1. துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம் உள்ளவர்கள் அதே ராசிக்காரர்களை திருமணம் செய்து கொள்ளலாமா?
🌟 துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம் உள்ளவர்கள் அதே ராசிக்காரர்களை திருமணம் செய்து கொள்ளலாம்.
🌟 ஆனால், கோச்சார பலன்கள் எதுவாயினும் இருமடங்காக நடக்கும்.
2. கோவிலில் விக்ரகங்களுக்கு மாலையில் அபிஷேகம் செய்யலாமா?
🌟 இறைவனுக்கு செய்யும் யாக வேள்விகளை கொண்டு அபிஷேகத்திற்கான காலத்தை நிர்ணயம் செய்து கொள்ளவும்.
3. கடக ராசி (பூசம் முதல் பாதம்) ஒன்பதாம் இடத்தில் சூரியன், புதன், சனி இணைந்து இருந்தால் என்ன பலன்?
🌟 நினைத்த காரியங்களில் வெற்றி பெறுவார்கள்.
🌟 கல்வி வேள்விகளில் சிறந்து விளங்கக்கூடியவர்கள்.
🌟 தன்னுடைய முயற்சியால் முன்னேற்றம் அடையக்கூடியவர்கள்.
🌟 இவையாவும் பொது பலன்களே ஆகும்.
4. கடக ராசிக்கு காதல் திருமணம் ஆகாது எனக் கூறுகிறார்கள். அது உண்மையா? இல்லையா?
🌟 கடக ராசிக்கு காதல் திருமணம் ஆகாது என்பது உண்மையன்று.
🌟 ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொருத்து மாற்றம் உண்டாகும்.
5. எனக்கும், என் தம்பிக்கும் ஒரே ராசி இருக்கலாமா? வௌ;வேறு நட்சத்திரமாக இருக்கும் பட்சத்தில், 7 1/2 சனி நடந்தால் அதன் பலன் எப்படி இருக்கும்?
🌟 வீட்டில் இருவருக்கும் ஒரே ராசியாக இருக்கலாம்.
🌟 7 1/2 சனி நடந்தால் குடும்பத்தில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும்.
6. நான் கும்ப லக்னம், ரிஷப ராசி. 6-ல் ராகு, 8-ல் செவ்வாயும், சனியும், 9-ல் குரு, 10-ல் சூரியனும், புதனும், 12-ல் சுக்கிரனும், கேதுவும் இருந்தால் எந்த மாதிரியான தொழில் அமைய வாய்ப்பு உள்ளது?
🌟 திசா புத்திகள் சாதகமாக இருப்பின் பயணங்கள் தொடர்பான மற்றும் நீர்நிலை சார்ந்த தொழில்கள் சாதகமாக அமையும்.
7. பெண்ணின் ஜாதகத்தில் லக்னம் இருக்கும் கட்டத்திலேயே ராகு, சூரியன், சுக்கிரன், சனி இருந்தால் அந்த பெண்ணின் குணநலன்கள் எப்படி இருக்கும்?
🌟 லக்னத்தில் உள்ள கிரகங்களை கொண்டு ஒரு பெண்ணின் குணநலன்களை முடிவு செய்வது என்பது தவறான ஒன்றாகும்.
🌟 முழு ஜாதகத்தை ஆய்வு செய்தே அவர்களின் குண நலன்களை அறிய இயலும்.