No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கன்னி ராசியில் கேது இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Oct 19, 2018   Ananthi   766    நவ கிரகங்கள் 

🌟 கன்னி ராசியின் அதிபதி புதன் பகவான் ஆவார். புதன் பகவானுடன், கேது நட்பு என்ற நிலையிலிருந்து செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம்.

🌟 எப்பொழுதும் புன்சிரிப்பு தவழும் முகத்துடன் இருக்கக்கூடியவர்கள்.

🌟 எதையும் முன்னின்று வழி நடத்தக்கூடியவர்கள்.

🌟 சாத்தியமான பேச்சுக்கள் மூலம் அனைவரையும் கவரக்கூடியவர்கள்.

🌟 இவர்களின் செயல்பாடுகளை புரிந்து கொள்வது என்பது சற்று கடினமானது.

🌟 மென்மையான அணுகுமுறைகளை உடையவர்கள்.

🌟 நினைவுத்திறன் அதிகம் உடையவர்கள்.

🌟 ஆன்மீக செயல்பாடுகளில் ஆர்வம் உடையவர்கள்.

🌟 செய்யும் செயல்களில் ஆதாயத்துடன் செயல்படக்கூடியவர்கள்.

🌟 பயணத்தில் விருப்பம் கொண்டவர்கள்.

🌟 பெரிய மனிதர்களிடம் செல்வாக்கு கொண்டவர்கள்.

🌟 புகழுக்கு மயங்கக்கூடியவர்கள்.

🌟 பெருந்தன்மையான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 எடுத்த காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கக்கூடியவர்கள்.

🌟 மறைமுக செயல்பாடுகளில் நாட்டம் கொண்டவர்கள்.

🌟 கவலைகளை வெளிப்படுத்தாதவர்கள்.

🌟 எதையும் சமாளிக்கும் திறமை உடையவர்கள்.

🌟 தங்களை அழகுபடுத்திக் கொள்வதிலும், உடைகள் சம்பந்தமான விஷயங்களிலும் ஆர்வம் உடையவர்கள்.

🌟 வாசனை திரவியங்களை அதிகம் பயன்படுத்துபவர்கள்.

🌟 அறுசுவை உணவுகளை ருசித்து உண்ணக்கூடியவர்கள்.

🌟 மூலிகை வைத்தியம் மற்றும் சித்த மருத்துவம் பற்றிய விஷயங்களை அறிந்தவர்கள்.


Share this valuable content with your friends