1. பிள்ளையை தத்துக்கொடுத்து தவிடுக்கு வாங்கும் பரிகாரம் எங்கு செய்ய வேண்டும்?
🌟 பிள்ளையை தத்துக்கொடுத்து தவிடுக்கு வாங்கும் பரிகாரத்தை குலதெய்வ கோவிலிலோ அல்லது சிவாலயங்களிலோ செய்வது நன்மையைத் தரும்.
2. மணமக்கள் இருவருக்கும் திருமணத்தின் போது பட்டம் கட்டுவது எதற்காக?
🌟 குடும்பம் தொடர்பாக எடுக்கும் முடிவுகள் இருவரையும் சார்ந்தது என்பதை குறிக்கவே திருமணத்தில் இருவருக்கும் பட்டம் கட்டப்படுகிறது.
3. மகர லக்னத்தில் குரு, சுக்கிரன், 4ல் செவ்வாய், 5ல் சந்திரன், 6ல் சனி - கேது, 11ல் புதன் - சூரியன், 12ல் ராகு, குரு திசை, சூரிய புத்தி நடந்தால் என்ன பலன்?
🌟 பயணங்களின் மூலம் அலைச்சலும், உடல் சோர்வும் உண்டாகும்.
🌟 பணியில் இடமாற்றங்கள் ஏற்படலாம்.
🌟 வாகனப் பயணங்களில் கவனமும், எச்சரிக்கையும் வேண்டும்.
🌟 உயர் அதிகாரிகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும்.
🌟 மனதில் தோன்றும் பலவிதமான குழப்பங்களால் சரியான முடிவை எடுக்க இயலாத நிலையில் இருப்பீர்கள்.
4. 30 வயதுக்குப்பின் ராகு, கேது பலன் எப்படி இருக்கும்?
🌟 ராகு - கேது அவர்கள் நின்ற வீட்டிற்கு ஏற்ப வயது வரம்புகள் இன்றி பலன் அளிக்கக்கூடியவர்கள்.
🌟 செய்த வினைக்கு ஏற்ப சுப மற்றும் அசுப பலன்களை காலம் தவறாமல் நிழல்போல் நின்று அளிக்கக்கூடியவர்கள்.
5. சுத்த ஜாதகருக்கு, ராகு - கேது ஜாதகரை திருமணம் செய்து வைக்கலாமா?
🌟 சுத்த ஜாதகருக்கு, ராகு - கேது ஜாதகரை திருமணம் செய்து வைக்கக்கூடாது.
6. சுக்கிரன் எந்த இடத்தில் இருந்தால் சிறப்பான பலன்களை அளிப்பார்?
🌟 சுக்கிரன் நின்ற இடம் மற்றும் லக்னத்திற்கு ஏற்ப பலன்களை அளிக்கக்கூடியவர்.
🌟 1 - 2 - 4 - 5 - 9 - 11 போன்ற இடங்களில் சிறப்பான பலன்களை லக்னத்திற்கு ஏற்ப கொடுக்க வல்லவர்.
7. முல்லை கொடி வளர்த்தால் நல்லதா? வாஸ்துப்படி எந்த இடத்தில் முல்லை கொடியை வைக்க வேண்டும்?
🌟 முல்லை கொடி வளர்ப்பது நல்லது.
🌟 வீட்டின் தெற்கு மற்றும் மேற்கு திசைகளில் உயரம் அதிகமான மரங்களையும், கிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் வீட்டின் மதில் சுவர்களை விட குறைவான உயரம் கொண்ட செடிகளையும் வளர்க்க வேண்டும்.