் இல்லை. யாழை எடுத்து வாசிக்க தெரிந்தவனுக்கு வில்லெடுத்து எதிர்க்க தெரியாது. புறப்படுங்கள் எதிரியை அழித்தொழியுங்கள் என்று அவர்களுடைய கோபத்தை தனக்காக மாற்றிக் கொண்டான் கட்டியங்காரன்.

🌟 கட்டியங்காரனுடைய நயவஞ்சகமான பேச்சுக்களால் மனதில் ஆசைகள் அதிகரிக்க துவங்கியது அரசகுமாரர்களுக்கு. எங்கே ஆசை அதிகரிக்கின்றதோ அங்கே துன்பமும் அதிகரிக்க துவங்கும் என்பது விதி அல்லவா. அரசகுமாரர்கள் அனைவரும் அவரவர்களுடைய வாளை எடுத்துக்கொண்டு சீவகனை எதிர்க்க துணிந்தார்கள்.


🌟 அரசர்கள் சீவகனை எதிர்க்க வந்து கொண்டு இருப்பதை பதுமுகன் அறிந்து கொண்டு அதற்கு தகுந்த ஏற்பாடுகளையும் மேற்கொண்டான்.

🌟 மறைமுகமாக இருந்த சீவகனின் தம்பிகளும், அவன் தோழர்களும் இணைந்து சீவகனை எதிர்க்க வருகின்ற அரசர்களிடம் சீவகனுடைய போர் திறமைகளை எடுத்து கூறினார்கள். இருப்பினும் அவர்கள் எதற்கும் தலை சாய்க்கவில்லை மாறாக அவனை எதிர்க்கவே துணிந்தார்கள்.

🌟 மன்னர்களே! நீங்கள் அனைவரும் சுய சிந்தனையோடு சீவகனை எதிர்க்க வரவில்லை. உங்களிடத்தில் இருக்கக்கூடிய ஆசைகளை கட்டியங்காரன் தூண்டிவிட்டு அதன் மூலம் சீவகனை எதிர்க்க நீங்கள் வந்திருக்கின்றீர்கள். ஒருவேளை நீங்கள் சீவகனை எதிர்த்து வெற்றி பெற்றாலும் அவன் உங்களுக்கு பேதமையை உருவாக்கி உங்களுக்குள்ளேயே சண்டையும் ஏற்படுத்தி விடுவான்.

🌟 ஆகையால் கட்டியங்காரனின் கூற்றுகளுக்கு மதிப்பளித்து செயல்படாமல் சுயமாக சிந்தித்து செயல்படுங்கள் என்று சீவகனின் நண்பர்கள் கூறினார்கள்.

🌟 பதுமுகன் எவ்வளவு கூறியும், அரசர்கள் சீவகனை எதிர்க்க முன்னேறி செல்வது எள்ளளவும் குறையவே இல்லை.

🌟 இவை அனைத்தையும் அறிந்து கொண்ட சீவகன், இனியும் பொறுத்து கொண்டிருந்தால் எதுவும் நடக்க போவதில்லை என்பதை புரிந்து கொண்டான்.

🌟 அரசர்கள் தன்னை எதிர்க்க வந்து கொண்டு இருப்பதை புரிந்து கொண்ட சீவகன் கந்துக்கடனிடம் சென்று, தந்தையே நீங்கள் உரைத்தது போலவே நான் அனைத்திற்கும் தயாராக வந்திருக்கின்றேன். அவர்கள் பதுமுகனின் பேச்சுக்களை எதுவும் கேட்கவில்லை. மாறாக என்னுடைய வில்லையும், வேலையும் தான் எதிர்பார்த்து இங்கு வந்து கொண்டிருக்கின்றார்கள். இனி அவர்களின் எதிர்பார்ப்பை நான் நிறைவேற்றி விட்டு வருகின்றேன் என்று கூறி தனக்குத் தேவையான அம்புகளையும், வேலையும் எடுத்துக் கொண்டு பதுமுகன் இருக்கும் இடத்தை அடைந்தான்.

🌟 சீவகனும், அவனுடைய நண்பர்கள் மற்றும் சகோதரர்கள் இணைந்து எதிர்க்க வந்தவர்களை வீரத்தோடு செயல்பட்டு அனைவரையும் வெற்றி கொண்டனர். சிலர் போர்க்களத்தில் மாண்டு போயினர். சிலர் உயிர்பிழைத்தால் போதும் என்று தங்கள் உயிரை காப்பாற்றிய வண்ணமாக அவ்விடத்தை விட்டு ஓடி கொண்டிருந்தனர்.

🌟 பதுமுகனோ சீவகனை நோக்கி அங்கே சிலர் தப்பித்து ஓடி கொண்டிருக்கின்றார்கள். அவர்களை பின்தொடர்ந்து செல்லட்டுமா? என்று கேட்டான்.

🌟 வேண்டாம் வேண்டாம் விட்டுவிடு. எதிரியை எதிர்த்து போர் புரிய முடியாமல் உயிர்பிழைத்தால் போதும் என்று ஓடி கொண்டிருப்பவர்களை துரத்தி சென்று அவர்களை கொன்றால் அந்த பாவம் நம்மை தான் வந்து சேரும். எனவே வேண்டாம் விட்டுவிடு என்று கூறினான் சீவகன்.

🌟 போரும் நிறைவுபெற்றது. போர்க்களத்தில் காயம் பெற்றவர்களுக்கு தேவையான சிகிச்சைகளும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு மானியம் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.


Share this valuable content with your friends