No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




விநாயகர் பற்றிய சில அற்புத தகவல்கள்!!

Sep 04, 2018   Ananthi   649    ஆன்மிகம் 

முழுமுதற் கடவுள், மூலப்பொருளோன் என்று சொல்லி அனைவரும் வணங்குவது விநாயகரையே. எந்த செயல்களை செய்யும் முன்பும் பிள்ளையார் சுழி போட்டு தான் ஆரம்பிக்கிறோம். யார் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து அருள் புரிவார். அதனால் தான் அவர் எல்லோருக்கும் பொதுவாகவும், சுலபமாக வழிபடும் வகையிலும் இருக்கிறார்.

🌟 கணபதியை வணங்கினால் காரியத்தடைகள் யாவும் நீங்கும். விக்ன விநாயகனை வணங்க வினை யாவும் நெருங்காது. அப்படி அனைவராலும் போற்றப்படும் விக்ன விநாயகனை பற்றிய சில தகவல்களை தெரிந்துக்கொள்வோம்.

🌟 அரை அடி உயர விநாயகர் மருதமலை முருகன் கோவில் அடிவாரத்தில் காட்சி தருகிறார். இவர் சுயம்புவாகத் தோன்றியதால் தான்தோன்றி விநாயகர் என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார்.

🌟 கண் பார்வை கோளாறு உடையவர்கள், சுவாமிமலை முருகன் கோவிலில் உள்ள நேத்ர கணபதி எனப்படும் கண்கொடுக்கும் கணபதியை வணங்கி வந்தால் கண் நோய் தீர்ந்து விடும்.

🌟 ஜீரஹர விநாயகர் என்ற திருநாமத்துடன் கணபதி கையில் குடையுடனும், தும்பிக்கையில் அமிர்த கலசத்துடனும் கும்பகோணம் ஸ்ரீ நாகேஸ்வரசுவாமி கோவிலில் காட்சி தருகிறார்.

🌟 மகாராஷ்டிராவில் உள்ள மோர்காம் என்னும் ஊரில் மயில் மீது விநாயகர் அமர்ந்திருக்கும் காட்சியை காணலாம். புதுவை அண்ணாசாலையில் புற்று மண்ணில் சுயம்புவாக தோன்றிய இந்த பிள்ளையார் அக்கா சுவாமிகள் பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார்.

🌟 விநாயகப் பெருமான் பெண் வடிவத்தில் சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலயப் பெருமாள் கோவிலில் காட்சி தருகிறார். இவருக்கு புடவைதான் அணிவிக்கப்படுகிறது. கணேசாயினி என்ற திருநாமத்துடன் இவர் அருள் தருகிறார்.

🌟 விநாயகருக்கு விநாயகி, வைநாயகி, வின்கேஸ்வரி, கணேசினி, கணேஸ்வரி, ஐங்கினி எனும் பெண்பால் சிறப்பு பெயர்களும் உண்டு.

ஐந்து கரத்தனை யானை முகத்தனை

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன்றனை ஞானக்கொழுந்தினைப்

புந்தியில் வைத்து அடிபோற்றுகின்றேனே.


Share this valuable content with your friends