No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - தன் நண்பனுக்காக பெண் கேட்கும் சீவகன்...!!

Feb 08, 2023   Rathika   207    சீவக சிந்தாமணி 


சீவகன் தன் மன எண்ணங்களை கூறுதல்..

🌟 தனது மனதில் தோன்றிய எண்ணங்கள் அனைத்தையும் வெளிப்படையாக கூறாமல் எதிரில் இருப்பவரின் மனம் புண்படாமல் இருக்கும் வகையில் தன்னுடைய பதிலையும் உரைக்கத் தொடங்கினான் சீவகன்.

🌟 ஐயா! நீங்கள் என் மீது கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். ஆனால் என்னுடைய நண்பனான பதுமுகன் உங்களின் மகள் மீது எல்லையற்ற அன்பும், ஆசையும் கொண்டிருக்கின்றான். பார்ப்பதற்கு அழகாக இருப்பான். நீங்கள் கூறுவதை கேட்டு அதன்படி நடப்பான். உங்களுடைய வியாபார பணிகளுக்கும் உதவியாக இருப்பான். அவன் உங்களிடத்தில் மருமகனாக இல்லாமல் மகனாக இருப்பான். உங்களுடைய மகளின் பேச்சையும் கேட்டு நடந்து கொள்வான்.

🌟 ஆனால் என்னுடைய தந்தையோ கொஞ்சம் பிற்போக்குவாதியாக செயல்படக் கூடியவர். அதாவது தன்னுடைய நிலைக்கு நிகராகவும் அதற்கு மேல் உள்ள நிலையில் உள்ளவர்களின் பெண்ணையே எனக்கு மணந்து வைக்க அவர் விரும்பக் கூடியவர்.

🌟 அவர்கள் பார்த்து வைக்கும் பெண்ணையே நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது அவர்களுடைய ஆசையாகும். செல்வ செழிப்போடு கணக்கிட்டுப் பார்த்தால் உங்களை விட எங்களுடைய செல்வநிலை அதிகமாகவே இருக்கும்.

🌟 உழவர்கள் நெல் விளைவிக்கலாம். நீங்கள் பால் பண்ணையும் வைக்கலாம். எனினும் இருவருக்கும் இடையில் தரகர்களாக இருக்கக்கூடிய மக்கள் மட்டுமே பணக்காரர்களாக இருகிறார்கள். அதைப்பற்றி எல்லாம் உங்களிடம் பேசுவதற்கு எனக்கு விருப்பம் இல்லை. நீங்கள் பேசுவதைக் கேட்டு கேட்டு எனக்கும் அந்த பழக்கம் தொற்றி விட்டது போல தோன்றுகின்றது. எனக்கு பதிலாக என்னுடைய நண்பனான பதுமுகனுக்கு உங்களுடைய அதிர்ஷ்ட திருமகளை தருவதாக இருந்தால் எனக்கு மிக்க மகிழ்ச்சி என்று கூறினான்.

🌟சீவகன் கூறிய கூற்றுகளிலிருந்து நந்தகோன் அவனின் மனநிலையையும், சூழ்நிலையையும் அறிந்து கொண்டார்.

🌟 சீவகனும், நந்தகோன் முகத்தில் ஏற்பட்ட மாற்றங்களை அறிந்து கொண்டு யாருக்கும் எந்த பிரச்சனைகளும் ஏற்படாத வகையில் இருக்கும் சூழ்நிலையை கையாளத் தொடங்கினான். தன்னை கொல்ல வருபவனை சூழ்ச்சியாக வெற்றிக்கொள்ள தெரிந்தவனுக்கு, தனக்கு உதவியாக இருப்பவர்களின் மனதினை வெற்றிக்கொள்ள தெரியாமல் இருக்குமா!

🌟 நந்தகோனிடம் திருமணத்தைப் பற்றி நாம் மட்டுமே பேசிக் கொண்டு இருக்கின்றோமே! உங்களுடைய பெண்ணிடம் ஒரு வார்த்தை நீங்கள் கேட்கவில்லையா? ஓ... நீங்கள்தான் கூறியிருக்கின்றீர்களே! பசுக்களை யார் கொண்டு வருகிறார்களோ அவர்களுக்குத் தான் என் பெண்ணை மணமுடித்து வைக்கின்றேன் என்று.

