No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - சீவகனின் நண்பன் பதுமுகனுக்கு திருமணம் நிச்சயிக்கப்படுதல்...!!

Feb 08, 2023   Rathika   473    சீவக சிந்தாமணி 


பதுமுகனின் எல்லையற்ற மகிழ்ச்சி..

🌟 சீவகனும் மகிழ்ச்சியுடன் தன்னுடைய நண்பனான பதுமுகனிடம் சென்று இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொண்டான்.

🌟 பதுமுகனும் மிகுந்த மகிழ்ச்சி கொண்டான். எதிர்பாராத இந்த தருணத்தில் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது போல, யாருக்கும் கிட்டாத பொருள் தனக்குக் கிடைத்தது போல மிகுந்த மகிழ்ச்சி கொண்டான்.

🌟 தன்னுடைய நண்பனான சீவகனை கட்டி அணைத்துக் கொண்டு தன்னுடைய மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டான். அப்போது சீவகனிடம் நான் எப்பொழுதும் உன்னிடத்தில் உண்மையாகவும், நேர்மையாகவும், எந்த சூழ்நிலையாக இருந்தாலும் பக்கபலமாகவும் இருப்பேன் என்று தன்னை அறியாமல் எதிர்காலத்திற்கு உண்டான அனைத்து வாக்குறுதிகளையும் கொடுத்து விட்டான்.

🌟 என் ஆருயிர் தோழனே... ஏழ்பிறவியில் யான் செய்த நல்வினையே... என் உடன்பிறவா சகோதரனே... சீவகனே! இப்பொழுது நான் மகிழ்ச்சியுடன் இருக்கின்றேன். என்ன வேண்டுமானாலும் என்னிடம் கேள். என்னால் முடிந்த அளவு நீ வினவியதை செய்கிறேன் என்று கூறினான்.

🌟 காலம் வரும் தோழனே! அப்பொழுது நான் உன்னிடம் கேட்கிறேன் என்று மாயம் நிறைந்த எதிர்காலத்தை கருதி நிகழ்காலத்தில் அதற்கான பாதையும் உருவாக்கிக் கொண்டான் சீவகன்.

பதுமுகனுக்கு திருமணம் நிச்சயிக்கப்படுதல்..

🌟 நாளும், கோளும் நிறைந்த ஒரு நல்ல நாளில் பெரியோர்கள், உறவினர்கள், நண்பர்கள், ஊர் மக்கள் என பலர் சூழ பதுமுகனின் திருமணம் நிச்சயக்கப்பட்டது. திருமண சடங்குகள் யாவும் இனிதே நிறைவு பெற்றது. இருவரும் ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டு புன்னகை பூத்த வண்ணமாக மகிழ்ச்சியான தருணங்களை அனுபவித்துக் கொண்டிருந்தனர்.


🌟 சுட்டெரித்த சூரியன் மறைந்து இருளை பரப்ப, இருளில் வெண்மையான குளுமையை பரப்பும் சந்திரன் தோன்ற, தடைகளற்ற தனிமையில் சிக்கிய இளம் பறவைகள் ஒன்றாக சேர காத்துக்கொண்டு இருந்தனர்.

🌟 சந்திரனே வெட்கம் கொள்ளும் கோவிந்தையின் அழகில் மெய்மறந்து நின்று கொண்டிருந்தான் பதுமுகன்.

🌟 கற்பனை உலகிலிருந்த பதுமுகனை தன்னுடைய இனிமையான குரல் மூலமாக நிகழ் உலகத்திற்கு அழைத்து வந்தால் கோவிந்தை.

🌟 ஒலியும், ஒளியும் இல்லாத அமைதியான இருள் நிறைந்த, மதி நிறைந்து இருக்கும் அந்தப் பொழுதில் என்ன பேசுவது என்று புரியாமல் இருவரும் அமைதி காத்தனர்.

🌟 சிறு வினாடியும் பெரும் யுகமாக தோன்ற பதுமுகன் இனியும் அமைதி காத்தல் கூடாது என்று பல இரவுகள் வரும், போகும். ஆனால் மனதிற்கு பிடித்த பெண்ணுடன் ஊர் அறிய, உலகறிய மனைவியான என்னுடைய காதலியுடன் அமைதியான தருணங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதுபோல முதல் பேச்சை தொடங்கினான் பதுமுகன்.

