No Image
 Fri, Jul 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - கந்துக்கடனின் மகனாக சிந்தாமணி...!!

Feb 01, 2023   Nandhini   127    சீவக சிந்தாமணி 


🌟 சண்பகமாலை நிகழவிருக்கும் எந்தவொரு நிகழ்வையும் எடுத்து கூறாமல் உன்னுடைய குழந்தையின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று எண்ணினால் நான் கூறுவதை இப்போதே செய் என்று எடுத்து கூறினாள்.

🌟 இப்போது இருக்கும் சூழலில் எதையும் செயலாற்ற முடியாத நிலையில் இருப்பதால் சண்பகமாலை கூறியதை செய்ய துணிந்தாள். தன்னுடைய சிந்தாமணியை இறுக அணைத்து நெற்றில் ஒரு அன்பு முத்தத்தினை கொடுத்து குழந்தையை கீழே மெதுவாக வைத்தாள்.

🌟 சண்பகமாலை காலம் குறைவாக இருக்கின்றது விரைவாக என்னுடன் வருவாயாக என்று அழைத்தாள். தன்னுடைய சிந்தாமணியிடம் இருந்து பிரிய மனம் இல்லாமல் பிரிந்து சென்றாள்.

🌟 அந்த வேளையில் அந்நகரத்திலுள்ள கந்துக்கடன் என்னும் வணிகன் ஒருவன் இறந்த தன் மகனைப் புதைப்பதற்காக வந்து கொண்டு இருந்தான். அவன் அருகில் வருவதை உணர்ந்த இருவரும் அயலிலே (அருகிடம்) சென்று மறைந்திருந்தனர்.

🌟 உடனே விசையை தன்னுடைய விரலில் இருந்த அரச மோதிரத்தினை அந்தக் குழந்தை கையில் அணிவித்தாள். கள்ளக் காதலில் உள்ளம் பறிகொடுத்தவள் சுமக்க மாட்டாமல் இறக்கி வைத்த சுமை அல்ல இது. அரச மகன் தான் என்பதை தெரிவிக்க வேண்டும் என்பதற்காக.

🌟 கண்டதும் மகிழ்ச்சி அளிப்பான் என்று எதிர்பார்த்த என்னை கண்டதும் கவலையில் மூழ்க செய்தானே! என்ன செய்தேன் என்று புலப்படவில்லையே... தன் மார்போடு இணைத்து துள்ளி விளையாட வேண்டியவன் எந்தவித துடிப்பும் இல்லாமல் என்னுடைய கரங்களில் அமைதியாக இருக்கின்றானே... இனி என்ன செய்யப் போகின்றோம்? என்ற ஆழ்ந்த கவலையுடன் தன்னுடைய மகனை கரங்களில் ஏந்திய வண்ணமாக இடுகாட்டிற்குள் நுழைந்தான் கந்துக்கடன்.

🌟 அவன் இடுகாட்டில் நுழைந்ததும் ஒரு குழந்தையின் அழுகுரலானது அவன் செவிகளில் எட்டியது. அந்த ஒலியை கேட்டதும் ஒரு வேளை தன்னுடைய மகன் பிழைத்து விட்டானோ? என்று தன்னுடைய மகனை பார்த்தான். ஆனால் குழந்தையிடம் எந்தவித அசைவும் இல்லாமல் இருந்தது. பின்பு எங்கிருந்து அந்த அழுகுரல் கேட்கிறது? என்று அழுகுரல் வரும் திசை நோக்கி இடுகாட்டில் தேடினான்.


🌟 சற்றும் எதிர்பார்க்காத வண்ணமாக இடுகாட்டில் ஓரிடத்தில் தன்னம் தனியாக ஒரு குழந்தை மட்டும் அழுது கொண்டு இருந்தது. அந்தக் குழந்தையின் எட்டுத்திக்கிலும் சுற்றிப் பார்த்தான். ஒருவரையும் காணவில்லை. அப்பொழுது அவன் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. அதாவது வறுமையில் சிக்கிய வழியவனுக்கு ஏதோ பெரிய அளவிலான தங்கக்குவியலே கிடைத்தது போல மகிழ்ச்சியடைந்தான். தன்னுடைய மனைவியிடம் இக்குழந்தையை ஒப்படைத்துவிட்டு அவளுடைய சிந்தையில் இருக்கக்கூடிய துன்பத்தை களைந்தெறிய வேண்டும் என்றும் எண்ணினான்.

🌟 இறந்த குழந்தையை கீழே வைத்துவிட்டு உயிருடன் இருக்கும் குழந்தையை கையில் எடுத்த பொழுது அக்குழந்தையானது தும்பியது. அப்பொழுது இங்கு நிகழ்ந்து கொண்டிருக்கக்கூடிய அனைத்தையும் மறைவாக நின்று கவனித்துக் கொண்டிருந்த விசையை தன்னுடைய குழந்தையை 'சீவ' என்று வாழ்த்தினாள்.

