No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சிவராத்திரியில் இரவு முழுவதும் கண் விழிப்பது ஏன்?

Feb 18, 2023   Ramya   122    ஆன்மிகம் 


சிவராத்திரியில் இரவு முழுவதும் கண் விழிப்பது ஏன்?


🙏 இன்று மஹாசிவராத்திரி. எத்தனையோ இரவுகள் இருக்க ஒரு குறிப்பிட்ட இரவு மட்டும் சிவனுக்கு உகந்ததாக ஏன் ஆனது? அதுவும் மாசி மாத சதுர்த்தசி இரவு மட்டும் ஏன் மஹாசிவராத்திரி ஆனது? என்று நம் மனதில் பல யோசனைகள் எழும்.

🙏 சக்திக்கு ஒன்பது ராத்திரி... அது நவராத்திரி... சிவனுக்கு ஒரு ராத்திரி... அது சிவராத்திரி... சிவராத்திரி என்பதற்கு "சிவனுக்கு உகந்த இரவு" என்பது பொருள். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு, மாத சிவராத்திரியாக போற்றப்படுகிறது.

🙏 மஹாசிவராத்திரியை முன்னிட்டு நாட்டின் பல்வேறு சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு சென்று சிவபெருமானை வழிபாடு செய்கிறார்கள்.

சிவராத்திரி அன்று கண் விழிப்பது ஏன்?

🙏 அன்னையானவள் சிவபெருமானிடம், சிவராத்திரியன்று சூரியன் மறைந்தது முதல் மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை தங்களை(சிவனை) பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும், மோட்சங்களையும் அளிக்க வேண்டும், அருள் புரியுங்கள் என்று வேண்டிக் கொண்டாள்.

🙏 சிவபெருமானும், அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள் புரிந்தார். அந்த இரவே "சிவராத்திரி" என வழங்கப்பட்டு அனைவராலும் கொண்டாடப்படுகிறது.

🙏 பகல் பொழுது பரமேஸ்வரனுக்கும், இரவுப் பொழுது அம்பிகையான உமாதேவிக்கும் உரியது என்பது நியமம். ஆனால் சிவராத்திரி என்பது அம்பாளின் வேண்டுதலின்படி கொண்டாடப்படுவதால் அது சிவனுக்கு உரியதாயிற்று.

🙏 எனவே சிவராத்திரியன்று சரியான முறையில் கண் விழித்து இருப்பது நன்மை பயக்கும்.

🙏 சிவராத்திரி தினமான இன்று இரவில் நான்கு ஜாமங்களிலும் தூங்காமல் பூஜை செய்து, மறுநாள் விடியற்காலையில் நீராடி, காலை அனுஷ்டானத்துடன் உச்சிக்கால அனுஷ்டானத்தையும் அப்போதே முடிக்க வேண்டும்.

🙏 அதன் பின் தீட்சை தந்த குருவைப் பூஜை செய்து விட்டு, உடைகள் மற்றும் உணவினை அந்தணருக்கு தானமாக அளித்து விரதத்தை நிறைவு செய்யும் விதமாக உணவு உண்ண வேண்டும்.

கண் விழித்தலின் புண்ணியம் :

🙏 அறிந்தோ அறியாமலோ கூட ஒருவன் சிவராத்திரி அன்று விழித்திருந்தால் புண்ணியம் கிடைக்கும்.

🙏 மஹாசிவராத்திரியன்று சிவன் கோவில்களிலோ, மற்ற கோவில்களிலோ நான்கு ஜாமமும் நடைபெறும் பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டும், தான தருமங்கள் செய்தும், சிவபெருமானின் புகழ் பாடியும் புண்ணியம் அடையலாம்.

🙏 சிவராத்திரி தினத்தில் இரவு முழுவதும் உறங்காமல் விழித்திருந்து சிவாலயத்தில் நடைபெறும் நான்கு ஜாமப் பூஜை வழிபாடுகளின்போது லிங்க தரிசனம் செய்தால் நன்மை உண்டாகும்.

🙏 சிவராத்திரி அன்று கண் விழித்திருந்து விரதமிருந்து இறைவனை வணங்கும்போது முழுமையான இறைவன் அருள் கிடைக்கும். மேலும் தியானம் நிலைக்கும் மற்றும் நினைத்த காரியங்கள் நடக்கும்.


Share this valuable content with your friends


Tags

4-ல் குரு உலக விலங்குகள் தினம் அமாவாசை அன்று முடி திருத்தம் செய்யலாமா? 15.01.2019 rasipalan in pdf format ஏழாம் இடத்தில் சனி இருந்தால் திருமண வாழ்க்கை தடைபடுமா? வீட்டில் பித்தளை சிவலிங்கத்தை வைத்து வழிபடலாமா? ஆவணி மாத அமாவாசையன்று புது வீடு குடிப்போகலாமா? மனைவி கர்ப்பமாக இருக்கும்போது வீடு கட்ட தொடங்கலாமா? valayalai kanavil kandal enna palan திருமணத்தடைக்கு வாஸ்துதான் காரணமா? துருவனின் முடிவு paurnami சனி புத்தி நடந்தால் பலன் என்ன? lengam johtider pathilgal அத்தை பெண்ணை நிச்சயம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? first boy child சின்மயானந்தா முட்டை உடைந்து கரு வீணாவது போல் கனவு கண்டால் என்ன பலன்? வார ராசிபலன்கள் (09.09.2019 - 15.09.2019) PDF வடிவில் !!