No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




விநாயகர் எப்போது வருவார்?

Sep 11, 2018   Ananthi   506    ஆன்மிகம் 

எந்த சுபகாரியமாக இருந்தாலும் விநாயகரை பிரார்த்தித்து சங்கல்பம் செய்து கொண்ட பின்னரே மக்கள் எதனையும் செய்ய ஆரம்பிப்பார்கள். அதனாலேயே நாம் பிள்ளையார் சுழி போட்டு எழுதும் வழக்கத்தை கையாளுகிறோம்.

🌟 மக்கள் கடைபிடிக்கும் விரதங்களில் விநாயகர் சதுர்த்தி விரதம் முக்கியமான ஒன்றாகும். முழுமுதற்கடவுளும், ஈசனின் மகனுமான விநாயகர் அவதரித்த தினமான விநாயகர் சதுர்த்தி விழாவானது ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதச் சுக்கிலபட்ச சதுர்த்தித் திதியன்று கொண்டாடப்படுகின்றது. அன்றைய தினம் உலகெங்கிலும் உள்ள மக்கள் பயபக்தியோடு விநாயகரை வழிபட்டு, உண்ணா நோன்பிருந்து, தான தர்மங்கள் செய்து கொண்டாடுகின்றனர்.

விநாயகர் எப்போது வருவார்?

🌟 பிடித்து வைத்தால் பிள்ளையார்... மஞ்சளோ, மாட்டுச்சாணமோ ஒரு இலையில் பிடித்து வைத்தால் அவர் விநாயகராக அருள் தருவார். தும்பிக்கை வைத்திருக்கும் அந்த தெய்வத்தை நாம் நம்பிக்கையோடு வழிபட்டால் இன்பங்கள் அனைத்தும் இல்லம் வந்து சேரும். துன்பங்கள் தூர விலகி ஓடும்.

வரலாறு :

🌟 இவ்விழா மராட்டிய மன்னன் சத்திரபதி சிவாஜி ஆட்சிக் காலத்திலேயே நடத்தப்பட்டிருக்கிறது. அது அந்த நாட்டின் தேசிய விழாவாகவும், கலாச்சார விழாவாகவும் கொண்டாடப்பட்டிருக்கிறது. பின்னர் பீஷ்வாக்கள் ஆட்சிக் காலத்திலும் இந்த விநாயகர் வழிபாடு என்பது தொடர்ந்து நடந்திருக்கிறது. பிறகு அது மகாராஷ்டிரா மாநில மக்களின் குடும்ப விழாவாக மாறிவிட்டது. மக்கள் தங்கள் வீடுகளிலும் பிள்ளையாரை வைத்து வணங்க ஆரம்பித்தார்கள்.

🌟 சுதந்திர போராட்ட தியாகி பாலகங்காதர திலகர் இதை வருடந்தோறும் பொதுமக்கள் இணைந்து நடத்தும் திருவிழாவாக மாற்றினார். அதன் பிறகு தான் மகாராஷ்டிரா மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தியன்று, வசதி படைத்தவர்கள் எல்லாம் தங்கள் வசதிக்கேற்ப உயரமான விநாயகர் சிலைகளை செய்து, தங்கள் பகுதி மக்கள் சேர்ந்து கொண்டாடும் விழாவாக நடத்தினர். ஏழை மக்களுக்கு சில்லறை காசுகளையும், ரூபாய் நோட்டுகளையும் இப்பண்டிகையில் வழங்கினர். வெகுகாலத்திற்கு பின்னரே தமிழகத்தில் இவ்விழா அறிமுகப்படுத்தப்பட்டு கொண்டாடப்பட்டது.

🌟 அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகரும், கணங்களுக்கெல்லாம் அதிபதியும், விக்னங்கள் யாவற்றையும் நீக்கி பக்தர்கள் வேண்டும் வரங்களை வாரி வழங்கும் வள்ளலுமாகிய விநாயக பெருமானை விநாயகர் சதுர்த்தி அன்று நோன்பிருந்து வணங்கி பேரருள் பெறுவோம்.


Share this valuable content with your friends


Tags

பாம்பு என்மேல் படுத்திருப்பது போல் கனவு கண்டால் பட்டாசுகளை எப்படி... எங்கே வெடிக்க வேண்டும்? தினசரி ராசிபலன்கள் (21.06.2020) kkovil பசு விரட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பதுமுகன் தேவர்கள் பின்வாங்குதல் 19.10.2020 rasipalan in PDF Format!! ஜுலை 11 வியாழக்கிழமையின் சிறப்புகள் தெளிவு பிறக்கும் அம்மன் கனவில் வந்தால் என்ன பலன்? சரபேஸ்வரருக்கு செய்யும் அபிஷேகத்தை பார்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? அக்டோபர் 21 வீட்டில் High ceiling வரலாமா? ஆயில்யம் நட்சத்திரம் உடைய ஆணுக்கும் 18.03.2019 Rasipalan in pdf format!! இந்திய குத்துச்சண்டை வீரர் மகளுக்கும் ஒரே ராசி நான் உடற்பயிற்சி செய்யும் இடத்தில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?