No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பூமி பூஜை போட வாஸ்து நாள் உகந்ததா?

Sep 25, 2018   Ananthi   514    வாஸ்து 

சுபமுகூர்த்த நாளை குறிப்பதற்கு கிரகங்களின் நகர்வுகளை கணக்கிட்டு பஞ்சாங்கத்தின் உதவியுடன் வாரம், திதி, யோகம், கரணம், நட்சத்திரம் இவைகளை அடிப்படையாக கொண்டு முகூர்த்தம் குறிக்கப்படுகிறது.

🌟 இதில் தலையற்ற நட்சத்திரம், காலற்ற நட்சத்திரம், உடலற்ற நட்சத்திரம் என்று உண்டு. அவைகளை நீக்கி விட்டு அஷ்டமி, நவமி, பிரதமை, அமாவாசை போன்ற திதிகளை நீக்கிவிட்டு, மரணயோகம், பிரபல அரிஷ்ட யோகம் போன்ற யோகங்களை நீக்கிவிட்டு, செவ்வாய்க்கிழமை, சனிக்கிழமை போன்ற கிழமைகளை நீக்கிவிட்டு, வளர்பிறையில் வரக்கூடிய சில நாட்களே உன்னதமான முகூர்த்த நாளாக நாள் குறிக்கிறார்கள்.

🌟 அதிலும் இராகு காலம், குளிகை, எமகண்டம் போன்றவற்றை தவிர்த்து ஒன்றரை மணி நேரத்தையும் முகூர்த்த நேரமாக கணக்கிட்டுள்ளார்கள்.

🌟 இவ்வளவு நுட்பம் வாய்ந்த ஒரு முகூர்த்தத்தில், ஒரு நாள் முழுவதும் வாஸ்து பகவான் விழித்திருப்பான் என்று சொன்னால் இதை எப்படி ஏற்றுக் கொள்வது?

🌟 கிரகங்களின் நகர்வுகளை கொண்டு கணக்கிடும் பஞ்சாங்கத்தில் கூட வாஸ்து நாளுக்கு என்று எந்த கணக்கும் இல்லை என்பது எத்தனை பேருக்கு தான் தெரியும்.

நீங்கள் செய்யக்கூடிய செயல் சுபநிகழ்ச்சியே. அந்த சுபநிகழ்ச்சிக்கு உண்டான நாட்களையும், நேரத்தையும், முகூர்த்தத்தையும் தேர்ந்தெடுப்பது உங்களுடைய கையிலேயே உள்ளது.


Share this valuable content with your friends