No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




நெருப்பை கனவில் கண்டால் என்ன பலன்?

Sep 08, 2018   Ananthi   3476    கனவு பலன்கள் 

1. நெருப்பை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 நெருப்பை கனவில் கண்டால் மாற்றத்திற்கான வாய்ப்புகளும், சூழலும் அமையும்.

2. கழுத்தில் போட்டிருக்கும் கருகமணி அறுந்து விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கழுத்தில் போட்டிருக்கும் கருகமணி அறுந்து விழுவது போல் கனவு கண்டால் புதிய வாய்ப்புகளால் உங்களின் திறமைகள் வெளிப்படுவதற்கான சூழல் உண்டாகும்.

3. வெள்ளைக் குதிரையில் வலம் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வெள்ளைக் குதிரையில் வலம் வருவது போல் கனவு கண்டால் உங்களின் திறமைகள் வெளிப்பட்டு அனைவராலும் பாராட்டப்படுவதற்கான சூழல் அமையும்.

4. என் தந்தை, என் மகனின் மண் உண்டியலை உடைப்பது போல் கனவு வந்தது. இதற்கு என்ன பலன்?

🌟 உங்களின் தந்தை உங்கள் மகனின் மண் உண்டியலை உடைப்பது போல் கனவு வந்தால் குடும்பத்தில் சில பொருளாதார நெருக்கடிகள் உண்டாவதற்கான சூழல் அமையும்.

5. அதிகாலையில் ஒரு பெண்ணை திருமணம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 ஒரு பெண்ணை திருமணம் செய்வது போல் கனவு கண்டால் எதிர்பாராத செலவுகள் உண்டாகும்.

6. புதுச்சேலையை பணம் கொடுத்து வாங்குவது போலவும், பாம்பாட்டி மகுடியை ஊதி பாம்புகளை கையில் பிடித்து வருவது போலவும் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் செயல்களால் சில எதிர்ப்புகள் உண்டாகும்.

🌟 எனவே செயல்களின் தன்மை அறிந்து அதற்கு தகுந்தாற்போல் செயல்படவும்.


Share this valuable content with your friends