No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




எந்த விரலில் திருநீறு இட வேண்டும்?

Oct 13, 2018   Ananthi   719    ஜோதிடர் பதில்கள் 

1. திருமண வேஷ்டி சட்டையை தவறுதலாக அனாதை ஆசிரமத்திற்கு கொடுத்துவிட்டேன். அதனால் ஏதாவது தவறு நடக்குமா?

🌟 கவனக்குறைவால் நடைபெற்றமையால் எவ்விதமான தவறும் இல்லை.

2. தாய்மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள ஜாதகம் பார்க்க வேண்டுமா? இரு வீட்டாரின் சம்மதம் போதுமா? அல்லது மனப்பொருத்தம் போதுமா?

🌟 தாய்மாமன் மகளை திருமணம் செய்ய ஜாதகம் பார்க்க வேண்டும்.

🌟 பொருத்தங்கள் கூடி வருமாயின் இரு வீட்டாரின் சம்மதத்துடன் மகிழ்ச்சியான மனப்பொருத்தம் கொண்டு இல்வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவும்.

3. மீன லக்னத்தில் புதனும், சுக்கிரனும் சேர்ந்திருந்தால் என்ன பலன்?

🌟 நினைத்த காரியத்தை செய்து முடிக்கக்கூடியவர்கள்.

🌟 துணிவு கொண்டவர்கள்.

🌟 ஒப்பனைகளில் விருப்பம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொது பலன்களே.

4. நான் சிம்ம ராசி, பூரம் நட்சத்திரம். எந்த ராசிக்கல் அணிந்தால் நல்லது?

🌟 லக்னம் அறிந்து ராசிக்கற்களை அணிவது மேன்மையை தரும்.

5. எந்த விரலில் திருநீறு இட வேண்டும்?

🌟 வலது கையின் நடு மூன்று விரலினாலும் நெற்றியில் திருநீறு இடலாம்.

6. தனுசு ராசி, பூராடம் நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 பல திறமைகளை கொண்டவர்கள்.

🌟 சுறுசுறுப்புடன் செயல்படக்கூடியவர்கள்.

🌟 அழகு உடையவர்கள்.

🌟 தர்ம சிந்தனை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொது பலன்கள் ஆகும்.


Share this valuable content with your friends