No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பெண்களுக்கு இடது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் நல்லதா? கெட்டதா?

Sep 10, 2018   Ananthi   558    ஜோதிடர் பதில்கள் 

1. நான் தனுசு ராசி, சிம்ம லக்னம். எந்த ராசிக்கல் மோதிரம் அணிய வேண்டும்?

🌟 சிம்ம லக்னக்காரர்கள் மாணிக்கம் பதித்த மோதிரத்தை அணியலாம்.

🌟 மேலும், ராசிக்கற்களை அணியும்போது தகுந்த ஆலோசனைகளை பெற்று அணியவும்.

2. வலது பக்க இடுப்பில் மச்சம் இருந்தால் என்ன பலன்?

🌟 ஆன்மீக எண்ணங்கள் உடையவர்கள்.

🌟 கணவன் மீது அன்பும், பற்றும் கொண்டவர்கள்.

🌟 புத்திரர்களால் நன்மை உண்டாகும்.

🌟 அனைவராலும் விரும்பக்கூடியவர்கள்.

3. 7ல் செவ்வாய் இருந்தால் தோஷமா?

🌟 7ல் செவ்வாய் இருந்தால் தோஷமாகும்.

4. கும்ப லக்னக்காரர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 எவருக்கும் பயமில்லாமல் நியாய தர்மங்களை எடுத்துரைக்கும் திறன் உடையவர்கள்.

🌟 மனதை ஒரே நிலையில் வைத்திருக்கக்கூடியவர்கள்.

🌟 பரந்த எண்ணம் உடையவர்கள்.

🌟 தான, தர்மத்தில் அதிக ஈடுபாடு உடையவர்கள்.

5. உச்ச குரு வர்கோத்தமம் பெற்றால் என்ன பலன்?

🌟 குரு வர்கோத்தமம் பெற்றால் ஆன்மீக சிந்தனைகள் மேலோங்கும்.

🌟 வேறுபாடின்றி அனைவருக்கும் உதவுவார்கள்.

🌟 அறிவு நுட்பம் மற்றும் கேள்வி ஞானத்தில் சிறந்து விளங்கக்கூடியவர்கள்.

6. பெண்களுக்கு இடது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் நல்லதா? கெட்டதா?

🌟 பெண்களுக்கு இடது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் நல்லது.



Share this valuable content with your friends