No Image
 Wed, Jun 26, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கடவுளுக்கு எந்தெந்த பூக்களால் அர்ச்சனை செய்தால் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும்?

Feb 20, 2023   Ramya   125    ஆன்மிகம் 


அர்ச்சனைப் பூக்களின் பலன்கள்...!!


💐 கடவுளுக்கு எந்தெந்த பூக்களால் அர்ச்சனை செய்தால் என்ன மாதிரியான பலன்கள் கிட்டும்? ஆலயத்திலோ அல்லது வீட்டிலோ இருக்கும் தெய்வங்களை பூக்கள் கொண்டு பூஜிப்பதுதான் வழக்கம். ஒவ்வொரு தெய்வத்தையும் வழிபடும் போதும், பூஜை செய்யும் போதும் நாம் அர்ச்சனைக்கு உபயோகிக்கும் மலர்களைக் கொண்டு நமக்கு கிட்டும் பலன்கள் வித்தியாசப்படும். ஆம்! தெய்வத்திற்கு எந்தெந்த பூக்களால் அர்ச்சனை செய்தால் என்ன மாதிரியான பலன்கள் நமக்கு கிட்டும் என்பதை பற்றி இங்கு காண்போம்.

அர்ச்சனைப் பூக்களின் அருமையான பலன்கள் :

💐 அல்லிப்பூ 👉 செல்வம் பெருகும்.

💐 பூவரசம்பூ 👉 உடல் நலம் பெருகும்.

💐 வாடாமல்லி 👉 மரணபயம் நீங்கும்.

💐 மல்லிகை 👉 குடும்ப அமைதி உண்டாகும்.

💐 செம்பருத்தி 👉 ஆன்ம பலம், நோயற்ற வாழ்வு.

💐 காசாம்பூ 👉 நன்மைகள் ஏற்படும்.

💐 அரளிப்பூ 👉 கடன்கள் நீங்கும்.

💐 அலரிப்பூ 👉 இன்பமான வாழ்க்கை.

💐 ஆவாரம் பூ 👉 நினைவாற்றல் பெருகும்.

💐 ரோஜா பூ 👉 நினைத்தது நடக்கும்.

💐 மருக்கொழுந்து 👉 குலதெய்வத்தின் அருள் கிடைக்கும்.

💐 சம்பங்கி 👉 இடமாற்றம் கிடைக்கும்.

💐 சங்குப்பூ (வெள்ளை) 👉 சிவபூஜைக்கு சிறந்தது.

💐 சங்குப்பூ (நீலம்) 👉 விஷ்ணு பூஜைக்கு சிறந்தது.

💐 மனோரஞ்சிதம் 👉 குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.

💐 தாமரைப்பூ 👉 செல்வம் பெருகும், அறிவு வளர்ச்சி பெறும்.

💐 நாகலிங்கப்பூ 👉 லட்சுமி கடாட்சம், ஆரோக்கியம் உண்டாகும்.

💐 முல்லை பூ 👉 தொழில் வளர்ச்சி, புதிய தொழில்கள் உண்டாகும்.

💐 நித்திய கல்யாணி பூ 👉 முன்னேற்றம் உண்டாகும்.

💐 தங்க அரளி (மஞ்சள் பூ) 👉 குருவின் அருள், பெண்களுக்கு மாங்கல்ய பலம் கிடைக்கும், கடன்கள் நீங்கும், கிரக பீடை நீங்கும்.

💐 பவளமல்லி 👉 இது தேவலோக புஷ்பமாகும். இந்த செடியினை வீட்டில் வளர்ப்பது மிக அவசியமாகும். இதன்மூலம் தேவர்கள் மற்றும் ரிஷிகளின் அருளும், ஆசியும் கிடைக்கும்.

💐 பழைய புஷ்பங்கள், மலராத மொட்டுக்கள், தூய்மை இல்லாத பூக்களைக் கொண்டு இறைவனுக்கு அர்ச்சனை செய்யக்கூடாது.

💐 அர்ச்சனை செய்த பூக்கள், கோவிலில் சாமிக்கு போட்ட மாலைகள் காலில் மிதிபடாதவாறு போட வேண்டும். முடிந்தால் தூய்மையான ஓடுகின்ற தண்ணீரில் விடலாம்.

பூஜைக்கு சிறப்பான பூக்கள் :

💐 திருமாலுக்கு 👉 பவளமல்லி, மருக்கொழுந்து, துளசி.

💐 சிவன் 👉 வில்வம், செவ்வரளி.

💐 முருகன் 👉 முல்லை, செவ்வந்தி, ரோஜா.

💐 அம்பாளுக்கு 👉 வெள்ளை நிறப்பூக்கள் ஆகியவை பூஜைக்கு சிறப்பானவை.

ஆகாத பூக்கள் :

💐 விநாயகருக்கு 👉 துளசி.

💐 சிவனுக்கு 👉 தாழம்பூ.

💐 அம்பாளுக்கு 👉 அருகம்புல்.

💐 பெருமாளிற்கு 👉 அருகம்புல்.

💐 பைரவர் 👉 நந்தியாவட்டை.

💐 சூரியனுக்கு 👉 வில்வம் ஆகியவை பூஜைக்கு ஆகாதவை.


Share this valuable content with your friends