No Image
 Tue, Nov 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




புதன் கிழமை... புதன் பகவான் வழிபாடு… தொட்டதெல்லாம் பொன்னாகும்…!!

Feb 22, 2023   Ramya   757    ஆன்மிகம் 


புதன் வழிபாட்டின் சிறப்புகள்..!!


👉பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். பெருமை மிக்க புதன் கிழமையில் சில சிறப்பு பரிகாரங்களை செய்வதன் மூலம் வாழ்க்கையில் வரும் பிரச்சனைகள் தீரும்.

👉புதன் எப்போதும் சொல் புத்திகாரகன். இவர் சந்திரனின் மைந்தன். சந்திரன் நம் மனதின் எண்ண ஓட்டத்திற்கு சொந்தக்காரன். புத்தியை நிலைப்படுத்துபவன்.

புதன் பகவானை வழிபடுவதற்கு உகந்த கிழமை : புதன்கிழமை.

புதன் பகவானுக்கு உரிய ராசி : மிதுனம், கன்னி.

புதன் பகவானுக்கு உரிய திசை : வடகிழக்கு.

புதன் பகவானின் அதிதேவதை : மகாவிஷ்ணு.

புதன் பகவானுக்கு உரிய நிறம் : பச்சை.

👉புதன்கிழமையில் பச்சை நிற ஆடை அணிவது புதன் தோஷத்தை போக்கும்.


புதன்கிழமையன்று தானம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் :


👉பசுவுக்கு - பசும் புல் - மன நிம்மதியும், உற்சாகமும் கிடைக்கும்.

👉பசுவுக்கு - பச்சை பயிறு - வருமானம் பெருகி மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.

👉பிராமணருக்கு - பச்சை பயிறு - பொருளாதாரம் முன்னேற்றம் பெறும்.

👉திருநங்கைகளுக்கு - ஆடை தானம் (பச்சை நிறம்) - நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.

மேலும் சிறப்பு பெற வழிபாட்டு நேரத்தில் சொல்ல வேண்டிய புதன் பகவான் காயத்ரி மந்திரம்:

ஓம் கஜத்வஜாய வித்மஹே
சுகஹஸ்தாய தீமஹி
தந்நோ புத ப்ரசோதயாத்;

எனும் மந்திரத்தைச் சொல்லி புதன் பகவானை வழிபடுங்கள்.

புதன் ஓரையில் விளக்கேற்றுங்கள் :

👉புதன் கிழமையில், புதன் ஓரை மற்றும் புதன் பகவானுக்கான ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திர நாட்களில், புதன் பகவானை வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதால்,


🪔கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.

🪔தொழில் வளர்ச்சியடையும்.

🪔பொருளாதாரம் வளம் பெறும்.

🪔வியாபாரத்தில் இதுவரை இருந்த நஷ்ட நிலை மாறி, லாபம் பெருகும்.

🪔சுபகாரியம் கைகூடும்.

🪔குடும்பத்தில் அமைதி நிலவும்.

🪔எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும்.

🪔திருமணத்தடைகள் நீங்கும்.

🪔சந்தான பாக்கியம் கிடைக்கும்.

🪔குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் நிலவும்.


Share this valuable content with your friends