No Image
 Tue, Nov 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வாழ்க்கையில் முழுபலனை அடைய செய்யும் செவ்வாய் வழிபாடு..!!

Feb 22, 2023   Ramya   359    ஆன்மிகம் 


செவ்வாய் வழிபாடு..!!


🙏மங்களகாரகன் என்று அனைவராலும் போற்றப்படுவது செவ்வாய். வீரத்தின் நாயகன் செவ்வாய்க்கு உகந்த நாள் செவ்வாய்க்கிழமை. புனிதமான இந்த கிழமையைத்தான் பலரும் விரதமிருக்க தேர்ந்தெடுக்கின்றனர். முருகனுக்கும், அம்மனுக்கும் உகந்த கிழமை செவ்வாய்.

மங்களம் தரும் செவ்வாய் :

🙏செவ்வாய்க்கிழமை அன்று நமது வேண்டுதலை எந்த தெய்வத்திடம் வைத்தாலும் அந்த வேண்டுதல் உடனே நிறைவேறும். இந்நாளில் மங்களப்பொருட்களை வாங்குவது, சுபநிகழ்ச்சி நடத்துவது, நம்மைச் சுமக்கும் பூமித்தாய்க்கு நாம் நன்றிக்கடன் செலுத்துவது போன்ற செயல்களை செய்யலாம்.

செவ்வாய் வழிபாடு :

🙏செவ்வாய்க்கிழமை அன்று ஒரு பொழுது விரதம் இருந்து வந்தால் ஒன்பது வாரத்தில் உங்களுக்கு நல்லது நடக்கும். வியாபாரம் செய்பவர்கள் கண்டிப்பாக செவ்வாய் வழிபாட்டை செய்து வந்தால் வியாபாரம் பெரிய அளவில் விருத்தி அடையும். நல்ல தைரியத்தை கொடுத்து நாம் எடுத்து வைக்கும் எல்லா வியாபாரமும் வெற்றியை தரும்.

9 செவ்வாய்க்கிழமை விரதம் :

🙏செவ்வாய்க்கிழமைதோறும் காலையில் குளித்து அருகில் உள்ள முருகப்பெருமான் ஆலயத்துக்குச் சென்று வழிபட வேண்டும். பிறகு வீட்டிற்குத் திரும்பியதும், வெறும் பால் அல்லது பழச்சாறு மட்டும் அருந்தி, விரதத்தை மேற்கொள்ள வேண்டும். கந்தசஷ்டி கவசம், கந்த குரு கவசம் போன்ற முருகப்பெருமானுக்கு உரிய ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்யலாம்.

🙏மாலை 6 மணிக்கு மறுபடியும் முருகன் கோயிலுக்குச் சென்று வழிபட்டு விரதத்தை நிறைவுசெய்ய வேண்டும்.

இப்படி 9 செவ்வாய்க்கிழமைகள் விரதம் இருந்தால்,

🎉செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறைந்து நன்மை உண்டாகும்.

🎉சொந்தவீடு இல்லாதவர்களுக்கு அதை கட்டிக்கொள்ளும் யோகம் உண்டாகும்.

🎉பூமி சம்பந்தமான சொத்துக்களில் லாபம் உண்டாகும்.

🎉கோழைத்தனம், பய உணர்வுகள் நீங்கி, தைரியம் மற்றும் தன்னம்பிக்கை பிறக்கும்.

🎉உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உயர்ந்து, உடல் ஆரோக்கியம் மேம்படும்.


சந்திர தரிசனம்..!!


🌙ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை. ஆனால் மூன்றாம் நாளான துவிதியை திதியில் தெரியும் நிலவு, அழகாகவும், பிரகாசமாகவும் இருக்கும்.

🌙வளர்பிறை சந்திரனை தரிசித்தால் செல்வ வளம் பெருகும். பிறையைப் பார்த்து வணங்குவது என்பது மிக மேலான சிவபுண்ணியம் ஆகும்.

