No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ரிஷப ராசியில் சுக்கிரன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Sep 04, 2018   Ananthi   593    நவ கிரகங்கள் 

🌟 ரிஷப ராசியின் அதிபதி சுக்கிர பகவான் ஆவார். சுக்கிரன் தனது வீட்டில் ஆட்சி பெற்று பலம் பெறுவதால் செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம்.

🌟 கம்பீரமான தோற்றத்தையும், அதே சமயம் அதிகாரம் மிகுந்த பேச்சுகளையும் உடையவர்கள்.

🌟 தான் எண்ணியதை நிறைவேற்றும் செயல்திறன் உடையவர்கள்.

🌟 மனதில் என்ன நினைக்கின்றார்கள் என்பதனை அறிந்து கொள்வது சற்று கடினமான விஷயமாகும்.

🌟 சுகபோக வாழ்க்கை வாழக்கூடியவர்கள்.

🌟 காலம் பார்த்து தமக்கு செய்தவையை திருப்பி செய்யக்கூடியவர்கள்.

🌟 வாழும் வீட்டினை கலை ரசனையோடு அலங்கரித்துக் கொள்ளக்கூடியவர்கள்.

🌟 மற்றவர்களை கவரும் விதமான செயல்களை செய்யக்கூடியவர்கள். எது செய்தாலும் அதை விளம்பரப்படுத்திக் கொள்ளக்கூடியவர்கள்.

🌟 எந்நிலையிலும் மகிழ்ச்சியாகவும், சுகமாகவும் வாழ விரும்பக்கூடியவர்கள். 🌟 கற்பனைத் திறன் கொண்டவர்கள்.

மனைவியின் மீது அன்பும், பாசமும் உடையவர்கள்.

🌟 உடல்நலப் பாதிப்புகள் அவ்வப்போது ஏற்பட்டு கொண்டே இருக்கும். சிலருக்கு கண் பார்வை சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

🌟 ஆடம்பரமான செலவுகளால் கடன்களும், மற்றவர்கள் தன்னை புகழ வேண்டும் என்பதற்காக தேவையில்லாத பல செலவுகளை செய்து சிக்கலில் மாட்டிக் கொள்ளக்கூடியவர்கள்.

🌟 பங்காளிகளுடன் சீரான உறவு நிலை இல்லாமையால் அடிக்கடி வம்பு, வழக்கு ஆகியவற்றில் மாட்டிக் கொள்ளக்கூடியவர்கள்.

🌟 ஒரு நிலையற்ற மனநிலையை உடையவர்கள். சரியான முடிவை எடுக்க முடியாமல் குழப்பத்துடனே இருப்பார்கள்.


Share this valuable content with your friends