சீவக சிந்தாமணி... அனங்கமாலை மீது கோபம் கொண்ட கட்டியங்காரன்..!!
🌟 அரச குடும்பத்தில் இருந்து தான் எனக்கானவன் இருக்க வேண்டும் என்பதில்லையே... பாஞ்சாலிக்கு அர்ஜுனன் வந்ததை போன்று, சாதாரண வேடத்திலும் எனக்கானவன் வருவான் என்ற நம்பிக்கையில் போட்டியில் ஈடுபட்டவர்களிடம் தன்னை தோற்கடிக்கக்கூடிய திறமை எவரிடமாவது உள்ளதா? என்று தேட துவங்கினாள்.
🌟 காந்தருவதத்தையின் நிலையை எண்ணி நாட்டு மக்கள் அனைவரும் சற்று கவலை அடைந்தனர். ஏனென்றால் ஆட்சியானது நன்முறையில் நடந்தால் தானே மக்கள் இசை போன்ற புதிய கலைகளை நாடுவார்கள். உயிர் வாழ்வதற்கே போராட்டம் என்ற பொழுது மக்கள் எவ்விதம் இசையை நாட முடியும்.
🌟 கொடுங்கோலன் ஆட்சியில் இனி என்னென்ன நிகழ போகின்றதோ? இந்த பெண்ணிற்கு மணமகன் கிடைக்கவில்லை என்றால் இது நாட்டிற்கு ஏற்பட்ட அவமானம் அல்லவா? இதை எண்ணும் பொழுதே கட்டியங்காரனை மக்கள் அனைவரும் வெறுத்து ஒதுக்கினர்.
🌟 அரியணையில் அமர்ந்திருந்த கட்டியங்காரனோ அங்கு நிகழ்ந்த அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருந்தான். பின் தனது அருகில் இருக்கக்கூடிய மதனனிடம் அந்த வாலிபன் வந்திருக்கின்றானா? என்று வினவினான்.
🌟 எந்த வாலிபன் அரசே? யாரென்று? மதனன் கேட்டான்.
🌟 அவன்தான் அந்த பசு மாட்டு கூட்டத்தை மீட்டு கொண்டு வந்தானே.. அவன் பெயர் கூட ஏதோ ஓ... ஓ... ஆ... சீவகன் என்று அவன் பெயர் கூறினான்.
🌟 அதற்கு மதனனோ, அரசே எனக்கு தெரியவில்லை.. வந்திருந்தாலும் வந்திருப்பான் என்று தயக்கத்துடன் கூறினான்.
🌟 வரட்டும்... வந்தால் அவன் உயிருடன் திரும்பி போவதற்கான சூழ்நிலைகளே இருக்கக்கூடாது. அனைத்து ஏற்பாடுகளும் தயாராக தானே இருக்கின்றது? என்று கேட்டுவிட்டு கட்டியங்காரன் போட்டியை கவனிக்க தொடங்கினான்.
🌟 கட்டியங்காரன் சீவகனை பற்றி கேட்டதும் மதனன் சிரித்த வண்ணமாக அரசே அன்று நாடக மேடையில் நிகழ்ந்தது, இன்று இந்த மேடையில் நிகழாது தானே என்றான்.
🌟 அன்று ஒரு நாள் சீவகன் வேடவர்கள் கவர்ந்து சென்ற பசுக்களை மீட்டு வந்ததை முன்னிட்டு ஊர் மக்கள் இணைந்து அவனுக்கு ஒரு பாராட்டு விழா ஏற்பாடு செய்திருந்தனர். அப்பொழுது அந்த விழாவை பார்ப்பதற்காக கட்டியங்காரன் வந்திருந்தான். கட்டியங்காரன் அந்த விழாவிற்கு வந்திருக்கின்றான் என்பது சீவகனுக்கு தெரியாது.