🌙மூன்றாம் பிறையானது இரவு வருவதற்கு முன்னே 6.30 மணியளவில் தோன்றும் பிறையாகும். வானத்தில் சில நொடிகளே காட்சி தரும் மூன்றாம் பிறை சந்திர தரிசனமே மிகவும் அபூர்வமான தெய்வ தரிசனமாகும்.

கேட்ட வரம் கிடைக்கும் :

🌙இந்த பிறை நாள் செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் வந்தால் இரட்டிப்பான பலன்கள் உண்டு. அதே போல் சித்திரை, வைகாசி மாதங்களில் காணும் பிறை தரிசனத்திற்கு ஒரு வருட பிறை தரிசனம் கண்ட பலன் கிட்டும்.

🌙அதே போல் கார்த்திகை, மார்கழி மாதங்களில் காணும் பிறை தரிசனத்தால் சகல பாவங்களும் தீரும். மகிமை பெற்ற சந்திர பிறை தரிசனம் செய்தால் அறிவு வளரும், ஞாபக சக்தி கூடும், மனக்குழப்பம் நீங்கும், கண் பார்வை தெளிவாகும், கேட்ட வரம் கிடைக்கும் மற்றும் செல்வமும், சந்தோஷமும் தேடிவந்து அமையும்.

🌙சந்திரனை தரிசிக்கும் வேளையில், கையில் காசை வைத்து மூடிக்கொண்டு வலமாக மூன்று முறை சுற்றி, மீண்டும் ஒரு முறை பிறையை தரிசித்து வணங்க, பெண்களுக்கு மாங்கல்ய பலம் ஏற்படுகிறது.

🌙மூன்றாம் பிறையில் சந்திர தரிசனம் செய்து வணங்குவது ஆயுளை விருத்தியாக்கும்.

என்னென்ன நன்மைகள் :

🌙மூன்றாம் பிறையைத் தரிசனம் செய்தால், சிவனின் சிரசையே நேரில் தரிசனம் செய்ததாக அர்த்தம். தொடர்ந்து மூன்றாம் பிறையை தரிசித்து வருபவர்கள் வாழ்வில் வற்றாத செல்வ வளத்தை பெற்று பிரகாசத்துடன் திகழ்வர்.

🌙மூன்று பிறை தொடர்ந்து தரிசித்தால் மூர்க்கனும் அறிவு பெறுவான்.

🌙ஐந்து பிறை தொடர்ந்து தரிசித்தால் ஆண்டியும் அரசயோகம் பெறுவான்.

🌙ஆறு பிறை தொடர்ந்து தரிசித்தால் திருமணம் தடையின்றி நடக்கும்.

🌙ஏழு பிறை தொடர்ந்து தரிசித்தால் ஏற்பட்ட கடன் தீரும்.

🌙பத்து பிறை தொடர்ந்து தரிசித்தால் பாரில் புகழ் ஓங்கும்.

🌙வருடம் முழுவதும் பிறை தொடர்ந்து தரிசிக்க வம்சம் விருத்தியாகும்.


Share this valuable content with your friends


Tags

புதன் மற்றும் கேது இருந்தால் என்ன பலன்? விடியற்காலை தொடையில் மச்சம் இருந்தால் நல்லதா? கெட்டதா? அழகிய பெண் green color stone ring 15.04.2020 rasipalan in pdf format 12ல் குரு இருந்தால் என்ன பலன்? நட்சத்திரம் உடையவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா? Garuda puranam கோட்புலி நாயனார் !! house problems குடியிருக்கும் வீட்டில் புறா கூடு கட்டுவது நல்லதா? கெட்டதா? 8ல் கேது இருந்தால் என்ன பலன் 8ம் இடத்தில் குரு இருந்தால் என்ன பலன்? வீடு கட்டுவது சிவலிங்கத்திற்கு அபிஷேகம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? நாரதர் ஆக்னா சக்கரம் உடலில் எங்கு அமைந்துள்ளது? தினசரி ராசிபலன்கள் (19.03.2020) இரண்டு பாம்புகள் பிணைந்திருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?