No Image
 Wed, Jun 26, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஐயப்பன் சுவாமியை கனவில் கண்டால் என்ன பலன்?

Oct 05, 2018   Ananthi   13617    கனவு பலன்கள் 

1. ஐயப்பன் சுவாமியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 ஐயப்பன் சுவாமியை கனவில் கண்டால் சுபச் செயல்கள் நடைபெறும்.

2. என் கணவர் வீட்டின் முற்பகுதியில் பல பாம்புகளை கொல்வது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌟 உங்கள் கணவர் வீட்டின் முற்பகுதியில் பல பாம்புகளை கொல்வது போல் கனவு கண்டால் இதுவரை மனதில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

3. கோவில் இடிந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கோவில் இடிந்தது போல் கனவு கண்டால் முயற்சிகள் மூலம் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்க காலதாமதமாகும்.

4. சர்ப்பத்தைக் கண்டு நான் பயப்படுவது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌟 சர்ப்பத்தைக் கண்டு நீங்கள் பயப்படுவது போல் கனவு கண்டால் செய்யும் செயல்களில் நிதானத்துடன் செயல்படவும்.

5. என் மகளுக்கு விபத்து ஏற்படுவது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌟 உங்கள் மகளுக்கு விபத்து ஏற்படுவது போல் நீங்கள் கனவு கண்டால் இதுவரை இருந்து வந்த இன்னல்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.

6. சண்டைப்போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 சண்டைப்போடுவது போல் கனவு கண்டால் மனதில் இருந்த பிரச்சனைகள் நீங்கும்.

7. மீன்களை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 மீன்களை கனவில் கண்டால் மனதில் நினைத்த காரியம் கைகூடும்.


Share this valuable content with your friends