No Image
 Tue, Nov 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வலது கண் துடித்துக்கொண்டே இருப்பது. இது நல்லதா? கெட்டதா?

Sep 11, 2018   Ananthi   613    ஜோதிடர் பதில்கள் 

1. இடது கை முட்டியில் பல்லி விழுந்தால் என்ன பலன்?

🌟 இடது கை முட்டியில் பல்லி விழுந்தால் கீர்த்தி உண்டாகும்.

2. மார்கழி மாதம் வீடு குடிப்போகலாமா?

🌟 மார்கழி மாதம் வீடு குடிப்போகுவதை காட்டிலும் தை அல்லது கார்த்திகை மாதம் செல்வது சிறப்பானதாகும்.

3. வலது கண் துடித்துக்கொண்டே இருப்பது. இது நல்லதா? கெட்டதா?

🌟 வலது கண் துடித்துக்கொண்டே இருக்கிறது என்பது சுபமானது அல்ல.

🌟 உடல் நலக்குறைபாடுகள் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.

4. ஜாதகத்தை பார்த்துதான் நாய் வளர்க்க வேண்டுமா?

🌟 ஜாதக ரீதியாகவும், அவரவர் தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையிலும் நாய்களை வளர்க்கலாம்.

5. எனக்கு துலாம் ராசி, விசாகம் நட்சத்திரம், துலாம் லக்னம். நான் எந்த தொழில் செய்தால் நல்லது?

🌟 பத்திரிக்கைத்துறை சார்ந்த பணிகள்.

🌟 உணவு சார்ந்த தொழில்கள்.

🌟 பயணங்கள் தொடர்பான பணிகள்.

🌟 பால் தொடர்பான வியாபாரங்கள் செய்தல்.

🌟 நீர் நிலைகள் சார்ந்த தொழில்கள் போன்றவற்றை செய்யலாம்.

6. தனுசு ராசி, தனுசு லக்னம், மூலம் நட்சத்திரம். நான் என்ன தொழில் செய்யலாம்?

🌟 ரசாயனம் தொடர்பான தொழில்கள்.

🌟 கட்டிடம் சம்பந்தமான பொருட்களை விற்பனை செய்தல்.

🌟 நாட்டு மருந்து தொடர்பான தொழில்கள்.

🌟 மரம் சம்பந்தமான தொழில்கள் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.


Share this valuable content with your friends