No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - சீதத்தனுக்கும் கலுழவேகனுக்கும் இடையே நடந்த உரையாடல்.. என்னவாக இருக்கும்?

Feb 18, 2023   Ramya   133    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... சீதத்தனுக்கும் கலுழவேகனுக்கும் இடையே நடந்த உரையாடல்.. என்னவாக இருக்கும்?

🌟 நீங்கள் செய்த செயல்கள் அனைத்தையும் பார்த்ததும் புரிந்து கொண்டேன்... இதுவரை இவ்வளவு அழகிய வனத்தை நீங்கள் கண்டதே இல்லை என்பதை.

🌟 இவ்வளவு வளமும் நிறைந்து இருக்கக்கூடிய இந்த மலை வெள்ளிக்கட்டிகள் நிறைந்து இருந்த மலை ஆகும். அதனால் இந்த மலையை வெள்ளிமலை என்று கூறுவார்கள் என்றான் வித்யாதரன்.

🌟 என்னது இந்த மலை முழுவதும் வெள்ளிகள் நிறைந்து காணப்பட்டதா? என்று ஆச்சரியத்துடன் வினவினான் சீதத்தன். அப்படியானால் நீங்கள் இருந்த நகரம் எது? உங்கள் தலைவன் எங்கே இருக்கின்றார்? அவரிடம் அழைத்துச் செல்ல முடியுமா? என்று அடுத்தடுத்து கேள்விகளை கேட்க துவங்கினான்.

🌟 புன்னகை பூத்த வண்ணமாக வித்யாதரன் பொறுமை காத்தருளுங்கள். எங்களுடைய நகரம் மற்றும் எங்கள் தலைவன் இருக்கக்கூடிய நகரம் என்பது வித்யாதர நகரமாகும். இது அமராவதியை காட்டிலும் மிகவும் அழகும், எழிலும், வீரமும் நிறைந்த பலவிதமான அணிகளை தன்னிடத்திலே பூண்டு கொண்டிருக்கக்கூடிய தேவ நகரமும் கூட என்றான் வித்யாதரன்.

🌟 ஆமாம், சாதாரண வனத்தையே இவ்வளவு கட்டுக்கோப்பாகவும், அழகாகவும் வைத்திருக்கிறீர்கள் என்றால் உங்களுடைய நகரத்தை நீங்கள் எப்படி வைத்திருப்பீர்கள்? என்ற கற்பனை என்னிடத்தில் அளவுக்கு அதிகமாகவே தோன்றுகின்றது. நாம் இப்பொழுது உங்களது நகரத்தை பார்க்க செல்வோமா? ஆமாம் நான் உங்களிடம் ஒன்று கேட்க மறந்துவிட்டேன். உங்களுடைய பெயரென்ன? நான் எப்படி உங்களை அழைப்பது என்று வினவினான்.

🌟 என்னுடைய பெயர் வித்யாதரன் என்று நான் முன்னமே உங்களிடம் கூறினேனே. அதுமட்டுமல்லாது என்னை தரன் என்றும் அழைப்பார்கள் என்று கூறினான்.

🌟 இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டு இறுதியாக விஞ்சையர் நாட்டினை ஆண்டு கொண்டு இருக்கக்கூடிய அரசனின் அரண்மனைக்கு சீதத்தனை அழைத்துச்சென்றான் தரன்.

🌟 விஞ்சையர் நாட்டின் அரசனான கலுழவேகன் தன் பட்டத்து அரசி உடன் அமர்ந்திருந்தார். அவர்களை கண்ட தரன் அவர்களை வணங்கி தான் அழைத்து வந்து இருக்கக்கூடிய சீதத்தனை அவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தான்.


🌟 சீதத்தனை கண்டதும் அரசரும் புன்னகை மலர்ந்த முகத்துடன் ஏதோ ஒரு வெளிச்சத்தை கண்டதுபோல மிகுந்த மகிழ்ச்சியுடன் அவரை வருக! என்று வரவேற்று அவருக்கென்று தனி இருக்கை அமைத்து அமர்க! என்று கூறினார். உங்களுடைய வருகைக்காக நாங்கள் வெகு நாட்களாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றோம் என்று கூறினார்.

🌟 இதைக் கேட்டதும் மிகுந்த வியப்பாக இருந்தது சீதத்தனுக்கு. என்னுடைய வருகைக்காக நீங்கள் அனைவரும் காத்துக் கொண்டிருந்தீர்களா? எதற்காக என்னுடைய வருகைக்காக நீங்கள் காத்துக் கொண்டிருந்தீர்கள் என்று கூற முடியுமா? என்று வினவினான்.

🌟 நாம் ஒன்றும் உறவினர்களோ, நண்பர்களோ கிடையாது. இதற்கு முன் நான் உங்களை கண்டதும் இல்லை. அப்படி இருக்கின்ற பொழுது நீங்கள் ஏன் என்னுடைய வருகைக்காக காத்துக் கொண்டிருக்கின்றீர்கள்?

🌟 சீதத்தனுடைய வினாவை கேட்டதும் அரசனும் நாமிருவரும் இதற்குமுன் சந்தித்ததில்லை. ஆனால் நம்முடைய முன்னோர்கள் உறவினர்கள் ஆவார்கள். எப்படி எனில், எம்முடைய முன்னோர்கள் உடன் உம்முடைய முன்னோர்கள் தொடர்பு கொண்டு இருக்கின்றார்கள். அவர்கள் இங்கு வந்து தங்கியும் இருக்கின்றார்கள். நாம் இருவரும் தொன்றுதொட்டே பல நெடுங்காலமாக தொடர்பு கொண்டுள்ளோம். நான் அரசன் என்றும், நீ வணிகன் என்றும் பாகுபாடு நமக்கு தேவையில்லை. நாம் எப்பொழுதோ உறவினர் ஆகிவிட்டோம். நமக்குள் ஏன் இந்த ஜாதி பேதம்? இது அவசியம் அல்ல என்று கூறினார்.


Share this valuable content with your friends


Tags

todayrasipalan 18.04.2020 அமாவாசையில் புதிய தொழில் தொடங்கலாமா? 10.07.2018 rasipalan dhinasari rasipalan in pdf format எந்த ஒரு நிலையும் இல்லாத நிலையை அடைய என்ன செய்ய வேண்டும்? weeklylhorscope நிருதி மூலையில் பள்ளம் இருக்கலாமா? பொங்கல் தருவது போல் கனவு கண்டால் Maṣha rāsi palaṉkaḷ.! Tuesday Horoscope - 17.07.2018 சுய முயற்சிகளின் மூலம் முன்னேறக்கூடியவர்கள் இவர்களே சில்லறை காசுகளை மடியில் போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தினசரி ராசிபலன் (01.01.2022) மனநலம் தொடர்பான பிரச்சனைகள் வரக்காரணமான தவறான வீட்டமைப்புகள்! வீடு கட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தொழில் சிறப்பாக நடைபெற எந்த கடவுளை வணங்க வேண்டும்? ஐயப்ப விக்கிரகத்தில் கால்கள் கட்டப்பட்டிருப்பது ஏன்? மரணயோகத்தில் பத்திரப்பதிவு செய்யலாமா? bangles kadamba vanam