🌟 அந்த விழாவில் கலந்து கொண்ட கட்டியங்காரனுக்கு ஏன் இந்த விழாவில் கலந்து கொண்டோம்? என்ற அளவில் மிகுந்த வெறுப்பும், கோபமும் ஏற்பட துவங்கியது. அதற்கு காரணம் அன்றைய நாடகத்தில் நடனமாடிய ஒரு பெண் தான். அவள் பெயர் தான் அனங்கமாலை.
🌟 நீண்ட நாட்களாகவே அனங்கமாலையிடத்தில் ஆசை கொண்டு அவளை அடைவதற்கான பல முயற்சிகளை கட்டியங்காரன் மேற்கொண்டான். ஆனால் அவளோ கட்டியங்காரனை எள்ளளவும் பார்க்கவில்லை. அன்று அவள் சீவகனை பார்த்து ஆடிய அந்த நடனத்தில் காமமும், காதலும் அளவுக்கு அதிகமாக வெளிப்பட துவங்கியது.
🌟 அதை அவளிடத்தில் கண்டுபிடிக்க கட்டியங்காரனுக்கு அதிக நேரம் தேவைப்படவில்லை, சிறு அசைவுகளிலேயே அவளின் எண்ணங்களை தெளிவாக புரிந்து கொண்டான். அவள் சீவகனை பார்த்த வண்ணமாக அவனிடத்தில் மையம் கொண்டு ஆடி கொண்டிருந்தாள்.
🌟 இதை புரிந்து கொண்டதும் கட்டியங்காரனுக்கு சீவகன் மீது பொறாமை அதிகரிக்க துவங்கியது. அவன் ஒரு சிறு வாலிபன், அவனிடத்தில் தான் தோற்பதா? என்ற எண்ணம் அவனுள் தோன்றியது.
🌟 எனவே, அந்த வாலிபனான சிறு பதரை இப்பொழுதே கொன்று விடுங்கள் என்று தன்னிடம் இருந்தவர்களிடம் கூறினான். ஆனால் அதற்குள்ளாக சீவகன் அவ்விடத்திலிருந்து எதிர்பாராத விதமாக சென்று விட்டான்.
🌟 கட்டியங்காரனின் ஆணைகளை ஏற்று கொண்டு சீவகனை கொல்வதற்காக அவனுடன் இருந்தவர்கள் தேடினார்கள். ஆனால் அவன் எங்கும் இல்லை என்பதை புரிந்து கொண்டு அதை அரசனிடம் தெரிவித்தார்கள்.
🌟 கோபமும், பொறாமையும் தலைக்கேறிய கட்டியங்காரன் என்ன செய்கின்றோம் என்று புரியாமல் மேடையின் மீது ஏறி அனங்கமாலையை பிடித்து அவ்விடத்திலேயே அனைவரும் முன்னிலையிலும் பலமாக அடித்தான். ஆட வந்தவளுக்கு காமம் தேவையா? என்று கூறி அனைவரின் முன்னிலையிலும் அடித்தான்.
🌟 அனங்கமாலையின் கூற்றுக்களை கேட்டதும் கட்டியங்காரனுக்கு இன்னும் கோபம் அதிகரிக்க துவங்கியது. அந்த கோபத்தின் விளைவாக அவன் அனங்கமாலையை அரண்மனை வரை அடித்தே இழுத்து வந்தான்.
31.12.2018 Rasipalan in pdf format !! deventhiran அபூர்வ நெல்லிக்கனி தொலைந்த பொருள் கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? தொழிற்சாலைகள் மூடப்பட்டு இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? தேசியக் கொடியின் மூவர்ணங்கள்! எமகண்ட நேரத்தில் குழந்தை பிறக்கலாமா? jothider question and answer திதி கும்ப ராசியில் குரு இருந்தால் என்ன பலன்? சனிப்பெயர்ச்ச்சி 2023-2025 இயற்கை காட்சிகள் பின்பு குழந்தையும் 9ல் செவ்வாய் காரை புதுப்பிப்பது போல் கனவு கண்டால் இரண்டாவது திருமணத்திற்கு ஜாதகம் பார்ப்பது அவசியமா? dream kanavu Today History left eye தட்டுக்கள் நிறைய மாமிசம் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?