No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




திருமணத்திற்கு பத்திரிக்கை வைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Sep 03, 2018   Ananthi   10292    கனவு பலன்கள் 

1. திருமணத்திற்கு பத்திரிக்கை வைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 திருமணத்திற்கு பத்திரிக்கை வைப்பது போல் கனவு கண்டால் எதிர்பார்த்த செயல் முடிவடைய சில காலதாமதமும், அதற்கான முயற்சி அதிகம் இருந்தால் மட்டுமே வெற்றியடையவும் முடியும் என்பதை உணர்த்துகிறது.

2. கனவில் கதிர் அறுக்கும் அரிவாள், கூரையின் மீது சொருகி உள்ளதை பார்த்தேன். இதற்கு என்ன பலன்?

🌟 அரிவாளை கனவில் கண்டால் எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் காலதாமதமாகும் என்பதை உணர்த்துகிறது.

3. அடிக்கடி பல் விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 அடிக்கடி பல் விழுவது போல் கனவு கண்டால் எடுத்துச்செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும்.

🌟 யாரிடம் பேசினாலும் பேச்சில் கவனம் வேண்டும்.

4. என்னை 3 திருநங்கைகள் ஆசிர்வதிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 திருநங்கைகள் ஆசிர்வதிப்பது போல் கனவு கண்டால் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.

5. ஒரு பெண் கர்ப்பமாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 ஒரு பெண் கர்ப்பமாக இருப்பது போல் கனவு கண்டால் பதவி உயர்வு மற்றும் சுபச் செயல்கள் நடைபெறும்.

6. பாம்பு என்னை சுற்றி கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பாம்பு உங்களை சுற்றி கொள்வது போல் கனவு கண்டால் தேவையில்லாத பிரச்சனைகளில் தலையிட்டு நீங்களே இன்னல்களை தேடிக்கொள்வதை உணர்த்துகிறது.


Share this valuable content with your friends