No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பில்லி, சூனியத்தால் ஏற்படும் விளைவுகள் பழிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

Sep 19, 2018   Ananthi   535    ஜோதிடர் பதில்கள் 

1. பில்லி, சூனியத்தால் ஏற்படும் விளைவுகள் பழிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

🌷 கடல் நீரால் வீட்டை சுத்தப்படுத்த வேண்டும்.

🌷 மேலும், வீட்டில் உள்ள கல் உப்பினை கொண்டு நீரில் கரைத்து வீட்டை தூய்மைப்படுத்த வேண்டும்.

2. லக்னத்தில் கேது இருந்தால் என்ன பலன்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

🌷 லக்னத்தில் கேது இருந்தால், அவர் அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்திருப்பார்.

🌷 சாதனையாளராகவும், எதிலும் வெற்றி பெறுபவராகவும் இருப்பார்.

🌷 பொருளாதார வசதி நிலையானதாக இருக்கும்.

பரிகாரம் :

🌷 கேதுவிற்கு அதிதேவதையான விநாயகரை அருகம்புல் மாலை போட்டு வணங்கி வர கேதுவினால் ஏற்படும் பிரச்சனைகளின் வீரியம் குறையும்.

3. தொடையில் மச்சம் இருந்தால் நல்லதா? கெட்டதா?

🌷 இடதுபுற தொடையில் மச்சம் இருந்தால் பொருளாதார சிக்கலுடன் வாழ்வார்கள்.

🌷 தன் விருப்பம்போல செயல்களைச் செய்து பிரச்சனைகளை தேடிக் கொள்வார்கள்.

🌷 வலதுபுற தொடையில் மச்சம் இருந்தால் தன் முயற்சிகள் மூலம் முன்னேற்றம் அடையக்கூடியவர்கள்.

4. எனக்கு வாகன யோகம் உண்டா? இல்லையா? என்பதனை எப்படி அறிவது?

🌷 ஒருவரின் ஜாதகத்தை கொண்டே அவருக்கு வாகன யோகம் உண்டா? இல்லையா? எனக் கூற இயலும்.

🌷 ஜாதகத்தில் சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் சொகுசு வாகன யோகம் உண்டு.

🌷 ஜாதகத்தில் சனி பலம் பெற்றிருந்தால் கனரக வாகன யோகம் உண்டு.

🌷 ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெற்றிருந்தால் வேளாண்மை சம்பந்தப்பட்ட வாகன யோகம் உண்டு.

5. குழந்தை பிறக்கும்போது மாலை சுற்றி இருந்தால் நல்லதா? கெட்டதா?

🌷 குழந்தை மாலை சுற்றி பிறந்தால் தாய்மாமனுக்கு ஆகாது.

🌷 தாய்மாமன் குழந்தையின் முகத்தை முதன் முதலில் நல்லெண்ணெயில் பார்த்த பின்பே நேரடியாக பார்க்க வேண்டும்.

Tagged  pilli

Share this valuable content with your friends