No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




லக்னத்திற்கு 7-ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

Sep 17, 2018   Ananthi   504    ஜோதிடர் பதில்கள் 

1. லக்னத்திற்கு 7-ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 எதிர்பார்த்த மண வாழ்க்கை அமையும்.

🌟 மனைவி மூலம் வசதி வாய்ப்பு ஏற்படும்.

🌟 பல திறமைகளை கொண்டவர்கள்.

2. என்னுடைய ஜாதகத்தில் லக்னத்திற்கு 8-ல் சூரியன், புதன், ராகு, செவ்வாய் இருக்கிறது. இதற்கு என்ன பலன்?

🌟 நீண்ட ஆயுளை உடையவர்.

🌟 எவருக்கும் பணிந்து போகாதவர்.

🌟 கல்வியில் நாட்டமில்லாமல் இருப்பார்கள்.

🌟 வீண் பழிச்சொல்லிற்கு ஆளாக நேரிடும்.

🌟 ஆரோக்கியத்தில் குறைபாடு உண்டாகும்.

3. என்னுடைய ஜாதகத்தில் லக்னத்திற்கு 9-ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 அதிகமாக கோபம் கொள்ளக்கூடியவர்கள்.

🌟 வழக்குகளில் வெற்றி பெறுபவர்கள்.

🌟 சிக்கனமாக வாழக்கூடியவர்கள்.

🌟 ஈகோவினால் பல பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும்.

4. என்னுடைய ஜாதகத்தில் லக்னத்திற்கு 10-ல் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌟 செல்வவளம் உடையவர்கள்.

🌟 நல்ல செயல்களை செய்யக்கூடியவர்கள்.

🌟 நண்பர்கள் மூலம் ஆதாயம் அடையக்கூடியவர்கள்.

5. கணவன், மனைவி ஒற்றுமைக்கு என்ன செய்ய வேண்டும்?

🌟 கணவன், மனைவி ஒற்றுமைக்கு உதாரணமாக திகழும் அர்த்தநாரீஸ்வரரை வணங்கி வருவதன் மூலம் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும்.

🌟 இல்லங்களில் அடங்கல் விடைமேல் அமர்ந்த ஐயனும் அம்பாளும் உள்ள படத்தை வைத்து வணங்க வேண்டும்.

🌟 திருச்சியில் உள்ள திருவானைக்காவல் அம்பிகையையும், இறைவனையும் வணங்கி வருவதால் கணவன், மனைவிக்குள் ஒற்றுமை மேலோங்கும்.


Share this valuable content with your friends