No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




அடிக்கடி விபத்து ஏற்படுகிறதா? அதற்கு இதுதான் காரணமா?

Sep 06, 2018   Ananthi   713    வாஸ்து 

🏠 மனிதன் தன்னுடைய பாதுகாப்பிற்கு பல வழிமுறைகளை கையாண்டு வருகிறான். ஆனால், அதையும் தாண்டி இன்றைய உலகில் விபத்து என்பது இயல்பாகவே எல்லா இடங்களிலும், எல்லோருக்கும் நடக்கக்கூடியதாக மாறிவிட்டது.

🏠 என்னுடைய அனுபவத்தில் ஒருவருக்கு விபத்து ஏற்படுகிறது என்றால், அவர்களின் வீட்டின் அமைப்பில் எந்த பகுதியில் தவறு இருக்கிறதோ அதற்கேற்ப அவர்களுக்கு விபத்து ஏற்படுகிறது என்று உறுதிபட கூற முடியும்.


வடகிழக்கு பகுதியில் :

🏠 ஒருவரின் வீட்டின் அமைப்பில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் தவறான அமைப்புகள் இருக்குமானால் அந்த வீட்டில் வசிக்கக்கூடிய ஆண்களுக்கு அதிகப்படியாக விபத்து ஏற்படும். அதிலும் பெரும்பாலும் தலை, கண், காது, வாய், தாடை, கழுத்து போன்ற பகுதிகளில் மட்டுமே அதிக பாதிப்புகளை தரக்கூடிய விபத்துகள் ஏற்படும். சில நேரங்களில் விபத்துகள் மனநலம் தொடர்பான பிரச்சனைகளை உருவாக்கி விடுகிறது.

தென்கிழக்கு பகுதியில் :

🏠 ஒருவரின் வீட்டின் மொத்த அமைப்பில் தெற்கு மற்றும் கிழக்கு பகுதியில் தவறான அமைப்புகள் இருக்குமானால் அந்த வீட்டில் உள்ள பெண்களுக்கு அதிகப்படியாக விபத்து ஏற்படக்கூடும். அதில் உடல்ரீதியாக பாதிக்கப்படக்கூடிய இடங்கள் வயிறு, மார்பகங்கள், நுரையீரல், நரம்பு மண்டலங்கள், சிறுகுடல், பெருங்குடல்.

தென்மேற்கு பகுதியில் :

🏠 ஒருவரின் வீட்டின் மொத்த அமைப்பில் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் தவறான அமைப்பு வரும்போது ஏற்படும் விபத்துகள் மிகவும் ஆபத்தானது. ஆண், பெண் இருவருமே இங்கு பாதிக்கப்படக்கூடும். இடுப்பு பகுதி, முதுகு தண்டுவடம், கர்ப்பப்பை, வலது கை, வலது கால், மூளை மற்றும் இரத்த நாளங்கள், இதயம் போன்ற பகுதியில் விபத்துகள் ஏற்பட்டு பாதிக்கப்படக்கூடும், மற்ற இடங்களை காட்டிலும் ஒரு வீட்டிற்கு பாதுகாப்பான இடம் என்பதே இந்த தென்மேற்கு பகுதியாக நான் கருதுகிறேன்.

வடமேற்கு பகுதியில் :

🏠 ஒருவரின் மொத்த வீட்டின் அமைப்பில் வடக்கு மற்றும் மேற்கு பகுதியில் தவறான அமைப்புகள் வரும்போது பெரும்பாலும் ஆண், பெண் இருவருக்குமே விபத்து ஏற்படுகிறது. இதில் தொடைபப்குதி, கால் பகுதி, பாதம் போன்ற பகுதியில் மட்டுமே விபத்து ஏற்படுகிறது.

🏠 ஒருவரின் வீட்டின் அமைப்பில் மாற்றம் ஏற்படும்போது அவரின் உடலில் கண்டிப்பாக மாற்றம் ஏற்படுகிறது. அதேபோல் எண்ணத்திலும் மாற்றம் ஏற்படுகிறது.


Share this valuable content with your friends