No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




குழந்தை கொடி சுற்றி பிறக்கலாமா?

Oct 19, 2018   Ananthi   1252    ஜோதிடர் பதில்கள் 

1. எமகண்டம், ராகு காலத்தில் குழந்தை பிறக்கலாமா?

🌟 எமகண்டம், ராகு காலத்தில் குழந்தை பிறக்கலாம்.

🌟 குழந்தை பிறப்பிற்கு லக்னம் மட்டுமே முதன்மையானதாகும்.

2. எந்தெந்த லக்னக்காரர்கள் எந்தெந்த கற்களை மோதிரமாக அணியலாம்?

🌟 மேஷம் மற்றும் விருச்சிகம் லக்னக்காரர்கள் பவளக்கற்களை அணியலாம்.

🌟 ரிஷபம் மற்றும் துலாம் லக்னக்காரர்கள் வைரக்கற்களை அணியலாம்.

🌟 மிதுனம் மற்றும் கன்னி லக்னக்காரர்கள் பச்சை கற்களை அணியலாம்.

🌟 கடக லக்னக்காரர்கள் முத்து அணியலாம்.

🌟 சிம்ம லக்னக்காரர்கள் மாணிக்கக்கற்களை அணியலாம்.

🌟 தனுசு மற்றும் மீன லக்னக்காரர்கள் புஷ்பராகக்கற்களை அணியலாம்.

🌟 மகரம் மற்றும் கும்ப லக்னக்காரர்கள் நீலக்கல்லை அணியலாம்.

🌟 ராகு திசை நடப்பவர்களுக்கு கோமேதகம் கற்களையும், கேது திசை நடப்பவர்கள் வைடூரிய கற்களையும் அணியலாம்.

🌟 ராசிக்கற்களை அணியும் பொழுது தகுந்த ஆலோசனைகளை பெற்று அணியவும்.

3. லக்னத்திலிருந்து 3-ம் இடத்தில் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 அரசாங்கம் தொடர்பான செயல்களில் ஈடுபாடு உடையவர்கள்.

🌟 நல்ல வாகன வசதி உடையவர்கள்.

🌟 பல பேருடைய ஆதரவு கொண்டவர்கள்.

🌟 நிதானமான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. லக்னத்திலிருந்து 9-ம் இடத்தில் புதன் இருந்தால் என்ன பலன்?

🌟 பொது சேவை செய்வதில் விருப்பம் உடையவர்கள்.

🌟 நல்ல ஞானம் உடையவர்கள்.

🌟 தத்துவம் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 5-ல் கேது இருந்தால் புத்திர பாக்கியம் உண்டா?

🌟 ஐந்தில் கேது இருந்தால் புத்திர பாக்கியம் உண்டு.

🌟 ஒரு கிரகத்தின் நிலையை மட்டும் கருத்தில் கொண்டு ஒருவரின் புத்திர பாக்கியத்தை கூற இயலாது.

🌟 முழு ஜாதகத்தையும் ஆய்வு செய்தே முழுப்பலனையும் கூற இயலும்.

6. கால சர்ப்பதோஷம் இருந்தால் தொழில் கிடைக்க கால தாமதமாகுமா?

🌟 கால சர்ப்பதோஷம் இருந்தால் செய்யும் முயற்சிகளில் நாம் எதிர்பார்க்கும் பலன்களை தாமதப்படுத்தும்.

🌟 மாறாக முயற்சியையும், தொழில்சார்ந்த பொறுப்புகளையும் அதிகப்படுத்தும்.

7. குழந்தை கொடி சுற்றி பிறக்கலாமா?

🌟 குழந்தை கொடி சுற்றி பிறந்தால் கவலை ஏதும் வேண்டாம்.

🌟 கொடி சுற்றிப் பிறந்த குழந்தையின் முகத்தை முதலில் பார்க்கும் போது நேரடியாக பார்க்காமல் எண்ணெயின் மூலம் தெரியும் குழந்தையின் உருவத்தை பார்ப்பது சிறந்த பரிகாரமாகும்.


Share this valuable content with your friends