No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - காந்தருவதத்தையை கண்ட சீதத்தன்..!!

Feb 18, 2023   Ramya   187    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... காந்தருவதத்தையை கண்ட சீதத்தன்..!!

🌟 எம்முடைய முன்னோர்கள் உங்களுடன் தொடர்பு கொண்டு இருக்கின்றார்களா? இதை என்னால் நம்ப முடியவில்லை. ஆனாலும் இனி நாம் உறவினர்களாக இருப்பது என்பது முடியாத காரியமாகும்.

🌟 நாம் உறவினர்களாக இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. ஏனென்றால் எனக்கு மகனோ, மகளோ இல்லை. கொடுக்கல், வாங்கல் இல்லை என்றால் அந்த உறவு எப்படி கிடைக்கும்? என்று கேட்டான் சீதத்தன்.

🌟 அவ்வளவுதானே இனி நமக்குள் கொடுக்கல், வாங்கல் தொடரத்தான் போகின்றது என்று கலுழவேகன் கூறினான்.

🌟 எனக்கு மகனோ, மகளோ இல்லாத பொழுது நமக்குள் எப்படி இது நிகழும் என்று சீதத்தன் கேட்டான்?

🌟 உங்களுக்குத்தான் மகனோ, மகளோ இல்லையே தவிர எனக்கு மகள் ஒருத்தி இருக்கின்றாள் என்று மன்னன் கூறினான்.

🌟 சீதத்தன் எனக்கு திருமணமாகிவிட்டது. இரண்டாம் தாரமாக உங்களது மகளை எனக்குத் திருமணம் செய்து வைக்கின்றீர்களா? எனக்கு இதில் விருப்பம் இல்லை என்று கூறினார்.


🌟 மன்னரோ உமக்கு என் மகளை திருமணம் செய்து வைக்கவில்லை. என் மகளை உன் மகளாக ஏற்றுக் கொண்டு இராசமாபுரத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று கூறினார்.

🌟 மன்னன் இவ்விதம் கூறியதைக் கேட்டதும் சீதத்தன்னுக்கு தனது மனைவியுடன் நிகழ்ந்த நினைவுகள் யாவும் நினைவுக்கு வந்தன.

🌟 அதாவது தன்னுடைய மனைவிக்கு ஒரு மகள் இல்லையே என்று மிகுந்த ஏக்கமாக இருந்தது. ஏனென்றால் நான் பல நாடுகளுக்கு சென்று வணிகம் செய்து புதுப்புது பொருட்களையும், நகைகளையும் வாங்கி கொண்டு வரும் போதெல்லாம் அதை அணிந்து பார்ப்பதற்கு ஒரு மகள் இல்லையே... என்று மிகுந்த வருத்தம் கொள்வாள். அதற்காக என்னை தொல்லையும் செய்வாள்.

🌟 அவளால் என்ன செய்ய முடியும். அதனால் என்னிடம் விரும்பி பலமுறை முயற்சி செய்வாள். நிச்சயம் குழந்தை பிறக்கும் என்று நம்புவாள். வயிற்றையும் தொட்டுப் பார்ப்பாள். சாப்பிட்ட மாதிரியே இருக்கும். அவள் பசி இன்றும் தீரவில்லை என்று மனக்கண்களில் நிகழ்ந்து முடிந்த கடந்த காலத்தை எண்ணிப் பார்த்தான்.

🌟 கலுழவேகன் சீதத்தனை நோக்கி வளர்ந்த என் மகளை உனக்குத் தருகிறேன். நீ அழைத்து சென்று அவளை தக்கவனுக்கு திருமணம் செய்து மருமகனாக்கி கொள்வாயாக. அதுமட்டுமல்லாமல் எனக்கு நீ இதில் ஆதரவாக இருக்க வேண்டும் என்று மன்னன் கூறினான்.

🌟 இதைக் கேட்டதும் சீதத்தன் உங்களது ராஜ்யத்தில் மணமகனே கிடையாதா? என்று வினவினான்.

🌟 எங்கள் ராஜ்யத்தில் பல திறமைகளும், அழகில் சிறந்த பல மன்னர்களும் இருக்கின்றார்கள். அவர்கள் அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு இவளை திருமணம் செய்வதில் ஈடுபட்டார்கள். ஆனால் அவர்கள் அனைவரையும் எனது மகள் வேண்டாம் என்று ஒதுக்கி விட்டாள்.

🌟 பின்பு என்ன செய்வது என்று தெரியாமல் எங்கள் ஊரில் உள்ள சிறந்த ஜோதிடரை அணுகி அவளுக்கு வரப்போகின்ற மணாளன் எப்படி? எங்கிருந்து வருவான்? என்று கேட்டோம். அவர் உங்களுடைய மருமகன் நமது ராஜ்யத்திலிருந்து வர மாட்டான். அவன் அன்னிய நாட்டில் இருந்து தான் வருவான். அதுவும் ஒரு ஊரின் பெயரை சொல்லி அந்த ஊரில் இருந்து தான் வருவான் என்று கூறினார்.


