No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஏழரைச் சனியை எவ்வாறு கண்டுபிடிப்பது?

Sep 24, 2018   Ananthi   2203    ஜோதிடர் பதில்கள் 

1. இறந்த என் தந்தைக்கு எப்போது திதி கொடுக்க வேண்டும்?

🌀 தந்தை தவறிய நாளில் உள்ள திதி, வளர்பிறையா? அல்லது தேய்பிறையா? என அறிந்து அவர் தவறிய தமிழ் மாதத்தின் இறந்த திதியன்று திதி கொடுக்கவும்.

2. பெண் குழந்தைக்கு தலையில் இரண்டு சுழிகள் இருந்தால் நல்லதா? கெட்டதா?

🌀 பெண் குழந்தைக்கு தலையில் இரண்டு சுழிகள் இருந்தால் சுட்டித்தனமும், விளையாட்டுத்தனமும் அவர்களிடத்தில் அதிகம் இருக்கும்.

3. ஆடி மாதம் குழந்தை பிறந்தால் குடும்பத்திற்கு நல்லதா? கெட்டதா?

🌀 ஆடி மாதம் குழந்தை பிறந்தால் குடும்பத்திற்கு நல்லது. குழந்தை பிறப்பு என்றுமே நன்மையை அளிக்கும்.

🌀 நாம் செய்த செயல்களால் விளைந்த செயல்களை, எதுவும் அறியாத குழந்தைகளின் மீது சுமத்துவது சரியானதன்று.

4. ஏழரைச் சனியை எவ்வாறு கண்டுபிடிப்பது?

🌀 சனிபகவான் ஜென்ம ராசியில் இருக்கும்போது 2 1/2 வருடமும், ஜென்ம ராசிக்கு முன் ராசியில் இருக்கும்போது 2 1/2 வருடமும், ஜென்ம ராசிக்கு பின் ராசியில் இருக்கும்போது 2 1/2 வருடமும் ஆக மொத்தம் 7 1/2 வருடம் மூன்று ராசிகளில் இருப்பது ஏழரைச் சனியாகும்.

5. தேய்பிறையில் குழந்தைக்கு முதல் மொட்டை அடிக்கலாமா?

🌀 தேய்பிறையில் குழந்தைக்கு முதல் மொட்டை அடிக்கலாம்.

🌀 தேய்பிறையை காட்டிலும், வளர்பிறை நன்மையை தரும்.

6. பீரோவை வீட்டின் எந்த இடத்தில் வைக்க வேண்டும்?

🌀 பீரோவை குபேர மூலையில் (தென்மேற்கு) வைக்க வேண்டும்.


Share this valuable content with your friends