🌟 உங்களுடைய மகள் நீங்கள் கூறிய சொற்களை மீறி நடக்க மாட்டார். அடக்கமான பெண் தானே. வேறு என்ன அவரிடம் எதிர்பார்க்க முடியும். இதற்கு மேல் உங்களுடைய விருப்பம் என்று கூறினான்.


🌟 சீவகன் கூறியது பெருமையாக இருந்தாலும், அவருடைய மனதில் ஏதோவொரு இனம்புரியாத கவலை இருப்பது போல தோன்றியது. நாம் மட்டுமே அனைத்தையும் முடிவு செய்கின்றோம்... அவளிடமும் ஒரு வார்த்தை கேட்க வேண்டும் என்ற எண்ணமும் அவ்விடத்தில் அப்பொழுது தான் அவருக்குத் தோன்றியது. பொறுமையாக சிந்தித்து செயல்படவும் தொடங்கினார். உடனே தன்னுடைய மனைவியை அழைத்தார்.

நந்தகோன் தன் மகளிடம் திருமணத்தைப் பற்றி வினவுதல்..

🌟 மனைவியிடம் நம்முடைய மகள் திருமணத்தைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்? பதுமுகனுக்கு நம்முடைய மகளை திருமணம் செய்து வைக்கலாமா? என்று கேட்டார்.

🌟 உடனே கோதாவரியும் திருமணம் செய்துகொண்டு வாழப் போவது நம்முடைய மகள் தான். எதிர்கால வாழ்க்கை அவளுடைய கரங்களில் தான் உள்ளது. ஆகவே அவளிடம் ஒருவார்த்தை கேளுங்கள் என்று கூறினாள்.

🌟 நந்தகோன் தன்னுடைய மகளை அழைத்து நீ என்ன சொல்ல விரும்புகின்றாய்? பதுமுகனையே திருமணம் செய்து கொள்கிறாயா? என்று வினவினார்.

🌟 உடனே அவருடைய மகள் நான் அவரை ஏற்கனவே பார்த்து இருக்கின்றேன் என்று கூறினாள்.

🌟 இதைக் கேட்டதும் என்ன சொல்வது என்று புரியாமல் நின்றுகொண்டிருந்தார் நந்தகோன். என்னதான் பெரியவர்கள் சிறியவர்களை அடக்கி வைத்து இருந்தாலும் அவர்களது கட்டுப்பாட்டுக்குள் சிறுவர்கள் என்றுமே அடங்குவது இல்லையே. சரி உனக்கு அவனை பிடித்திருக்கிறதா? என்று வினவினார்.

🌟 நாங்கள் இருவரும் ஏற்கனவே பலமுறை சந்தித்து இருக்கின்றோம். அதுமட்டுமில்லாமல் அவரை காதலித்து வருகிறேன் என்று கூறினாள்.

🌟 தன்னுடைய மகளின் கூற்றுக்களை கேட்டதும், இரு மனங்கள் இணைந்த பின்பு என்ன செய்ய முடியும் என்று சிரித்துக் கொண்டே திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிட்டது என்று கூறினார்.


Share this valuable content with your friends


Tags

அஷ்டமி விரதம் ganapathi நட்சத்திரம் உடையவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா? தேய்பிறையில் பெண் குழந்தைக்கு முதல் மொட்டை அடித்து daily horoscope 26.01.2020 in pdf format பூமி பூஜை வாஸ்து நாளில் செய்யலாமா? ஜுலை 13 ஜென்ம சனி... நன்மை செய்யுமா?.. தீமை செய்யுமா?.. வேலையின்போது பாதுகாப்புக்கும் நலத்துக்குமான உலக தினம் திரு.வி.கல்யாணசுந்தரம் ருத்ராட்சம் அணிந்து கொண்டு மாமிசம் சாப்பிடலாமா? வீட்டிற்கு பாம்பு வந்தால் நன்மையா? தீமையா? விருச்சக லக்னம் உடையவர்கள் எந்த தொழில் செய்தால் சிறப்பாக இருக்கும்? அமாவாசை அன்று தெருக்கோலம் போடலாமா? thulam . லக்னத்திற்கு 11ல் கேது இருந்தால் என்ன பலன்? வேப்பமரம் தீப்பற்றி எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? சப்பாத்தி கள்ளியை வீட்டில் சுகமாகவும் வாழ விரும்பக்கூடியவர்கள். டிசம்பர்