No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - கந்துக்கடனை சந்தித்த நாகமாலை..!!

Feb 22, 2023   Ramya   171    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... கந்துக்கடனை சந்தித்த நாகமாலை..!!

🌟 நாகமாலை பதற்றத்தோடு உள்ளே வந்ததை இவ்விருவரும் கண்டனர். ஏன் என்ன ஆயிற்று? ஒரே பதற்றமாக வந்து கொண்டிருக்கிறாய் என்ன செய்தி? என்று கந்துக்கடன் வினவினார்.

🌟 நாகமாலை மன்னன் கூறியதை கந்துக்கடனிடமும், புத்திசேனனிடமும் தெளிவாக கூறினாள்.

🌟 நாகமாலை கூறியதை கேட்டதும் கந்துக்கடன் புத்திசேனனை நோக்கி, இனி நான் சொல்வதற்கு எதுவும் இல்லை. அனைத்தையும் நீயே கேட்டாய். போட்டியில் கலந்து கொள்வதற்கு நான் எந்தவொரு தடையையும் விதிக்கவில்லை. ஆனால் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்றால் தயாராக போக வேண்டும். அதைத்தான் நான் கூறுகின்றேன். சீவகனிடம் இதை கூறு அவனுக்கு புரியும் என்று கூறினார்.

🌟 புத்திசேனன் கந்துக்கடனிடம் இருந்து விடை பெற்றுக் கொண்டு, சீவகனிடம் சென்று அங்கு நிகழ்ந்தவற்றை எல்லாம் கூறினான். அதுமட்டுமில்லாமல் கந்துக்கடன் கூறியதையும் கூறினான்.

🌟 சீவகனும், புத்திசேனனை பார்த்து தந்தை கூறியதில் எந்தவிதமான தவறும் இல்லையே. போட்டிக்கு செல்வது தவறில்லை. ஆனால் தயாராக மட்டும் தான் செல்ல வேண்டும் என்று கூறியிருக்கின்றார்.

🌟 பனங்காட்டு நரி சலசலப்புகளுக்கு அஞ்சாது. குறைக்கின்ற நாய் கடிக்காது என்பது போல இந்த அறைகூவலுக்கெல்லாம் நாம் அஞ்ச வேண்டியதில்லை. நாமும் தயாரான நிலையிலேயே, தேவையான ஆயுதங்களோடு போட்டிக்கு செல்வோம் என்று கூறிக்கொண்டு போட்டி நடைபெறும் களத்தினை நோக்கி கிளம்பினான் சீவகன்.

🌟 அவனுடைய நண்பர்களான பதுமுகன், நபுலன், விபுலன், நந்தட்டன் ஆகியோரும் சரியான நேரத்தில் போட்டி நடைபெறும் களத்தை வந்தடைந்தார்கள்.

🌟 யாரும் எதிர்பாராத அந்த தருணத்தில் சீவகன் அந்த அவைக்கு வந்ததுமே அரங்கமே மிகுந்த ஆர்ப்பாட்டமும், மகிழ்ச்சியும் அடைந்தது.

🌟 புதிதாக போட்டியில் கலந்து கொள்ள வந்தவனை கண்ட காந்தருவதத்தை, இதுவரையில் அவள் அறியாத ஒரு புதிய உணர்வினை அடைந்தாள். யார் இவன்? இவனை கண்டதும் ஏன் என்னுள் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன? என்று தனது உடனிருந்த வீணாபதியிடம் வினவினாள்.

🌟 இவன்தான் சீவகன் என வீணாபதி கூறினாள்.

🌟 சீவகன் என்று அறிந்ததும் இவரை பற்றிய பல செய்திகளை நான் கேள்விபட்டிருக்கின்றேன். அவைகள் எல்லாம் இவரை மிகைப்படுத்துதல் போன்று இருக்கின்றன என்று நினைத்திருந்தேன். ஆனால் அவை எதுவும் இல்லை. அனைத்தும் இயல்பாக தான் இருக்கின்றன என காந்தருவதத்தை கூறினாள்.

🌟 சீவகனை போட்டி நடைபெறும் இடத்தில் கண்டதும் அங்கிருந்த கன்னியர்கள் அனைவரும் காந்தருவதத்தையின் மீது மிகுந்த கோபம் கொண்டனர். கொடுத்து வைக்காதவள் கெடுத்து கொண்டாள் என்பது போல இசை போட்டியில் அவன் இவளை வெல்லவில்லை என்றால் இவள் அவனை இழப்பது உறுதி. அவள் தனக்குத்தானே வேலியை போட்டு கொண்டு தன்னுடைய வாழ்க்கையையும் கெடுத்து கொள்ள போகிறாள் என்று அவர்களுக்குள்ளே பேசி கொண்டனர்.

🌟 ஒரு சிலர், அப்படி எதுவும் இங்கு நடைபெற போவதில்லை. ஏனென்றால்? வெற்றியும், தோல்வியும் அவளே நிர்ணயம் செய்வது போல விதிகள் இருக்கின்றன. ஒருவேளை அவள் விட்டுக்கொடுத்தால் இவன் போட்டியில் வெற்றி பெறுவான். இசையில் தோற்றுவிட்டால் வாழ்க்கையில் வெற்றி பெறுவாள் என்றும் கூறினார்கள்.

🌟 யாழிசை மேடையில் அமர்ந்திருந்த காந்தருவதத்தையோ சீவகனை கண்டதும் அவனுடைய அழகில் மயங்கினாள். பலரை மயக்கியவள் ஒருவன் அழகில் மயங்குவது இயல்பு தானே.

🌟 ஒருவேளை இவன் இசையில் தன்னிடம் தோற்றுவிட்டால் நான் என்ன செய்வது என்று அஞ்சினாள். வேண்டுமானால் நாமே போய் போட்டியில் தோற்று இவனை வெற்றி அடைய செய்வோமா? என்று ஒரு பக்கம் எண்ணினாள். ஆனால் இது முறையான வெற்றியாக இருக்காது. எவ்விதம் என்னுடைய விதி எழுதி இருக்கின்றதோ அதன்படியே நடக்கட்டும் என்று கூறி எப்பொழுதும் போல போட்டியாளரை போட்டி கொள்ள துவங்கினாள் காந்தருவதத்தை.

🌟 நிகழ்ந்து கொண்டு இருக்கக்கூடிய நிகழ்வுகள் அனைத்தும் புதுமையாக இருந்தாலும் அதை அனுபவிக்கும் மனப்பக்குவத்தில் காந்தருவதத்தையும் இல்லை. ஏனென்றால் வீணாபதியும், மற்ற கன்னிகளை போல் சீவகனின் அழகில் மயங்கி விட்டாள் போல. அவள் பெயருக்கு ஏற்றவாறு அவள் காலத்தையும் வீணடித்து கொண்டிருந்தாள்.


Share this valuable content with your friends