No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




செய்வினைக்குரிய பரிகாரம் என்ன?

Oct 19, 2018   Ananthi   654    ஜோதிடர் பதில்கள் 

1. வளர்பிறை பஞ்சமி திதியில் இறந்தவருக்கு, தேய்பிறை பஞ்சமி திதியில், திதி கொடுக்கலாமா?

🌟 வளர்பிறை பஞ்சமி திதியில் இறந்தவருக்கு, தேய்பிறை பஞ்சமி திதியில், திதி கொடுக்கக்கூடாது. அவர் இறந்த வளர்பிறை பஞ்சமி திதியில், திதி கொடுக்க வேண்டும்.

🌟 தவிர்க்க முடியாத சூழலாக இருக்கும் பட்சத்தில் வளர்பிறை பஞ்சமி திதியில் இறந்தவருக்கு, தேய்பிறை பஞ்சமி திதியில் திதி கொடுக்கலாம்.

2. கோவிலுக்குள் கூட்டமாக இருந்தால் தரிசனம் செய்யாமல் திரும்பி வரலாமா?

🌟 கோவிலுக்குள் கூட்டமாக இருந்தால் தரிசனம் செய்யாமல் திரும்பி வருதல் என்பது நல்லதல்ல. இறைவனை தரிசிக்க சென்று இறைவனை தரிசித்து வருவது நற்பலனை அளிக்கும்.

3. மீன ராசிக்கான வீட்டு நிலைவாசல் கதவு எந்த பக்கம் இருக்க வேண்டும்?

🌟 மீன ராசிக்கான வீட்டு நிலைவாசல் கதவு வடக்கு திசையை நோக்கி இருக்கலாம்.

🌟 லக்னத்தை கொண்டு வீட்டின் நிலைகளில் நிலைவாசல் அமைப்பது சிறந்த பலனை அளிக்கும்.

4. எனக்கு மிதுன ராசி, என் மனைவி விருச்சிக ராசி. இருவருக்கும் எப்போதும் பிரச்சனையாகவே உள்ளது. இதற்கு ஏதேனும் பரிகாரம் உள்ளதா?

🌟 கணவன் - மனைவி இடையே ஒற்றுமை ஓங்க திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டு வர நன்மைகள் உண்டாகும்.

5. ஆண், பெண் குழந்தை பிறக்கக்கூடாத நட்சத்திரம் என்ன?

🌟 குழந்தைகள் பிறக்க எல்லா நட்சத்திரங்களும் உகந்த நட்சத்திரங்கள் ஆகும். அவரவர் செய்யும் கர்ம வினைக்கு ஏற்பவே அவர்களின் பிறப்பும் நிர்ணயிக்கப்படுகின்றன.

🌟 இதில் உகந்த நட்சத்திரம், உகந்தாத நட்சத்திரம் என்று எந்த நட்சத்திரத்தையும் நம்மால் ஒதுக்க இயலாது.

🌟 ஆகவே, அனைத்து நட்சத்திரங்களிலும் ஆண், பெண் குழந்தைகள் என பேதமின்றி பிறக்கலாம்.

6. செய்வினைக்குரிய பரிகாரம் என்ன?

🌟 காலபைரவரை வணங்கி, திரிசூலத்தில் எலுமிச்சைப்பழத்தை குத்தி வழிபட்டு வருவது செய்வினை மற்றும் திருஷ்டி தோஷங்களை போக்கும்.

🌟 கொல்லிமலையில் உள்ள கொல்லிப்பாவை ஆலயம் சென்று செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் வழிபட்டு வந்தால் செய்வினை தோஷங்கள் நீங்கும்.

7. அமாவாசை அன்று பெண் குழந்தை பிறப்பது நல்லதா?

🌟 அமாவாசை அன்று பெண் குழந்தை பிறக்கலாம்.

🌟 குழந்தை பிறப்பிற்கு லக்னம் மட்டுமே முதன்மையானதாகும்.

Tagged  seivinai

Share this valuable content with your friends