No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




விக்ரமாதித்தன் கதை... காட்டுக்குள் சிக்கிய பெண் ஆதிவாசி...!!

Feb 20, 2023   Ramya   199    விக்ரமாதித்தன் கதைகள் 


விக்ரமாதித்தனிடம் கதை சொல்ல ஆரம்பித்தது வேதாளம்.

ஒருமுறை ஆதிவாசி ஆண்களும், பெண்களும் ஏரிக்கரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது சிலர் ஏரியில் துள்ளி குதிக்கும் மீன்களை அம்பு எய்தி வீழ்த்த முடியுமா? என்று கேட்டார்கள். அதற்கு மற்ற சிலர் மறுத்து பேசினர்.

அப்போது பிரதாப் என்ற ஆதிவாசி இளைஞனிடம் நீலி எனும் பெண், நீ துள்ளி குதிக்கும் மீன்களில் ஒன்றை அம்பு எய்தி வீழ்த்தினால் நான் உன்னை திருமணம் செய்துகொள்கிறேன் என்றாள்.

உடனே பிரதாப் தன் வில்லின் மூலம் ஏரியில் துள்ளி குதிக்கும் மீனொன்றை குறிபார்த்து அம்பை செலுத்தினான். ஆனால் அவனின் குறி தவறி, அம்பு மீனை தாக்காமல் சென்றது. அப்போது அதே கூட்டத்திலிருந்த வீரபாகு என்ற மற்றொரு ஆதிவாசி இளைஞன் எய்திய அம்பு ஒரு மீனை தாக்கி, அதை துளைத்துக் கொண்டு சென்றது. நீலி சவால் விட்டபடி மீனை வீரபாகு வீழ்த்தியதால், நீலி வீரபாகுவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அனைவரும் வற்புறுத்தினர்.

இதை கேட்ட நீலி, இந்த சவாலை தனக்கு பிடித்த பிரதாப்பிடம் மட்டுமே விடுத்ததாகவும், மற்ற யாருக்கும் இதை ஒரு போட்டியாக அறிவிக்கவில்லை என்றும், அதனால் தன்னால் வீரபாகுவை திருமணம் செய்து கொள்ள முடியாது என்றும் மறுத்தாள்.

பிறகு ஒரு சமயம் ஆதிவாசி மக்கள் இருந்த இடத்தில் திடீரென்று ஒரு புலி வந்தது. அதை கண்டு எல்லோரும் அருகிலிருந்த குன்றின் உச்சியை நோக்கி ஓடினர். அப்போது நீலி கால் தடுக்கி கீழே விழ, அவள் மீது அந்த புலி பாய இருந்தது. இதை கண்ட வீரபாகு ஒரு பெரிய கல்லை எடுத்து அந்த புலியின் மீது வீசினான். அதில் அடிபட்ட புலி கீழே விழுந்தது.

புலி கீழே விழுந்த நேரத்தை பயன்படுத்தி கொண்டு இருவரும் குன்றை நோக்கி ஓடினர். அடிபட்ட புலி மீண்டும் அவர்களை துரத்த ஆரம்பித்தது. தப்பிக்க வேறுவழியில்லாமல் இருவரும் அக்குன்றிலிருந்து கீழே குதித்தனர். கீழே விழுந்ததில் நீலியின் கையில் அடிபட்டு ரத்தம் கொட்டியதால் அவள் மயக்கமடைந்தாள்.

வீரபாகுவின் நண்பன் ஒருவன் நமது விதிகளின் படி ஆணும், பெண்ணும் தங்களின் ரத்தத்தை கலந்து கொண்டால் திருமணம் ஆனதாக அர்த்தம், அதனால் நீயும் உன் ரத்தத்தை நீலியின் ரத்தத்துடன் கலந்து, அவளை கட்டாயத் திருமணம் செய்து கொள் என்று கூறினான்.

இது நடந்து சில காலம் கழித்து வீரபாகு, நீலியை கட்டாயத் திருமணம் செய்து கொண்டான் என்று பிரதாப் ஆதிவாசிகளின் கூட்டத்தில் வழக்கு தொடுத்தான். இக்குற்றச்சாட்டு உண்மையாயிருக்கும் பட்சத்தில் வீரபாகு மரண தண்டனை பெறுவான் என்றும், பிறகு நீலி தான் விரும்பிய பிரதாப்பையோ அல்லது வேறு யாரையாவது திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் பெரியோர்கள் கூறினர்.

அப்போது நீலி, வீரபாகு எனது சம்மதத்துடன் தான் என்னை திருமணம் செய்து கொண்டார் என்று கூறினாள். வீரபாகு, அப்பெரியவர்கள் முன்பு வந்து நீலி அடிபட்டிருந்த சமயம் எனது நண்பன் அறிவுறுத்தியது போல் செய்ய முயன்றேன். ஆனால் அந்த தவறான செயலை தன்னால் செய்ய முடியாமல் விலகியதாகவும், அதனால் தான் நீலியைக் கட்டாயத் திருமணம் செய்யவில்லை என்று உறுதியாக கூறினான். மேலும் இதற்கு தண்டனையாக தான் இந்த கூட்டத்தையும், இக்காட்டையும் விட்டு வெளியேறுவதாக கூறி அங்கிருந்து வெளியேறினான்.

விக்ரமாதித்தா! தனது சம்மதத்துடன் தான் திருமணம் நடந்ததாக நீலி ஏன் பஞ்சாயத்தில் பொய் சொன்னாள்? நீலியே கட்டாயத் திருமணம் நடக்கவில்லை என்று கூறியும், வீரபாகு அதை மறுத்து காட்டை விட்டு வெளியேறியது ஏன்? என்று வேதாளம் கேட்டது.

தன் உயிரை காப்பாற்றிய வீரபாகுவின் உயிரை காப்பற்ற நீலி தன் சம்மதத்துடன் தான் திருமணம் நடந்ததாக பொய் சொன்னாள். தனது செயலால் ஒரு பெண்ணின் வாழ்க்கை பாதிக்கப்பட்டதை எண்ணி குற்றவுணர்வோடும், ஆதிவாசி சமுதாயத்திற்கு தன்னால் அவப்பெயர் ஏற்படக்கூடாது என்ற தன் மனசாட்சியின் படி அக்காட்டிலிருந்து வீரபாகு வெளியேறினான் என்று பதிலளித்தான் விக்ரமாதித்தன்.


Share this valuable content with your friends