🌟 உன்னுடைய தந்தையோ மிகவும் கண்டிப்பானவர். அவர் எப்பொழுதும் உன்னை தனியே வெளியே அனுப்ப மாட்டார். அதுவும் ஆடவர்கள் நிறைந்திருக்கும் பகுதியில் பெண்கள் எப்பொழுதும் வர மாட்டீர்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் எப்படி நீ என்னை பார்த்தாய். நீ என்னை பார்த்து இருப்பதாக கூறி இருக்கின்றாய் என்று சிலர் கூற நான் கேட்டிருக்கின்றேன். இது உண்மையா? என்று வினவினான்.

🌟 பதுமுகன் கூறி முடிப்பதற்குள் கோவிந்தை இல்லை நான் பொய்யுரைத்தேன். உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் தான் அப்படி சொன்னேன் என்று கூறினாள்.

🌟 பதுமுகனுக்கு வெளியில் சொல்ல முடியாத அளவில் மனதளவில் மிகவும் மகிழ்ச்சியாகவும், ஆயிரம் காளைகளை அடக்கியது போல சிறந்த வீரனாகவும் அந்த கணப்பொழுதில் உணர்ந்தான்.

🌟 காளையும் மயங்கும் பாவையின் கடைக்கண் பார்வையில் என்பது போல அனைத்தையும் மறந்து சிலை போல நின்றான். பின் நான் உன்னை பலமுறை பார்த்திருக்கின்றேன் என்று கூறினான்.

🌟 கோவிந்தையும் உடனே சில இடங்களில் மறைமுகமாக யாரும் அறியாத வண்ணத்தில் சில கணப்பொழுதில் கண்டிருக்கின்றேன். பசுவைப் பார்த்து தான் விலை பேசுவோம், மடியையும் தொட்டுப் பார்ப்போம் என்று கூறி புன்னகை பூத்தாள். ஆமாம் என்னை உங்களுக்கு பிடித்திருக்கிறதா? என்று கேட்டாள் இறுதியாக.

🌟 உடனே காலத்தை தாமதிக்காமல் உன்னை பிடித்திருப்பதால்தான் உன் கையினை என் கையில் பிடித்து இருக்கின்றேன் என்று கூறினான். அப்போதுதான் கோவிந்தையும் நிகழ் உலகத்திற்கு வந்தாள். சிரிப்பலைகள் நிரம்பி வழிந்தன.

🌟 நான்மதி ஆரச்சுவர் சூழ, சீதளம் குறைந்து வெம்மை மிக, அறையிருள் நீங்கி பொழுது புலர்தலே என்பது போல இன்பக் கடலில் மூழ்கி மகிழ்ச்சி அலைகளின் மத்தியில் பதுமுகன் கோவிந்தை நீந்திக் கொண்டு இருந்தனர்.

🌟 இராசமாபுரத்தில் செல்வம் நிறைந்த பெரு வணிகர்கள் பலர் இருந்தனர். அதில் அனைவராலும் அறிந்து கொள்ளக் கூடியவராக இருந்தவர் கந்துக்கடன். வியாபாரம் என்றாலே போட்டி தானே. ஒருவர் மட்டும் இருந்தால் அது எப்படி? அவருக்கு நிகர் இன்னொருவரும் இருக்கின்றார். அவர் தான் சீதத்தன் என்பவர் ஆவார்.

🌟 வணிகத்தில் லாபமும், நஷ்டமும் என்பது வாளின் கூர்மையை போன்றதாகும். அதை பயன்படுத்தும் விதத்தில் பயன்படுத்தினால் மேன்மை ஏற்படும். சில நேரங்களில் கூர்மையான வாள்கள் விரும்பத்தகாத விளைவுகளையும் ஏற்படுத்தி விடுகின்றன. அதுபோல தான் சீதத்தன் என்னும் வணிகன் நிலையும்.


Share this valuable content with your friends