No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கடன் பிரச்சனைகள் நீங்க என்ன செய்ய வேண்டும்?

Sep 17, 2018   Ananthi   596    ஜோதிடர் பதில்கள் 

1. கடன் பிரச்சனைகள் நீங்க என்ன செய்ய வேண்டும்?

🌟 கடன் பிரச்சனைகள் நீங்க நவகிரகத்தில் உள்ள சுக்கிர தேவரை வெள்ளிக்கிழமை, சுக்கிர ஓரையில் வெண்தாமரை மலரைக் கொண்டு வணங்க வேண்டும்.

🌟 மேலும், மகாலட்சுமியை வணங்குவதால் சுபிட்சம் உண்டாகும்.

2. லக்னத்திலிருந்து 12ஆம் இடத்தில் சூரியன் இருந்தால் என்ன பலன்?

🌟 அதிகமான செலவுகளை செய்யக்கூடியவர்கள்.

🌟 சந்ததிக்குறைபாடுகள் இருக்கும்.

🌟 உழைத்து முன்னேறக்கூடியவர்கள்.

🌟 அடிக்கடி புனித யாத்திரை மேற்கொள்ளக்கூடியவர்கள்.

3. கன்னி ராசி, அஸ்த நட்சத்திரக்காரர்களும், கடகம் ராசி, பூசம் நட்சத்திரக்காரர்களும் திருமணம் செய்து கொள்ளலாமா?

🌟 கன்னி ராசியும், கடக ராசியும் திருமணம் செய்து கொள்ளலாம்.

🌟 மேலும், ஜாதக ரீதியான ஆய்வுகளை மேற்கொண்டு முடிவு செய்யவும்.

4. நான் சிம்ம ராசி. செவ்வாய் திசை நடந்தால் என்ன பலன்?

🌟 சகோதரர்களின் உறவு நிலை மேம்படும்.

🌟 சொத்துச் சேர்க்கை உண்டாகும்.

🌟 மனதில் புதிய தன்னம்பிக்கையும், தைரியமும் உண்டாகும்.

5. வீட்டில் செய்வினை இருப்பது தெரிந்தால் அது விலக என்ன செய்ய வேண்டும்?

🌟 ஸ்ரீ அமிர்த பலவல்லி தாயாரை ஞாயிறு அன்று வணங்கி வர சூன்யம் விலகும்.

🌟 குடும்பத்தோடு குலதெய்வ கோவிலுக்கு மூன்று பௌர்ணமிக்கு நேரில் சென்று, வழிபட்டு வந்தால் செய்வினையால் ஏற்பட்ட தோஷங்கள் விலகும்.


Share this valuable content with your friends