No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மழையில் நனைந்து விளையாடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Sep 03, 2018   Ananthi   8729    கனவு பலன்கள் 

1. மழையில் நனைந்து விளையாடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மழையில் நனைந்து விளையாடுவது போல் கனவு கண்டால் மனதில் இருந்து வந்த சில சங்கடங்களுக்கு உங்களிடம் அறிமுகம் இல்லாத நபர்கள் மற்றும் நண்பர்களின் உதவியோடு தீர்வு காண்பீர்கள் என்பதனை உணர்த்துகிறது.

2. மலம் கழிக்க போவது போல் அடிக்கடி கனவு வந்தால் என்ன பலன்?

🌟 மலத்தை கனவில் கண்டால் சுபச் செய்திகளால் சுப விரயங்கள் உண்டாகும் என்பதனை உணர்த்துகிறது.

3. மூன்று குடம் தண்ணீர் எடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நிறைகுடத்தை கனவில் கண்டால் செல்வாக்கும், சுபிட்சமும் உண்டாகும்.

4. யானை பிளிறிக்கொண்டே எனது வீட்டுக்காரர் அருகில் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனக்கசப்புகளால் பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

5. எங்கள் குலதெய்வ சன்னதியில் பூசாரி இரண்டு எலுமிச்சைப்பழம் தந்து கவலைப்படாதே என்று கூறுவது போல் கனவு வந்தால் என்ன பலன்?

🌟 குலதெய்வ சன்னதியில் பூசாரி இரண்டு எலுமிச்சைப்பழம் தந்து கவலைப்படாதே என்று கூறுவது போல் கனவு வந்தால் தடைகளால் நின்ற செயல்கள் விரைவில் நடைபெறும்.


Share this valuable content with your friends