No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வெளவால் வீட்டிற்குள் வந்தால் நல்லதா? கெட்டதா?

Sep 19, 2018   Ananthi   29401    ஜோதிடர் பதில்கள் 

1. தொழிலை விரிவுப்படுத்தவும், அதில் சிறந்து விளங்கவும் எந்தக் கடவுளை வணங்க வேண்டும்?

🌷 ஜாதக ரீதியாக தொழில் பாவகத்திற்கான கடவுளை வணங்குவதால் தொழிலில் முன்னேற்றம் அடையலாம்.

🌷 பொதுவாக விஷ்ணுவின் அவதாரமான பெருமாளை வணங்குவது சிறப்பு.

2. எதிரிகளை வெற்றிக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?

🌷 எதிரிகளின் தொல்லைகள் நீங்க லட்சுமி நரசிம்மரை வணங்க வேண்டும்.

🌷 பிரத்தியங்கார தேவி மற்றும் வராஹி தேவியை வணங்கி வந்தால் எதிரிகளின் தொல்லைகளில் இருந்து விடுபடலாம்.

3. நான் துலாம் லக்னம். 10ல் கேது இருந்தால் என்ன பலன்?

🌷 அனைவரையும் நேசிக்கக்கூடியவர்கள்.

🌷 தனவரவு தாராளமாக இருக்கும்.

🌷 தொழிலில் மேன்மை அடையக்கூடியவர்கள்.

🌷 நல்ல நெறிமுறைகளை கொண்டு வாழ்க்கையை வாழக்கூடியவர்கள்.

4. வெளவால் வீட்டிற்குள் வந்தால் நல்லதா? கெட்டதா?

🌷 வெளவால் வீட்டிற்குள் வருவது நல்லதல்ல. ஏனெனில், பாழடைந்த வீடுகள் மற்றும் கோவில்களில் வெளவால்கள் வாழும்.

🌷 வாயினால் புரளி பேசி சாபம் பெற்றவர்களே அடுத்த பிறவியில் வெளவால்களாக பிறக்கின்றனர்.

🌷 ஆகவே, வீடுகளில் வெளவால்கள் வசித்தால் வீடுகள் பாழடைய வாய்ப்புகள் உண்டு.

5. லக்னத்திலிருந்து நான்காம் வீட்டில் ராகு இருந்தால் என்ன பலன்?

🌷 போராட்டமான சூழல் உண்டாகும்.

🌷 தன்னுடைய சுகத்தை தானே கெடுத்து கொள்ளக்கூடியவர்கள்.

🌷 அடிக்கடி ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும்.


Share this valuable content with your friends