🌟 இந்த ஒலியைக் கேட்டதும் யார்? என்று கேட்ட வண்ணமாக கந்துக்கடன் தான் நின்ற இடத்தில் இருந்து தேடினார். அவன் தேடியும் அவன் பார்வையில் யாரும் புலப்படவில்லை. ஆனால் அந்த ஒலியானது இவன் காதுகளில் திரும்பத் திரும்ப கேட்ட வண்ணமாக இருந்தது.

🌟 ஏனென்றால் சீவன் இழந்தவனுக்கு சீவனாக இருந்தவன் அல்லவா. பல இடத்தில் தேடியும் யாரும் கிடைக்காததால் இனியும் காலம் தாமதிக்கக்கூடாது என்று எண்ணி தான் எடுத்து வந்த தன்னுடைய இறந்த குழந்தையை புதைத்துவிட்டு, புதையலாக கிடைத்த இந்த புதிய மகனை எடுத்துக்கொண்டு வீடு நோக்கி விரைந்து சென்றான்.

🌟 பத்து மாதம் வயிற்றில் சுமந்து காத்த மகவை இறக்கி வைத்து அதைக் கண்டு மகிழ வேண்டியவள். அதனை மார்போடு அணைத்துப் பாலூட்டக் காத்திருந்தவள். வாய் திறந்து அழாத அந்தக் குழந்தையைச் ஜடமாகக் கண்டவள். இப்பொழுது மனம் திடப்படுத்தி கொள்ளப் புதிய செய்தி கொண்டு வந்தான்.

கந்துக்கடனின் துன்பத்தை நீக்கிய சிந்தாமணி...

🌟 தன்னுடைய மனைவியான சுநந்தையை அழைத்த வண்ணமாக நம்முடைய மகன் பிழைத்து விட்டான், அவனுக்கு ஆயுள் கெட்டி. போகும் வழியிலே விழித்துக் கொண்டான் என்று அவளிடம் சொல்லி தன்னிடம் இருந்த குழந்தையை தன் மனைவியிடம் கொடுத்தான்.

🌟 தன் மழலைச் செல்வம் தன்னிடம் திரும்ப சேர்ந்துவிட்டது என்பதால் அவள் மிகவும் மகிழ்ந்து அவனை வாரி எடுத்து அணைத்துக் கொண்டாள்.

🌟 கந்துக்கடன் இடுகாட்டிலிருந்து தன்னுடைய புதல்வனை எடுத்துச் சென்றதும் மறைவில் இருந்தவர்கள் வெளிவந்தனர். விசையைக்கோ என்ன காரியம் செய்துவிட்டோம்? என்பது போல சிந்திக்கத் துவங்கினாள். இனி அடுத்து என்ன செய்வது? என்று தெரியாமல் நின்றுகொண்டிருந்த ஆதரவற்ற பேதயை, தனித்தே விடாமல் இறை வடிவில் இருந்த அவளுடைய தோழி அழைத்து கொண்டு தண்டகாரண்யத்தில் சென்று துறவு மேற்கொள்பவர்களிடம் விட்டுவிட்டு மறைந்து சென்றாள்.

🌟 வேதனைகள் நிறைந்த இந்த வாழ்க்கையில் இறைவனே துணை என்று இருந்தவள் இறைவனின் சித்தப்படியே துறவு மேற்கொள்பவர்களுடன் இணைந்து தன் மகனுடைய நலன் கருதி துறவும், நோன்பும் மேற்கொண்டாள்.

🌟 நகரத்திலோ இறந்த மகன் உயிர் பிழைத்து விட்டான் என்ற செய்தியும், வியப்பும் அவர்களிடத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த மகிழ்ச்சியான செய்தியை ஊர் மக்களிடம் பறையடித்து தெரிவித்தார் கந்துக்கடன். அவர்கள் இல்லத்தில் இருந்த கவலையானது சீவகன் வீட்டில் நுழைந்ததும் நீங்கின.


🌟 கந்துக்கடன் மகன் கிடைத்து விட்டான் என்ற செய்தி ஊர் முழுவதும் பரவியதுமட்டுமல்லாது கட்டியங்காரனின் செவிக்கும் எட்டியது. ஏனென்றால் கட்டியங்காரனும், கந்துக்கடனும் நெருங்கிய உறவினர்கள் போல பழகினார்கள். அவனுடைய குழந்தை தவறியது என்ற செய்தி கேட்டதும் மிகுந்த வருத்தம் கொண்டான்.

🌟 ஆனால் இறந்த குழந்தை மீண்டும் பிழைத்தது என்று அறிந்தவுடன் பொன்னையும், வாழ்த்துரைகளையும் அனுப்பி வைத்து தன்னுடைய மகிழ்ச்சியையும் தெரிவித்தான். காலம் மெதுவாக செயல்பட்டாலும் காரியத்துடன் செயல்படுகின்றது.


Share this valuable content with your friends