No Image
 Sat, Sep 21, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




விநாயகரை கனவில் கண்டால் என்ன பலன்?

Oct 08, 2018   Ananthi   1142    கனவு பலன்கள் 

1. தங்கத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 தங்கம் போன்ற உலோகங்களை கனவில் கண்டால் நன்மை உண்டாகும்.

2. விநாயகரை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 விநாயகரை கனவில் கண்டால் செய்யும் செயல்களில் இருந்த வந்த தடைகள் அகலும்.

3. காமாட்சி விளக்கைக் கழுவுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 காமாட்சி விளக்கைக் கழுவுவது போல் கனவு கண்டால் எதிர்பார்த்த தனவரவில் இழுபறி நிலை உண்டாகி, பின்பு லாபம் கிடைக்கும்.

4. இறந்த ஒருவருக்கு நான் மாலை போடுவது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌟 இறந்த ஒருவருக்கு மாலை போடுவது போல் கனவு கண்டால் சுபச் செய்திகள் வரும்.

5. திருமணம் ஆகாத எனக்கு, தாலிக்கயிறு கழுத்தில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தாலிக்கயிறு கழுத்தில் இருப்பது போல் கனவு கண்டால் விரும்பிய எண்ணம் கூடிய விரைவில் ஈடேறும்.


Share this valuable content with your friends