🌟 சீதத்தன் ஜோதிடர் கூறிய ஊர் எந்த ஊர்? என்று கேட்டான்.

🌟 கலுழவேகன் ஜோதிடர் கூறிய ஊர் வேறு எந்த ஊருமல்ல... உன்னுடைய ஊர் இராசமாபுரம் தான் என்று கூறினார்.

🌟 இராசமாபுரத்தை ஆண்ட ஏமாங்கத மன்னனுக்கு வயதாகிவிட்டதே. எப்படி அவருக்கு திருமணம் செய்து வைப்பார்கள். அதுமட்டுமல்லாமல் அவர் இப்போது உயிருடன் இல்லையே என்று சீதத்தன் கூறினார்.

🌟 அதைத்தான் நானும் ஜோதிடரிடம் கேட்டேன் அவர் உனது மகளை திருமணம் செய்யப் போகிறவன் உனது மகளின் திறமைக்கு இணையாக இருக்கக் கூடியவன். அவன் இராசமாபுரத்தில் தான் இருக்கின்றான் என்று கூறினார். அதற்கு பின்பு எங்களுடைய மனதிலும் இராசமாபுரத்தில் தான் எங்களுடைய மருமகன் இருக்கின்றான் என்பது ஆழப்பதிந்து விட்டது.

🌟 அதுமட்டுமல்லாது அந்த ஜோதிடர் உங்களுடைய மூதாதையர்களின் உறவுகள் மூலமாக தான் இந்த திருமணத்தை நடத்தி வைக்க முடியும் என்றும், அவர் கடல் வணிகத்தை செய்யக் கூடியவர் என்றும் கூறினார்.

🌟 ஜோதிடர் கூறியதிலிருந்து எங்களுடைய மூதாதையர் தொடர்புடைய அனைத்து உறவுகளையும் நாங்கள் தேடத் தொடங்கினோம். அப்போது தான் இராசமாபுரத்து மக்களிடம் எமது முன்னோர்கள் தொடர்பு கொண்டதை அறிந்து கொண்டோம். அதிலிருந்து ஜோதிடர் கூறிய வண்ணம் உள்ள நபர்களையும் தேடினோம்.

🌟 அந்த வகையில் அவர் கூறிய அனைத்தும் பொருந்தியவனாகவும், பயணம் செய்யக் கூடியவனாகவும் நீயே இருந்தாய். அதிலிருந்து நீ மேற்கொள்ளக்கூடிய ஒவ்வொரு நாடுகள் பற்றியும் நாங்கள் அறிந்து கொண்டோம் என்று சீதத்தனை பற்றிய அனைத்து விவரங்களையும் விஞ்சைய நாட்டு அரசன் எடுத்துரைத்தார்.

🌟 இதைக்கேட்டதும் சீதத்தன் பிரம்மித்து நின்றான்.

🌟 பின்பு விஞ்சைய நாட்டு மன்னன் தன்னுடைய மகளான காந்தருவதத்தை அழைக்கின்றேன். அவளுடன் நீங்களே பேசிக் கொள்ளலாம். மன்னன் அவருடைய மகளை அழைத்ததும் காந்தருவதத்தை கண்ட சீதத்தன் ஒரு நொடி கூட இமை மூடாமல் அப்பெண்ணை பார்த்த வண்ணமாக மெய்மறந்து நின்றான்.


Share this valuable content with your friends


Tags

alatchiyam பெண் தெய்வம் செவ்வாய் ஓரையில் என்னென்ன பணிகளை செய்யலாம்? விக்ரமாதித்தன் கதை கடையில் பால் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? காதல் திருமணத்தில் பிரச்சனைகள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? அதற்கு ஏதாவது பரிகாரம் உண்டா? house problems பஞ்சமி திதியில் பெண் குழந்தை பிறந்தால் என்ன பலன்? குழந்தை பிறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்? 12ல் புதன் தினசரி ராசிபலன்கள் (12.06.2020) செவ்வாய் இணைந்திருந்தால் god photo அநிருத்தன் பார்வதி தேவியை எண்ணி தியானம் செய்தல் அரிவாளால் வெட்டியது போல் கனவு கண்டால் என்ன பலன்? பொறுப்புகள் அதிகரிக்கும் கேது சந்திரன் இருந்தால் என்ன பலன் குரு திசை நடந்தால் என்ன பலன்கள் கிடைக்கும்? 20.07.2021 Rasipalan in PDF Format!! அதிஷ்டம்