No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




குருப்பெயர்ச்சி பலன்கள் 2018-2019 - துலாம் ராசி!!

Sep 20, 2018   Ananthi   530    இன்றைய ராசிபலன் 

சூழலை தகுந்த முறையில் எடைபோட்டு அதற்கு தகுந்தாற் போல் தன்னை மாற்றி கொள்ளும் துலா ராசி அன்பர்களே !!

இதுவரை உங்களது ராசியில் இருந்து வந்த குருபகவான் இரண்டாம் இடமான குடும்ப ஸ்தானதிற்கு பெயர்கின்றார். புதிய நபர்களிடம் நிதானத்துடன் பழகவும். உறவினர்களிடம் பேசும் போது கவனம் வேண்டும். வாக்குறுதிகளை தவிர்க்கவும்.

இந்த குருப்பெயர்ச்சியில் சுபச் செலவுகள் உண்டாகும். நெருக்கமானவர்களால் மனகஷ்டம் ஏற்படலாம். எண்ணிய காரியங்கள் காலதாமதமாக நடைபெறும். தடைகளை தகர்த்து போராடும் குணம் மேம்படும். மனதில் புதுவிதமான உற்சாகம் உண்டாகும். தனலாபம் அதிகரிக்கும். நிலுவையில் இருந்த கடன் பாக்கிகள் வசூலாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், நிம்மதியும் நிலவும். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருந்த தம்பதிகள் தற்போது இணைவீர்கள். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். போட்டித் தேர்வுகளில் நல்ல முடிவுகள் கிடைக்கும். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். வாகன பயணங்களில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும்.

மனதில் புதிய இலக்கை நிர்ணயம் செய்து சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும். அரசு சம்பந்தப்பட்ட செயல்களில் அனுகூலம் உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். புத்திரருக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். புதிய முதலீடுகள் செய்யும் போது பலமுறை திட்டமிட்டுச் செய்வது நன்மையை அளிக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களால் அலைச்சலும், ஆதாயமும் உண்டாகும். ஒரு சிலருக்கு புண்ணிய தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் தொடர்பான சவாலான வேலைகளையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். பதவி உயர்வும், பொறுப்புகளும் அதிகரிக்கும். கணவன் - மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தரர்களுக்கு :

உத்தியோகஸ்தரர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். முயற்சிக்கேற்ற பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். தற்காலிகப் பணியில் இருப்பவர்களுக்கு பணி நிரந்தரமாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கு அலைச்சல் ஏற்பட்டாலும் நல்ல சம்பளத்துடன் கூடிய நல்ல நிறுவனத்தில் பணி வாய்ப்புகள் கிடைக்கும்.

வியாபாரிகளுக்கு :

வியாபாரத்தில் செய்யும் சில மாற்றங்களால் விற்பனையும் இலாபமும் அதிகரிக்கும். வியாபார போட்டிகள் மற்றும் வியாபார நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனைக்கு ஏற்ப புதிய முதலீடுகள் செய்வீர்கள். அனுபவம் மிக்க வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். கடையை தங்கள் ரசனைக்கேற்ப அழகுபடுத்துவீர்கள்.

மாணவர்களுக்கு :

மாணவ, மாணவிகளே உங்களின் திறமைகள் வெளிப்படுவதற்கான போட்டிகளில் கலந்துகொண்டு பரிசும், பாராட்டும் பெறுவீர்கள். தேர்வுகளில் கூடுதல் மதிப்பெண்கள் பெற மிகவும் கவனமாக படிக்க வேண்டி இருக்கும். சிலர் வெளிநாடு சென்று படிப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.

பெண்களுக்கு :

பெண்கள் குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்துச் செல்லவும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். பெற்றோரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். பணி சம்பந்தமான எதிர்பார்த்த தகவல்கள் காலதாமதமாக கிடைக்கும். உடனிருப்பவர்களிடம் எந்த விஷயத்தையும் சொல்லும் போது நிதானம் வேண்டும்.

கலைஞர்களுக்கு :

கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் சாதகமாகும். வீண் அலைச்சல் குறையும். பயணங்கள் மகிழ்ச்சியான புதுவிதமான அனுபவமாக அமையும். பிரபல கலைஞர்களால் பாராட்டப்படுவீர்கள். மறந்திருந்த திறமைகள் மற்றும் படைப்புகள் வெளிபட்டு பாராட்டப்படுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு :

அரசியல்வாதிகள் மற்றவர்களின் பிரச்சனைகளில் தலையிடும் போது சிந்தித்து செயல்படவும். எதிரிகளின் மூலம் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். பதவி மேன்மைக்கான முயற்சிகள் தாமதமான பலனை அளிக்கும்.

விவசாயிகளுக்கு :

விவசாயிகள் எதிர்பார்த்த மகசூலும், லாபமும் கிடைக்கப் பெருவீர்கள். புதிதாக நவீன இயந்திரம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும்.

பரிகாரம் :

லட்சுமி நரசிம்மரை தரிசித்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். வெள்ளியன்று பத்ரகாளி அம்மனுக்கு அகல் விளக்கு ஏற்றி வழிபட்டு வர காரிய தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.


Share this valuable content with your friends


Tags

gyuru நரசிம்ம சாமியை கனவில் கண்டால் என்ன பலன்? முகூர்த்த நாள் தவிர மற்ற தினங்களில் திருமணம் செய்யலாமா? தை மாதம் வீடு கட்டத் தொடங்கலாமா? dector santhiran 01.03.2019 Rasipalan in pdf Format !! தொட்டதெல்லாம் பொன்னாகும் நான் பிறந்த ஞாயிற்றுக்கிழமையில் முகச்சவரம் கழிவறையில் மாட்டி கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? தினசரி ராசிபலன் (07.03.2022) Vassthu பரீட்சையில் தோல்வி அடைந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்? sathurththi இரக்க குணம் கொண்டவர்கள் இவர்களே! தினசரி ராசிபலன்கள் நாரதர் கீழ்நிலை தண்ணீர் தொட்டியை வடகிழக்கு மூலையில் தெற்கு வடக்கில் கட்டலாமா? 10.03.2019 rasipalan in pdf format குழந்தைகள் விளையாடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?